சனி, 30 ஏப்ரல், 2016

மாயக் குடுவையும் மனமீனும்.

721. காதலர்களின் கரங்கள் பிரிவதேயில்லை
அவர்களின் காந்தப் பார்வைaும்.
நூற்றாண்டுகளாய் நிலைத்தே இருக்கின்றன
கண்காட்சியில் கண்ட ஒரு ஓவியத்தில்.

722. திரிவேணி :-

ஒரு பூவைபோல
உன்னைப் பிரிகின்றேன்.
உன் காலடிமண்ணை முத்தமிட்டபடி.

கம்பீரச் செடியாய் நின்றிருக்கிறாய்
உதிர்ந்த கண்ணிகள்
எண்ணிக் கொண்டு.
.
உன்னடியைச் சுற்றிலும்
என்னைப் போன்ற பூக்கள் கண்டு
நானும் உரமாகிறேன்.

அடுத்து ஒரு பூஜென்மமிருந்தால்
சந்திப்போமெனச்செல்கின்றன
மகரந்தச்சேர்க்கை வண்டுகள்.


723. எத்தகு விதைகளும்
முளைப்பதில்லை
ஒரு மரத்தை வெட்டிய இடத்தில்.

724. மொழிகளை விட்டுப் பிரிவது
எளிதானதல்ல
அதைவிடத் துயரம்
மொழிகளற்ற
விழிகளைப் பிரிவது.

725. விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.


நிழலைக் கூட காலடியில்
அடக்குகுறது உன் ஞாபகத் தகிப்பு.
கசகசக்கும் உன் நினைவின் வாசத்தோடு
கரைகிறது மாலை.

வண்டுகளாய் முத்தமிடுகின்றன
அந்திச்சூரியனை மேகங்கள்.
விரைந்து வீழ்கிறது
தப்பிய முத்தங்களைத்
துரத்திப் பிடித்தபடி இரவு.

தொடர்கிறது உன் ஞாபகம் மட்டும்
சுருளும் இருளுடனும் கூட.
விடியலில் உன்னைப் பூப்பதற்காய்க்
சூல்கொண்ட தேனுடன் காத்திருக்கிறது ஒரு மொக்கு.

726. வார்த்தைக் குடுவைக்குள்
சிக்கித் திரிகிறது
மனமீன்.


727. முன்பே விடை கொடுத்துவிடுகிறாய்
இன்னின்னதுதான் நடக்குமென்ற யூகத்தில்
தப்புவதில்லை உன் கணிப்பிலிருந்து எதுவும்
நிகழுமுன்பே முடிவெடுக்கத் துவங்குகிறாய்
என்பதில் தெரிகிறது உன் சாணக்யத்தனம்
முடிவற்ற வட்டக் குளத்தின் சிற்றலைகளாய்

728. ஒரு சம்பவம் நிகழ்கிறது
சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி
வெய்யிலின் அனல் அலையாய் அலைக்கழிக்கிறது
சாக்பீஸ் கோடுகளால் சாலைச் சித்திரம் வரைகிறது.
ஒரு புடவையைக் கயிறாக்குகிறது.
கரிக்கட்டையாய் வேகவைக்கிறது.
ஒரு குளம் சிலந்தி வலைபோல் ஈர்க்கிறது.
உறைந்த ரத்தம் விழி நரம்புகளை முறுக்கேற்றி
வாழ்ந்தபோது சொல்ல இயலாக் கோபத்தைத் தெறிக்கிறது.
ஈனத்தனங்களைச் சமாளிக்கமுடியாமல் சமாதியாகிறார்கள்.
அடையாளச் சாம்பலைச் சுமப்பவர்கள்
வீட்டின் வெளியேயே வைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களை.
தீர்த்தமாடச் செல்பவர்களின் முங்குதலாய்க்
கழுவிவிடுகிறது ஒரு பரந்த கடல் முன்னெச்சங்களை.
கரையேறுகிறார்கள் கரை ஏறமுடியாதவர்களைக்
கரைத்துக் கழித்த கழிவிரக்கத்தில்.
அலை அடித்துக் கிடக்கிறது ஒன்றின்மேல் ஒன்றாய்.

729. எவ்வளவு கவிழ்த்தாலும்
ஒரே மாயக் குடுவையில்
திரும்பத் திரும்ப நிரம்பும் யுக்தி
உனக்கேயானது.

730.நான் என்னைப் போல என் குழந்தைகளை மென்மையாக ஆக்கிவிட்டேன். ஆனால் உலகம் கடினமான மனிதர்களையும் கொண்டிருக்கிறது.

