சனி, 2 ஜூலை, 2016

MANPASANTH HINDI SONGS ! மனசுக்குப் பிடிச்ச ஹிந்திப் பாடல்கள்.


 1. என்னைக்கு உன்னப் பார்த்தேனோ அன்னிக்கே அவுட்டு.. இந்தப் பாட்டு சொல்றது அதுதாங்க. :)

எந்த நாள்  உன்னுடன் அறிமுகம் நிகழ்ந்ததோ
அன்னிலேருந்து என் இதயம் என்கிட்ட இல்ல.
யாருக்கும் தெரியாது இந்த மழை எப்படிப் பொழிந்ததுன்னு
என் இதயம் தாகத்தால தவிக்குது  என் இதயம் தனிச்சிருக்கு..

முழுசா கேளுங்க. அற்புதம்.



2. என் கனவிலும் நீ
என் மூச்சிலும் நீ
என் மனமெங்கும் நீ
என் இதய ராகத்திலும் நீ

இரவு பகல் காலை மாலை
எல்லா நேரமும் உன் பெயர்தான் என் நினைவில்.



3. மிக மிகப் பிடித்த படமும் பாடல் காட்சியும்

ஐஸ்வர்யா ராய் நடித்த மிக அழகான படம். தன் தங்கைகளுடன் ஆடும் காட்சி. யோகா செய்வது போல் வளையும் நளினமான உடல் அசைவுகள். பிரமிக்க வைப்பார் ஐஸ். வினோத் கன்னாவின் மகன் அக்‌ஷயி கன்னா ஜோடியாக நடித்திருப்பார். என்கிட்ட உண்மை அன்பு இருக்கு , அது ஜெயிக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அக்‌ஷயி கன்னா சொல்வது அழகு. !

மழைப் பாடல்கள் என் ஃபேவரைட். :)




4. குறும்பு கூத்தாடும் கண்களுடன் அழகாய் நடனமாடும் அனில் கபூரின் பெண் சோனம் கபூரும், லேசான முரட்டு டெல்லி சாந்தினி சௌக்கின் இளைஞனாய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் நடித்தது. படம் டெல்லி 6.மோஹித் சௌகானின் குரலும் ஏ ஆர் ரஹ்மான் இசையும் அட அட அடா ! மசாக்கலி மசாக்கலி என்று மனதைக் கொள்ளை கொண்ட பாடலும் புறாக்களும். டெல்லியில் இருந்ததாலோ என்னவோ பஞ்சாபி பொண்ணுங்கள ரொம்பப் பிடிக்குது. !



5. சொல்லப் போனா ரொமாண்டிக் சாங்க்ஸ்னா நான் சொத்தையே எழுதி வைச்சிடுவேன். அவ்ளோ க்ரேஸ் :)இது ராஜா ராணி கத வேறையா. நெம்பப் பிடிக்கும். அதுவும் அக்பரும் ஜோதாவுமில்ல. என் உள்ளங்கவர் கள்வர்கள். :) மெல்ல மெல்ல ஜோதா அக்பரின்பால் காதல் வயப்படும் பாட்டு. மன்மோகனா & முழுமதி பிடிக்கும் என்றாலும் இது ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

அருகருகே இருக்கிறோம்
ஆனால் அருகே இல்லை..
இதயத்தில் அவளது எண்ணம்தவிர வேறில்லை.



6. ஜுகல் ஹன்ஸ்ராஜ், மயூரி ஆகியோரோட அழக விட உதித்தின் குரலும் காட்சியமைப்பும் ரொம்பப் பிடிக்கும். ஹீரோ ஹீரோயின் பாடும் தனிப்பாடல்கள் என் ஃபேவரைட். அத டூயட்டுங்கிறாங்க.:)ஆனா இது தன்வயமிழந்து காதலால் தன்வயப்படல்.

