சனி, 28 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.



341. போரிடுதல் - குழந்தைப் பேறின் போது உடன் இருத்தல் . பிரசுபம் நிகழ உதவி செய்தல். புவாகத் ாய் க்கான் இருப்பார்கள். சிலுகில் மாமியார் நத்ாரோ மற்ற உறினோ அருகிந்து பார்த்ுக் கொள்வைப் போரிடல் என்பார்கள்.

342. . தங்கம் உரசிக் கொடுத்தல் - பிறந்த குழந்தை நாவில் தங்கம் உரசி தொட்டு வைப்பார்கள்

343. பிள்ளையைத் தொட்டிலில் போடுதல் - பட்டுத் தொட்டில் கட்டிப் போடுதல்.

344. எண்ணெய் தேய்த்துப் பாசி கட்டல்.  - பிறந்த குழந்தைகளை பட்டுத் தொட்டிலிட்டு எண்ணெய் தொட்டு வைத்து கழுத்தில் கறுப்புப் பாசி போடுதல்.

345. ராராட்டுப் பாடுதல். – தாலாட்டுப் பாடுதல். இது பற்றி நிறைய எழுதலாம்.
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆராரோ
யாரடிச்சா நீ அழுதே,
அடிச்சாரச் சொல்லி அழு.
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே.
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே.

மற்றும் நிறையப் பாடல்கள் உண்டு. கிடைக்கும்போது பகிர்கிறேன்.

346. . பிள்ளை பிறந்தது கேட்டல். – ஒரு சில்வர் வாளியில் ஓரிரு சீப்பு வாழைப்பழம் இரண்டு தேங்காய் வைத்துக்கொண்டு போய் பிள்ளை பிறந்தது கேட்டு வருவார்கள். 


347. பிள்ளையை அழைத்துக் கொள்ளுதல் - வீட்டிற்கு பிள்ளையை கூட்டிக் கொள்வது. ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது ஆலாத்தி எடுத்து அழைப்பார்கள். பின்னர் அம்மா வீட்டில் இரந்து மாமியார் வீட்டிற்கும் அழத்ுக் கொள்வார்கள்.

348.. மாராயம் கேட்டல் - நடுவீட்டில் தடுக்கில் நின்று பெண் சலவைத் தொழிலாளி குழந்தையை எடுக்கி வைத்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கிறான் அல்லது பேத்தி பிறந்திருக்கிறாள் என அறிவிப்பது. மாராயம் சொல்வது. பின் சாமி வீட்டுக்குத் தூக்கி வந்து உரியவர்களிடம் ( அப்பத்தாளிடம்) குழந்தையைக் கொடுப்பது. 

349. பிள்ளை எடுக்கி வைத்துக் கொள்ளுதல்.  – தூக்கி வைத்துக் கொள்ளுதல். 

350.. மிட்டாய்த்தட்டு  வைத்தல் - குழந்தை பிறந்தபின் பங்காளி வீடுகள் , தாய்வீட்டார், சம்பந்தப்புரம் மற்றுமனைவரையும் கூப்பிட்டு மிட்டாத் தட்டு வைப்பார்கள். இதில் வெள்ளி பொட்டு ஸ்டாண்டில் மூன்றுவித பொட்டு சந்தனம் கிண்ணங்களில் வெள்ளிக் குச்சியுடனும் கண்ணாடியுடனும் வைக்கப்பட்டிருக்கும். அதில் பொட்டு வைத்துக் கொண்டு வெள்ளி மிட்டாய்த்தட்டில் ( 4 அல்லது 6 தொன்னை சைஸ் கிண்ணங்களில் ) மிட்டாய் ரொட்டி வேஃபர்ஸ், சாக்லேட்ஸ் வைக்கப்பட்டிருக்கும் அதை எடுத்துக் கொள்வார்கள். அதன் பின் அந்த சீசனுக்கு ஏற்ற குளிர்பானம் பவண்டோ காளி மார்க் பன்னீர் சோடா உடைத்துக் கொடுப்பார்கள். வெள்ளி வெத்திலைத் தட்டில் வெற்றிலை வாசனைப்பாக்கு சுண்ணாம்பு வெள்ளிக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும். விரும்புபவர்கள் வெற்றிலை போட்டுக் கொள்வார்கள். 

351. அட்டணக்கால் - கால் மேல் கால் போட்டு அமர்தல்.
தொட்டிலிலே அட்டணக்கால் தூங்குறது யாரு மகன். – என்று தொட்டிலில் அட்டணக்கால் போட்டுத் தூங்கும் குழந்தைகளுக்கு ராராட்டிப் பாடுவார்கள்.

352. பெயரிடுதல். – பிறந்து ஓரிரு மாதங்களில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பெயரிட்டு சாமி சன்னதியில் மும்முறை அழைப்பார்கள். பொதுவாக பையன் என்றால் அப்பத்தா வீட்டு ஐயா பெயரும் ஆயா வீட்டு ஐயா பெயரும் வைப்பார்கள். குழந்தையின் தாய் பெரியவர்கள் பேரைச் சொல்லக்கூடாது என்பதால் செல்லப் பேரால் விளிப்பதும் உண்டு. பெண் குழந்தை என்றால் பையனின் தாய் அல்லது பெண்ணின் தாயின் பெயர் வைப்பதுண்டு . சில வீடுகளில் முன்னோர்களின் பெயரும். சாமியின் பெயரும் ராசியான பெயர்களும் வைப்பதுண்டு. 

