வியாழன், 31 டிசம்பர், 2015

கதவு :-



கதவு :-

கதவில் கைப்பிடிகள்
திறப்பதற்கும்
மூடுவதற்குமாய். ( மனசு )


கதவின் பயணம்
வட்டத்தில்
கால் பங்கு
அரைப் பங்கு. (ஸ்வயம் )

சில கதவுகள்
நாதாங்கிகளாலும்
பூட்டுகளாலும்
சில கதவுகள்
சாவிகளாலும்
இறுக்கம் பெறும். ( மனிதம் )

உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டுக் கருவியாய்க்
கதவு.
கோபத்தில் அறைபடும்.
காதலால் பெண் ஏந்தும்.


குழந்தையின் பயத்தால்
குடுகுடுப்பாண்டிக்காய்
ஒஞ்சரிக்கும்.

மனிதர்களுக்கும்
குழந்தைகளுக்கும்
உலகத்தின்
திறவுகோலாய்க் கதவு.

பட்டதாரியின்
வேலைத் தோல்வியில்
கைநீட்டி அணைத்து
உள்வாங்கும் கதவு.

மனிதர்களுக்காய்ப்
பொருள்களையும்
பொருள்களை
மனிதர்களிடமிருந்தும்
காப்பாற்றும் கதவு.

இருளின் தனிமைக்காய்க்
க்றீச்சிடும் கதவு.


வெளிக்காற்றை
வடிகட்டி உள்ளிழுக்கும்
வித்யாச அன்னமாய்க்
கதவு.

மனிதர்களுக்காய்
மழையிலும்
குளிரிலும்
உஷ்ணத்திலும்
காய்ப்பேறும்
அலங்காரக் கதவுகள்.


7 கருத்துகள்:

  1. வழக்கம்போல் அருமை. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. அருமை அக்கா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. படித்துப் பின்னூட்டமிட்டுள்ளேன் ஜம்பு சார்

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜீவலிங்கம் சகோ

    நன்றி குமார் சகோ உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. உணர்ச்சிகளின்
    வெளிப்பாட்டுக் கருவியாய்க்
    கதவு.
    கோபத்தில் அறைபடும்.//

    சூப்பரோ சூப்பர் ! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)