வெள்ளி, 17 ஜூன், 2016

திருக்குறள் தீபன்.

வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் பாராயணம்  திருக்கோவிலூரில் அடிகளார் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாக கம்பர்விழாவில் கம்பன் அடிசூடி அவர்கள் குறிப்பிட்டார்கள். திருவாசகம் முற்றோதல், திருப்புகழ் பாராயணம் போல இது மாபெரும் முயற்சி.

கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு கோகுலம் சார்பாக திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி ஒன்றை கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் ஏற்பாடு செய்து சகபதிவர் திரு மாயவரத்தான் கி ரமேஷ்குமார் அவர்களையும் என்னையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.
கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது.

நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன்  , கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் , ஆங்கில கோகுலத்தின் ஆசிரியர் திருமதி மங்கா ஆகியோரின் அறிமுகம் நிகழ்ந்தபின் போட்டிகள் ஆரம்பித்தன.

மினிஷா நாயர் தொகுத்து வழங்க கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து குழந்தைகள் திருக்குறளை ஒப்புவிக்கத் துவங்கினார்கள்.

மனனம் செய்வது என்பது பதின்பருவங்களோடு முடிந்து விடுவதால் அந்தப் பருவத்துக்குள் முடிந்தவற்றை படித்துவிடுவது உத்தமம் என்று கூறினேன்.


முதலில் குறள் கூறவந்து மூன்று குறள்களையே திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுச் சிரிக்கும் அழகு.
இவர் மிக அழகாகச் சொன்னார் எனினும் “அடைக்குந்தாழ் “ என்பதை அடக்குந்தாழ் என்று சொல்லிவிட்டார். படிக்கும்போது நன்கு உச்சரித்துப் படித்தால் இந்தப் பிழை வராது என்று கூறினேன்.
பெரும்பாலோர் பேர் மறந்துவிட்டது. உச்சரிப்பு, மேடைக்கூச்சம் இல்லாமல் சொல்கின்றார்களா, பிழை இருக்கின்றதா, மறக்காமல் பத்தையும் நினைவுபடுத்திச் சொல்கின்றார்களா என கவனித்து மதிப்பெண் அளித்தோம்.
துப்பார்க்குத் துப்பாய என்ற குறளை இவர் கூற மாயவரத்தான் திரும்ப அதைக் கூறுமாறு கேட்டார். பிழையில்லாமல் சொன்னார் இந்தக் கண்மணி. இவங்களும் நல்லா சொன்னாங்க.
அநேகர் சரியாக சொன்னாலும் ஒரு படபடப்பு இருந்தது. இவங்களும் நல்லா ஒப்புவிச்சாங்க.
சில குறள்களோடு சிலர் நிறுத்திக் கொண்டார்கள்.
இவர்தான் தீபன். இவர் ஒருத்தர்தான் உச்சரிப்பு சுத்தமா பத்துக் குறளையும் மேடைக்கூச்சம் இல்லாம இயல்பா தெளிவா சொன்னாரு. ஹேட்ஸ் ஆஃப் தீபன்.இன்னும் இன்னும் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துகள் தங்கம்.
இவர் மூணு நாலு சொல்லிட்டு மறந்துட்டதால திரும்ப அழைச்சு வாய்ப்புக் கொடுத்தாரு  மாயவரத்தான். பட் அப்பவும் இவர் சிரிச்சு சிரிச்சு தப்பிச்சிட்டாரு 
இவங்களும் தெரிஞ்சத சொன்னாங்க.குட்டீஸ் எல்லாரும் துரு துரு.. :)
பதினேழு பேர் பேர் கொடுத்து பத்துபேர் மட்டும் கலந்துக்கிட்டாங்க. பெரும்பாலும் நன்றி பற்றியும் ஒழுக்கம் பற்றியுமே குறள்களைத் தேர்ந்தெடுத்துருந்தாங்க.
கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் குழந்தைகளிடம் உரையாற்றும் போது கலந்துக்கணும்கிற ஸ்ப்ரிட் முக்கியம் பரிசு வாங்குறது அடுத்த பட்சம். இந்த ஸ்ப்ரிட்டுக்காகவே உங்களை எல்லாம் பாராட்டுறேன்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார். குட்டிக் கதைகள் எல்லாம் சொல்லி கலகலப்பூட்டினார்.  மொத்தத்தில் சுவையான திருக்குறள் விருந்து.

இதற்கடுத்து ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வரியில் பதில் கூறாமல் பேசும் ஒரு போட்டியும், குழந்தைகளுக்கான பாடல் போட்டியும் நடைபெற்றது. நடுவில் பிஸ்கட்ஸ் , ஜூஸ் வழங்கி வெய்யில் தணித்தார்கள். அதன் பின் மலேஷியா சங்கரின்  மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடைபெற்றது.

அதுக்கும் பின்னே மாயவரத்தான் அவர்களும் நானும் உரையாற்றினோம். ! இது எல்லாம் அடுத்தடுத்த இடுகைகளில் பகிர்கிறேன் :)

திருக்குறளுக்காக இவ்வளவு முயற்சி எடுத்த பொறுப்பாசிரியருக்கும் அதை நிறைவேற்றிய சக ஊழியைகளுக்கும். நல்ல முறையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த குட்டீஸுக்கும் அவங்களைத் தயார்ப்படுத்திய பெற்றோருக்கும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பெற்றோரே  இன்னும் உங்க குட்டீஸ், சுட்டீஸை மொழி வளத்தில் செழுமைப்படுத்துங்க. வாழ்க வளமுடன். 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.


4 கருத்துகள்:

  1. குறள் ஒப்பித்த சிறுவர்களுக்கும், விழா ஏற்பத்திய கோகுலம் நிறுவனத்தினருக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி

    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு

  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)