திங்கள், 21 டிசம்பர், 2015

வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

541. வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.


துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும். 


ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.


மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


542. At Jaslok hospital --Mumbai..-- left knee contusion.. enjoying the pain

543. தங்க நிற வெளிச்சம்
தூவுகிறது சாலை.
சிவப்பில் நிறுத்தப்பட்ட
வாகனம் காத்திருக்கிறது
பச்சையின் ஆமோதிப்புக்காய்.
சீறலாய்ப் பச்சை உமிழ்ந்து
நேர்க்கோடாய்க் காட்டுகிறது
பயணத்தின் பாதையை.
திசை தெரிந்தும்
விசை மீறிப்பறக்கிறது
கைமீறிப்போன வண்டி.
பக்கத்து வண்டிகளைப்
பக்கத்துணையெனக்
கற்பிதம்கொண்டு
ஒளியின் வழிகாட்டலில்
கட கடப்புடன்
ஒவ்வொரு மஞ்சள் வெளியிலும்
காத்திருந்து பெருமூச்சுடன்
அடைகிறது தனக்கான இடத்தை.


544. Thenammai Lakshmanan
Lives in Chennai
1,913 followers|13,368,861 views
-- G+ la varra intha views unmaithana.. ?

அஹா இப்போ

Thenammai Lakshmanan
Attended Fatima College
Lives in Hyderabad, Andhra Pradesh, India
2,348 followers|21,919,875 views
545. என் சகோதரர்கள் அனைவருக்கும் அன்பு என்னும் தேன் கலந்து இங்கு கொஞ்சம் ஜிலேபியும் ( க்வாலியர் ஜலேபி -- GWALIOR JALEBI) ரக்ஷா பந்தனும் வைச்சிருக்கேன்.

வரிசையா வந்து சாப்பிட்டு நம்ம பந்தத்தை உறுதிப்படுத்தும் விதமா காப்புக்கயிறு கட்டிக்கிட்டு தங்கம் வெள்ளி வைரம் நு இஷ்டப்பட்டதை கொடுக்கலாம். ( கி கி கி :) :) 

உலகில் உன்னதமான உறவுகளில் சகோதர உறவும் ஒன்று. என்றென்றும் உங்க அன்பை மட்டும் கொடுத்தால் போதும்.:)  நீங்க எல்லாரும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்யத்தோடும் வாழ ப்ரார்த்தனைகள்.

546. காலையிலிருந்து என் மேலே ஒரு ஈ மாத்தி மாத்தி உக்காருது

35 தரம் அடிச்சிட்டேன்.

இன்னும் ஒரு தரம் கூட அது மேல படல..

#மீ பாவம் விட்ரு ஈஈஈஈ..

547. உயிர்ப்பூ...
தளைகளைத் தகர்த்துத்
துளிர்க்கிறது காதல்.

548. குறும்புத்தனம் அதிகமாகும் போது அதிகப் ப்ரசங்கிதனம் ஆகிறது.

549. -உன்னோட போன்ல பேசினா கூட பறக்குறமாதிரியே இருக்குடி செல்லம்

க்ளீனர் -
டேய் பேசிட்டே நீ ஒடஞ்ச மேம்பாலத்துலேருந்து லாரி மேலே குதிச்சு நடந்துட்டு இருக்கே

550. மழை வரப்போகுது ஏரின்னு தெரியாம சிட்டில வீடுகட்டி இருக்கவங்க எல்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போங்கன்னு அறிவிப்பு கொடுத்திருக்கலாம்
#‎raining_chennai‬

551. எல்லாச் சாயங்களையும் வெளுத்துவிடுகிறது மழை.

552. மறைக்கப்படும் ஒரு விஷயம் விசுவரூபமெடுத்துவிடுகிறது.
மறுக்கப்படும் ஒரு விஷயம் நாளுக்கு நாள் கனம் கூடி விடுகிறது.
மறக்கப்படும் ஒரு விஷயம் அந்தர்யாமியாக அசந்தர்ப்பமாகத் தரிசனம் தந்துவிடுகிறது.

553. கல்விக் கடனைக் கட்ட வேண்டிய ஒரு உறவினர் பையன் தள்ளுபடி செய்துடுவாங்களாமேன்னு கேட்டான். யப்பா தம்பிங்களா இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க.. பாங்குங்கள எல்லாம் திவால் ஆக்குறதுக்கு.. கொஞ்சமாவது மனசாட்சியோட படிச்சு பாஸாகி நல்ல வேலையில சேர்ந்து கடனைக் கட்டுங்கப்பா இளைய பாரதங்களா..

554. சத்துணவில் வெரைட்டி ரைஸாமே.. பேஷ் பேஷ்..

555. சென்னையில் திக்கு திசை தெரியாம எங்கயாவது மாட்டிகிட்டீங்கன்னா இந்த எண்ணுக்கு டயல் செய்து நீங்க உதவி கேக்கலாம். 086959 59595.

556. நாம எங்க பார்த்தாலும் உண்மையதான் போட்டு ஒடப்போம்னு எல்லாருக்கும் தெரியும்தானே மச்சி. :)

557. அவன்தான் திருடன் என்றிருந்தேன். அவனை நானே திருடிக் கொண்டேன்.. முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்..:))

558. எங்க அன்புக்குரிய சென்னைக்காரங்களே சீக்கிரம் ஆன்லைன் வாங்க. வந்து நலம் நலமறிய ஆவல்னு போஸ்ட் போடுங்க ப்ளீஸ்.

559. சென்னை - திருச்சி = 2000. ரூ
சென்னை - பெங்களூர் = 4500.ரூ
பஸ் சார்ஜ்.
பால் பாக்கெட் - 200 ரூ
தண்ணீர் கேன் - 100 ரூ
ஒரு ஆளுக்கு ஒரு லிட்டருக்கு மேலே பால் இல்லையாம்.
என்ன கொடுமை இது.

560 யார்வந்தாலும் நாம் இங்கேதான்..
.
மொக்கை ஸ்டேடஸ் போட்டுட்டு இருக்கப் போறோம். யார் வந்தா என்ன. :)


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)