353. மருந்து ஒரசிக் கொடுத்தல். :- பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு நீராட்ட அம்படச்சி அக்கா வருவார்கள். வெந்நீரில் எண்ணெய் தேய்த்து நன்கு நீராட்டியவுடன் அவர்கள் சங்கு, ஆடுதோடா இலை, துளசி போன்றவற்றை மாசிக்காய்  போன்றவற்றோடு மருந்துக்கல்லில் உரைத்துச் சாறெடுத்து பிள்ளைச்சங்கில் வைத்துப் புகட்டுவார்கள்

354. பெயர்சொல்லாதது கொடுத்தல். :- என்ன காரணம் என்று தெரியாமல் அழும் குழந்தைகளுக்கு வசம்பைச் சுட்டு தாய்ப்பால் விட்டு உரசிக் கொடுப்பார்கள் . அல்லது நாக்கில் தடவுவார்கள். வசம்புக்கு பெயர் சொல்லாதது என்று சொல்வார்கள். பெயரைச் சொன்னால் மருந்து பலனளிக்காது என்பது புராதன நம்பிக்கை. இது சகலவிதமான வலியையும் கேட்கும்.

355. முதல் முடி இறக்குதல்கோயிலில் முதல் மொட்டை போடுதல் என்பதை குறிக்கும்.

356. தொட்டி கட்டுதல்.. - கோயில்களில் கரும்பில் தொட்டி கட்டி குழந்தைகளைப் புக்கத்ு அல்ல அமரவைத்து கோயிலை உலா வருவது , இது வேண்டுதலுக்காகச் செய்வார்கள். சித்திரை வைகாசியில் முத்தாளம்மன் கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் தொட்டி கட்டுவார்கள். 

357. குழந்தைப் பாட்டுகள். :-
இங்கா இங்கா இங்கா
காவேரி ங்கா கஸ்தூரி ங்கா
எங்கே இருக்குமாம் ரெங்கம்பழம்.
தீர்த்தக் கரைக்கும் திருவானைக் காவலுக்கும்
நடுவிலே இருக்குமாம்
என்னப் பெத்த ரெங்கம்பழம்.

358. பிரளி, கக்கல்/கதக்கல், இருமல் ;- குழந்தைகளுக்கு அஜீரணம் காரணமாகப் பிரளியும் செரிமானமில்லாமல் கக்கலும், இருமலும் வருவதுண்டு. அஜீரணத்தால் குழந்தை வயிற்றை உருட்டி முறுக்கிப் பிழிந்து அழ முருங்கை இலையுடன் கல் உப்பை வைத்துக் கசக்கி வயிற்றில் பிழிந்து தடவுவார்கள்.

359. கிலுக்கி எடுத்தல்/அம்பு போடுதல் :- ஆண்குழந்தைகள் நவராத்திரியின்போது திருநெல்லை அம்மன் அம்பு போடும்போது கோயிலுக்குச் சென்று அங்கே கட்டப்பட்டுள்ள வாழை மரத்தை வெள்ளி அம்பு அல்லது கிலுக்கியால் மும்முறை குத்திவிட்டு வருவார்கள். அம்பிகையின் படை வீரர்களாய் அம்பிகையை எதிர்த்த அரக்கர்களை அம்பு போட்டு அழித்து வருவதே கிலுக்கி எடுத்தல் அல்லது அம்பு போடுதல் நிகழ்வாகும். ஆண் என்றால் வீரனல்லவா அதான். J
 
360. கொப்பி கொட்டல் :- பொங்கல் முடிந்ததும் பெண் குழந்தைகள் கொப்பிப் பொட்டலுக்குச் சென்று அங்கே அமர்ந்திருக்கும் மக்களுக்கு வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கரும்பு வாழைக்காய் கத்திரிக்காய் வெல்லம் அரிசி முதலானவற்றை அவர்கள் வைத்திருக்கும் கொட்டான்களில் கொட்டி வருவார்கள் இதற்கு கொப்பி என்று ஒன்று வெள்ளியில் செய்து வைத்திருப்பார்கள். அதில் ஒரு பெண் குழந்தை ஊஞ்சலில் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் காய்கனிகளும் செதுக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் பழக்கத்தைப் பெண் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கவே இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது. 



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


5 கருத்துகள்:

  1. பெயரில்லா28 மே, 2016 அன்று 2:15 PM

    இங்குள்ளவற்றில் 75 வீதமானவை யாழ்ப்பாணத் தமிழா்களுக்குப் பொருந்தும்.
    சூள்பிடி இது இரவில் தீப்பந்தங்களுடன் நண்பா்கள் கடந்கரையில் மீன் பிடிக்கப்போவதைக் குறிக்கும்.
    ஆராரோ ஆரிவரோ
    யாரடிச்சு நீ அழுதாய்
    அடிச்சாரைச் சொல்லி அழு.
    ஆய்க்கினைகள் செய்து வைப்போம்
    மாமன் அடிச்சாரோ

    பதிலளிநீக்கு
  2. பெயர் சொல்லாதது என்ன என்று எங்கள்ஆத்தா (அப்பாவின் அம்மா) சொல்லக் கேட்டுள்ளேன். தற்போது உங்கள் பதிவுமூலமாக அதனை நினைவுகூரும் வாய்ப்பினைப் பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  3. நிறைய வார்த்தைகள் இலங்கைத் தமிழ் போல் உள்ளதே....

    பதிலளிநீக்கு
  4. அப்படியா ஆச்சர்யமா இருக்கு . நன்றி பெயரில்லா.

    நன்றி ஜம்பு சார்

    நன்றி துளசி சகோ . அப்படியா.. தெரில.. கடற்கரையோரம் இருப்பதால் ஏதேனும் தொடர்பு இருக்கலாம். :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)