வீட்டைவிட்டு வெளியில் வந்து
சிறிது தூரம் சென்றால் சாலையில் அவள் வீடு வரும்
பார்க்கப் பதுமைதான் பேசாமலே பித்தாக்குகிறாள்.
ஜன்னல்வழி காணும் தரிசனத்தில் கூட .




7. இனி வருபவை பஞ்சாபி இளைஞர்கள் பாடும் பாடல். பனி படர்ந்த நிலத்தில் வீட்டை விட்டுப் பிரிந்து ஒலிக்கும் இக்குரல்களை மறக்க முடியுமா. மனதின் ஏக்கம் ஒலிக்க கைப்பறையைத் தட்டித் தட்டிப் பாடும் பாடல். சந்திர சூடன் சிங் அருமையான முகபாவனைகளுடன் ஆடி இருப்பார்.



8. இதுவும் அதே மச்சீஸ் படம்.

சோட் ஆயே ஹம் வோ கலியாங்

விட்டு விட்டு வந்தோம் அந்தத் தெருக்களை

என ஆரம்பிக்கும் மெல்லிய வருத்தம் கலந்த பாடல்



9. ரங்க் தே பஸந்தி . மறக்கமுடியாத படம். விடுதலைப் போராட்டத்தை நவீன இளைஞர்கள் கொண்டு மறு சுதந்திரத்தை நிகழ்த்திய படம்.

அமீர் கான், சோஹா அலி கான், சித்தார்த், அதுல் குல்கர்னிஆகியோரோடு ஆலீஸும் ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசையும்  கைகோர்த்த படம்.



10. அதே படத்தில் சித்தார்த் லஞ்ச லாவண்யத்தில் அமைச்சரான தனது தந்தையின் இறப்புக்குக் காரணமாயிருப்பார். அந்த வருத்தத்தோடு வந்து நண்பர்களைச் சந்தித்து அனைவரும் ஆசுவாசமாகும் பாடல். இதில் ஒவ்வொருவரின் அணைப்பும் புன்னகையும் மனதை இலகுவாக்கும்.



12. 1942 காதல் கதை

எதுவும் சொல்லாதே என்று மனிஷா கொய்ராலாவின் உதடுகளைத் தனது உதடுகளால் அனில் கபூர் மூடும் பாடல்.  :) அட லிப் லாக். :)



ஓகே எனக்குப் பிடிச்ச ஹிந்திப் பாடல்கள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கேன். உங்களுக்குப் பிடிச்ச பாடல்களையும் பகிருங்க.

5 கருத்துகள்:

  1. பழைய ஹிந்திப் பாடல்களோ என்று நினைத்து வந்தேன். கர் ஸே பாடல் (பாப்பா கெஹத்தே ஹேய்ன்) இடம் பெற்ற படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். குறிப்பாக பியாருமே ஹோத்தா ஏ க்யா ஜாதூ பாடல். கர்நாடக இசை ராகம் ஒன்றின் அடிப்படையில் அமைந்தது இந்தப் பாடல்.

    1942 A Love Story பாடல்களும் அப்படியே... அது மேதை ஆர் டி பர்மனின் கடைசிப் படம்.

    ரங் தே பாஸந்தி மிகவும் பிடித்த படம். அதில் ஒரே ஒரு உற்சாகப பாடல் மட்டும் பிடிக்கும். "வஸ்தி கா பாட்சாலா..."

    பர்தேசி, குச் குச் ஹோத்தா ஹை, தீவானா, தீவாங்கி போன்ற இன்னும் சில படங்களில் பாடல்களும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. उस ज्माने से लेके आज तक
    मुहब्ब्त तो वैसा ही है।
    लेकिन फ़रसाने के तरीके बद्ल चुके है।


    सुब्बु तात्ता।

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல்கள். அனைத்தும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் சூப்பர் ஸ்ரீராம் !

    அதே போல சூப்பரோ சூப்பர் சுப்பு சார் !

    அஹா நன்றி வெங்கட் சகோ !

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)