வெள்ளி, 29 ஜூலை, 2016

2065 ம் ஆறு லட்சமும். !!!

841.ஸ்டேடஸை லைக் பண்ணி போடுறோமோ இல்லையோ லைக்ஸை லைக் பண்ணிப் போடுறதில்லை.

#மெக்கானிக்கல்_லைக்.

842. நமது லைக்ஸெல்லாமுமே நமது லைக்ஸில்லை.

#சிச்சுவேஷன்_லைக்ஸ்

843. தர்க்கரீதியா, கொள்கை ரீதியா, வேதாந்த ரீதியா சித்தாந்தரீதியா விருப்பப்பட்டு எப்பவுமே லைக்ஸ் போடுறதில்லை.

#நட்புரீதி_லைக்ஸ்.

844. என்ன விட்டுட்டு சாப்பிட்டதாலதான் வவுத்துவலின்னு சந்தோஷப்படும் பிள்ளை நட்புகளை என்ன செய்வது ? ப்ளாக் ஃபாரெஸ்ட், ரெட் வெல்வெட்னு கேக் ஃபோட்டோ போட்டு இன்னும் கடுப்பேத்துறதுதான் சரி :P

845. மாஃபியாவா..நோ நோ.. என் ஃப்ரெண்ட்ஸ்தான் போனா போகுதுன்னு கொஞ்சம் லைக்ஸ் போடுறாங்க. அதையும் கெடுத்திடுவாங்க போல இருக்கே.

846.அடையாளங்களை மறைக்க/மறுக்க விரும்புகிறோமோ நாம்...# சில சமயங்களில்..



847. ஏன் இத மக்கள் ரெண்டு மூணு நாளா எழுதிகிட்டே இருக்காங்க. அப்பிடி என்ன ஆச்சு.. /// # என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.///

புரிலயே.. அப்டேட்ல பின் தங்கிட்டமா..

848.ஒரே உறையில் இரண்டு வாள் இருக்கமுடியாது.. உண்மைதான்.

849. துளித்துளியாய்க்
கரைந்துகொண்டிருக்கிறது
நேற்றைய சம்பவம் இனிப்பாய் .
சர்க்கரைப் பந்தலில்
தேன் மாரி பெய்து
கடைவாய்ப்பல்லில் ஒளிந்து
இதயத்தில் வடிகிறது.
ஒளிக்கும் முகம் களிக்கும்
உள்ளும் புறமும் நெகிழும்
ஒத்ததிர்வின் ஓசை
ஒன்றோடொன்று இயைந்து.

850.ஆஃபீஸ் போன வைஃப் வந்திருவான்ன உடனே ஈவினிங் ஆஃபிஸுக்கு போற பசங்க ரெக்கைய கட்டிட்டுட்டுத்தான் பறக்குறாங்க.
‪#‎வைஃபோஃபோபியா‬

851. கால்ல ஒரு சக்கரமோ இல்ல கைல ஒரு ரெக்கையோ இருந்தா சரியாயிருக்கும். லாப்டாப்பையோ செல்ஃபோனையோ ஆஃப் பண்ணிட்டு ஆஃபீஸுக்குப் பறந்து போய் சீட்ல உக்கார்றதுக்கு. இல்லாட்டி ஹாரிபாட்டர் மாதிரி ஒரு சிம்னி இருந்தா வீட்டுக்குள்ளே இருந்தே ஆஃபீஸ் போயிடுவாங்க பசங்க. 

852. பொம்மைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
பிரிய பொம்மை

பொம்மிகளுடன்
கண்ணாமூச்சியாம்.


ஏறக்கட்டப்படுகிறது பரணில்.
கொஞ்சம் தூசி நல்லது.

புது உடைகள் தேவைதான்
கொலுவுக்கு நாளிருக்கிறது.

பழித்தலும் அழித்தலும்
தெரியாக் கோலாட்டத்தில்
படிகளைவிட்டு ஓடிடப் போமோ


853. காற்றின் காதுகளில்
மிதந்து இறங்கும்
இறகு சொல்லும்
வெம்மையை,
ஊனாகி உயிராகிக்
கலந்திருந்த
உண்மையை,
பிரியமனமில்லாமல்
பிரிந்து வந்த
நீர்மையை.


854. ஒரு விஷயத்தில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டபின் அது குறித்த கவலைகள் வருவதில்லை.

855.  Hydrochlorothiazide
JUS REMEMBERING THE BOND.. :) AND X MEN WOLVERINE.

856. as a chemistry student i remember the bond.. and not James bond.. :) and yesterday seen that film.. to reduce the pulse rate ( seems near to death ) they gave this to a woman..

857. நாம் ஒரு கட்டுரை சிறப்பானதாகக் கருதும்போது அதற்குக் கிடைக்கக் கூடிய பின்னூட்டங்களை ஊன்றிக் கவனிக்கிறோம். நாம் சொல்லவந்ததை சரியாக யார் கிரஹித்திருக்கிறார்கள் என்று. அவ்வாறு நம் எண்ணப் போக்கோடு இன்னொருவரின் சிந்தனையும் ஒத்துப் போகும்போது மகிழ்வுண்டாகிறது.


858. ஃபோர் டாங்கி ஏஜானா ஆல் அவுட் ஆச்சா
ஃபார்ட்டியோட யுவர் லைஃபு நாட் ரன்னிங் வாட்சா :) ஹிஹி சும்மா சும்மா.

859. we never give up our ego for our better half but for some unknown persons called as friends..


860. ஓ மை காட்.. ! சும்மா ஆறு லச்சம், ஆறு லச்சம்..

# ஆறு லட்சம் பார்வைகள் கடந்திருக்கு சும்மா வலைத்தளம். நன்றி மக்காஸ் :)!!!!!!! 

2065 போஸ்ட்ஸ் & 6 லட்சம் பார்வைகள். :) எனக்கு நானே ஷொட்டு. :)


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.

7 கருத்துகள்:

  1. இங்கு ஒரு சேமிப்பாக வைக்கிறீர்கள் போல!

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகள். மென்மேலும் சாதனை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஆறு லட்சம் கொண்டாட்டத்துக்கான சாதனை தான்.. வாழ்த்துக்கள். மேலும் மேலும் சிகரம் தொட....

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள். மற்றவையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆம் ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி மோகன் ஜி

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)