செவ்வாய், 12 ஜூலை, 2016

சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.


சிவப்பு ஓலைக் கொட்டான்கள்.

சிவப்புஓலைக் கொட்டான்கள் அலங்காரக் கொட்டான்கள்.  மற்ற அலங்காரக் கொட்டான்களிலும்  வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு பூ, பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை வைத்துக் கொடுப்பார்கள்.


திருமணங்களில் முன்கால முறைச்சிட்டைகளில் இந்த சிவப்பு ஓலைக்கொட்டான்கள்தான் எல்லா இடத்திலும் சீராக மாற்றி மாற்றி வழங்கப்பட்டிருக்கும். இப்போது ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளோ அல்லது சில்வர் வாளிகளோ சட்டிகளோ தருகின்றார்கள்.

அதாவது ஒரு விசேஷம் என்றால் ( திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல், பிள்ளை பிறந்ததுக்கு, சமைஞ்சதுக்கு மற்றுமுள்ள அனுவல்களுக்கு ) இன்று எவர்சில்வர் வாளி மற்றும் சட்டிகள் கொடுத்து அதில் வகைப்பழங்கள், தேங்காய் வெற்றிலை பாக்கு  முறைப்பணம் எல்லாம் வைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடத்துக்கு முன் எல்லாம் சிவப்பு ஓலைக் கொட்டான்தான் இந்தப் பரிமாற்றத்துக்கு எல்லாம் பயன்பட்டிருக்கின்றது. எனவே இதுக்கு கிராக்கி அதிகம். :)

சிவப்போலைக் கொட்டான்களில் திருகையை வைக்க முடியாது. மாவு திரிக்கும் திருகையை அகலக் கொட்டான்களில் வைத்து உப்புமா போன்றவை திரிப்பார்கள். அவை பெரிய கொட்டான்கள்.

சாதா வெள்ளைக் கொட்டான்களில் பொங்கலன்று அரிசி களைந்து அரித்து வைப்பார்கள் வடிகட்டி போல ஒரு பாத்திரத்தின் மேல் சாய்வாக வைத்து அரிசியை அரித்து  நீர் வடிய வைப்பார்கள்.

காய்கறிகள் பழம் வைக்க தனித்தனி கொட்டான்கள் உண்டு. அதே போல் துணி வைக்கவும் கூட. 

ஓலையை ஊறவைத்துக் கீறி சாயத்தில் நனைத்து முடையும் இத்தொழிலை பர்மியர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கக்கூடும் செட்டிநாட்டார். ஏனெனில் செய்கோன் ரெங்கோனுக்கு கொண்டுவிக்கச் சென்ற செட்டியார்கள் இம்மாதிரிப் பொருட்களை வாங்கி வந்திருக்கலாம். அதைப் பார்த்தும் அங்கே சென்ற ஆச்சிகள் அதைப் பார்த்தும் ஓலைக்கொட்டான்கள் முடையக் கற்றுக் கொண்டிருக்கலாம்.

நீலச் சாயமும் சிவப்புச் சாயமும் பச்சை சாயமும் தோய்த்துக் கொட்டான்கள் முடையப்பட்டிருக்கின்றன. பனை ஓலையைக் கீறியும் மெல்லிய பிரம்பைக் கீறியும் கொட்டான்கள் முடையப்பட்டிருக்கின்றன.

கொட்டான்களில் விளிம்பு உருட்டி மடித்துத் தைத்திருப்பதும் பட்டியை அழகாக ஆக்கியிருப்பதும் சிறப்பு. சில கொட்டான்களில் பாசி வேலைப்பாடும்., சில கொட்டான்களில் எம்பிராய்டரி வேலைப்பாடும், சிலவற்றில் க்ரோஷா வேலைப்பாடும் செய்திருக்கும்.

சுதந்திரக் கொடி, பூக்கள், விலங்குகள் ஆகியன டிசைன் கொண்டு முடையப்பட்டிருக்கும். சிவப்பும் நீலமும் கலந்த டிசைன் கொட்டான்கள். ,சிவப்புப் பட்டி முடையப்பட்டிருக்கும் கொட்டான்கள்., உள்ளும் புறமும் வேறு வேறு டிசைன்களில் கொட்டான்கள் என வெரைட்டியாகக் கொட்டான்களை முடைந்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.சில டபுள் சைடட். உள்ளே ப்ளெயின் வெளியே கலர் ஓலைகள் கொண்டது. சிலது டபுள் சைடிலும் டபுள் டிசைன் கொண்டது. ஹ்ம்ம் எப்படித்தான் பொறுமையா இதெல்லாம் முடைஞ்சாங்களோ தெரியல. :)

பெரிய கொட்டான்களைக் கடகாம் என்றும் ஓலைப் பெட்டி என்றும்  சொல்வதுண்டு. வேவு இறக்கும் கடகாம் கூட இதே போல வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்.


கொட்டான் என்றால் சிறிய ஓலைப்பெட்டி, கடகாம் என்றால் பெரிய ஓலைப்பெட்டி, பழம் காய்கறி வைப்பது பழப் பெட்டி, வக்கூடு என்றால் கைப்பிடி உள்ள ஓலைப்பெட்டி. இதில் பிரயாணங்களில் துணி மணி வைத்துச் செல்வார்கள். இது பிரம்பில் முடையப்பட்டதுபோல் திக்காக இருக்கும். இதற்கு மூடியும் இருக்கும்.

அந்தக் காலத்தில் தாய்மார்கள் தங்கள் பெண் வீட்டுக்குப் போகும்போது கடகாத்தில்தான் தீஞ்சாமான்களைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தீஞ்சாமான்கள் என்றால் அரிசி பருப்பு உப்பு புளி மாவு வகையறாக்கள், காய்கறிகள் , பலகாரங்கள் போன்றவற்றைச் சுமந்து தலைமேல் வைத்து மகள் வீட்டிற்குக் கொண்டு சென்று கொடுப்பார்கள்.

அதேதான் திருமணங்களிலும் வெள்ளி வேவுக் கடகாம்களாக உருவெடுத்திருக்கக் கூடும். இவற்றில் பச்சரிசி, மட்டை அதிகம் உரிக்காத தேங்காய், வெல்லம் ஆகியன வைத்து வேவு இறக்குவார்கள். விளையாட்டுப் பொட்டி வேவு, மாம வேவு, கல்யாண வேவு, பெண்ணழைத்த வேவு போன்றவற்றில் இந்த வெள்ளிக் கடகாம்கள் பயன்படுத்தப்படும். பெண்களைக் கண்களாகக் கவனித்துக்கொள்வதில் காரைக்குடிக்காரர்களுக்கு ஈடு இணையில்லை என்று சொல்லலாம்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

6 கருத்துகள்:

  1. நானும் இவற்றைப் பார்த்திருக்கிறேன். அசாம் மாநிலத்திலும் இந்த ஓலைக் கூடைகள் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. நம்ம பக்கத்து ஓலைக்கொட்டான்கள்... வெள்ளிச் சாமான்கள் என படம் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு
  3. கடகாம், தீஞ்சாமான்கள் இப்போதுதான் அறிந்தேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)