‪#‎நமக்கும்_விஷக்கொடுக்கு_முளைத்துவிடும்போல‬.

731. பற்று ஒன்றின்மேல் விழுந்துவிட்டால் -

பற்று, ஆசை , அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊடல், கூடல், பிரிதல் - இன்னும் எத்தனை எத்தனையோ.

அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக் கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே!. பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால் தொடல் என்பது ஏன் அவசியமாகிவிடுகிறது ?

தொடல் ,

உடைமையின் முத்திரை,

உறவின் வழித்துணை.

உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்திர சக்தி என்ன ?

-- லா.ச.ரா வின் அபிதா.

732. எதுவும் பிடியில் இல்லை.. அடுத்த நொடி கூட.


733. உள்ளூர ஒரு பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நூறில் நிச்சயம் இது நூற்றிலொன்றுதான்.

நாம் அபிமன்யூவா, சுபத்திரையா, கிருஷ்ணனா, அர்ஜுனனா. பத்மவியூகத்திலிருந்து வெளிவரமுடியாமல் மாட்டிக் கொண்டு விழிப்பது அவர்கள் மட்டும்தானா.

தூக்கம் வரவில்லை . நிழல் ஒரு தாமரை போல என்னை மூட இரவு சுற்றிக் கொண்டது பத்மவியூமாய். என்னை நானே வேட்டையாடிக்கொண்டிருந்தேன். பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் என்ன.. நான் உண்மையா..

ஜெமோ உங்களை நிச்சயம் சந்திக்கிறேனோ இல்லையோ த்ரில்லர் எழுதியது நீங்களா என வியக்கிறேன். வன்முறையை துப்பாக்கியை நேசிக்கத் தூண்டிய கதை அது. மற்றபடி எதுவும் பிடிக்கவில்லை

பாடலி புத்திரம் கத்தியை கழுத்தைச் சுற்றிய குழந்தையாக்கிய கதை.. துப்பாக்கி தொடத்தூண்டும் பூவாகவும். கத்தி சுமக்கத்தூண்டும் குழந்தையாகவும் ஆக முடியுமா .. விந்தை..

எழுத்தை நேசிக்கும் யாராயிருந்தாலும் ஜெமோவை விலக்க முடியாது.

நல்ல தொகுப்பு ராமகிருஷ்ணன் சார்.

-- 100 சிறந்த சிறுகதைகள். Vediyappan Discovery Book Palace & Chandrapraba Ramakrishnan

734. ப்ரியத்தைப் போலக் கனமானதும்
சுயவெறுப்பை விளைவிக்கக்கூடியதும்
மீட்பில்லாததும் எதுவுமில்லை.

735. முகம்பார்க்கும் கண்ணாடியாய்
தவிர்க்கமுடியாமல்
திராணியற்றுத் திணறுகிறது
எதிர்படும் முகங்களைப்
பிரதிபலிக்கும் முகம்.

736. யுக்திகளும் யூகங்களும்
யுத்தங்களும் நிரம்பியவைதான்
யதார்த்தங்கள்.

737. ஜன்னல் கதவைத்
தட்டிக் கொண்டிருக்கின்றது ஒரு இலை.
திறக்கவோ  மூடவோ
நிலையற்ற தாழ்ப்பாளோடு
காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றது கதவு.

738. உன் பிரியமும் என் பிரியமும்
ஒரு கூழாங்கல்லில்
சந்தித்துக் கொண்டன
நீரோட்டமும் எதிர்நீரோட்டமுமாய்
குழம்பிச் சுருண்ட அது
கூர்மையிழந்து குளிர்ந்திருக்கிறது.

739. கண்களிலிருந்து கைகளுக்கு
இடம் பெயர்கிறது ஒரு நதி
கவலையாய்க் கூப்பியிருக்கும்போது.
ஒற்றைச் சொல் மின்னலில்
கருணை மழை கிளைவிடலாம்
நம் கரங்களின் சங்கமத்தில்.

740. திரை அசைந்துகொண்டிருக்கிறது
துளசி மணக்கும் உன் நீள்மார்பில்
நானனிந்த பூக்களின் வாசம்.
உறங்குகிறாய் தலைசூடும் உள்ளங்கைகள்
எனைஅழைக்கும் தாமரையாய்.
பிரிந்தறியா நமது கனவொன்றில்
இதழ் இதழாய் இதம் பதமாய்
விளையாடிய சிரிப்பொன்று உதிர்கிறது
ஆண்டவளாய்ப் பிச்சியாய்க் கோதையாய்க்
கோர்த்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.




டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)