ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னையைக் காத்த சில அன்புக்கரங்களுக்கு வாழ்த்துகள்.

என் அன்புத் தோழி ராமச்சந்திரன் உஷா 

////நான்கு நாட்களாய் டீவி இல்லை, செல் பேசி பாட்டரியும் தீர்ந்துவிட்டது, இணைப்பும் இல்லை, லாண்ட் லைனும் அவுட். ஓரே நாள் வந்து மாத சம்பளம் வாங்கிப்போன வேலைக்காரம்மா மைதிலி சொன்ன விஷயங்களைக் கேட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் மனசு அடித்துக்கொண்டது.
நாங்கள் இருக்கும் பெருங்குடி பெரும்பால இடங்களில் பெரிய பிரச்சனையில்லை. ஆனால் பெருங்குடி ஸ்டேஷனை ஒட்டி இருக்கும் கல்லுக்குட்டை என்ற இடம் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிந்தது.
அப்பா அம்மாவுக்கு துணையாய் மகனை உட்கார வைத்துவிட்டு, நானும் என் மகளும் கிளம்பினோம்.


சர்ச் ஸ்கூலில் போனால், 150 குடும்பங்கள் குஞ்சும் குளுவனுமாய் உட்கார்ந்து இருந்தனர்.
அனாவசியமாய் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தார்கள். அங்கே யார் இன் ஜார்ஸ் என்றதும், லாசர் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ கிருத்துவ அமைப்பின் பெயரை சொன்னார், அவர்கள் உதவியுடன் உணவு வழங்கப்படுக்கிறது என்றவர் ஓண்ணும் பிரச்சனையில்லைமா, தேவையானவை வந்துக்கிட்டே இருக்கு என்றார். நான் பார்க்க பார்க்க பை பழைய துணிகள், புத்தம் புது போர்வைகள், எக்கசக்க பிஸ்கெட்ஸ் வந்துக் கொண்டே இருந்தன. கொடுத்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் சின்ன வயது பையன்கள். மனசுக்கு மிக நிறைவாய் இருந்தது.
பல விஷயங்கள் நமக்கு தெரியும் என்று நினைத்தாலும், உண்மை அதுவல்ல. சமீபத்தில் கவிதா சொர்ணவல்லி அல்லது அம்பேத்கார் பேரவை ( சரியாய் தெரியவில்லை) ஒரு விஷயம் போட்டு இருந்தார்கள்.நல்ல வேளையாய் அது நினைவு வந்தது.
ஐயா, பெண்களுக்கு மாதாந்தர பிரச்சனைக்கு ஏதாவது தேவையான்னு கேட்டு சொல்லுங்க என்றதும், பாவம் அவர் முகம் மாறியது. நீங்களே கேளுங்கமான்னு எங்களை உள்ளே விட்டார்.
ஆண்கள், ரெண்டுங்கெட்டான் பையன்களை வெளியே போக சொல்லிவிட்டு, யாருக்கு நாப்கின் தேவை என்றதும், ஏழெட்டு பேர்கள் கையை தூக்கினர். சில பெண்கள் இந்தி பெண்கள். அவர்களிடமும் கேட்டு விட்டு, வேறு தேவைகளையும் கேட்டுவிட்டு வரும் பொழுது, இரண்டு பெண்கள் மிக தயங்கி பேண்டீஸ் வேண்டும் என்றார்கள். அப்படியே லேசாய் தோளை அணைத்துக்கொண்டு கட்டாய் வாங்கி வரேன் என்றேன்.
எடிஎம், கடைகளில் டெபிட் கார்ட் எதுவும் பிரேஜினப்படவில்லை. ரெண்டாயிரத்தி ஐநூறு கையில் இருந்தது. அதில் குழந்தைகளுக்கு பேம்பர்ஸ், நாப்கின்ஸ் ,அமிர்தாஞ்சன், விக்ஸ், தலைவலி மாத்திரை எல்லாம் வாங்கியும், எல்லா துணி கடையும் மூடிக்கிடந்தது. கடைசியாய் ஒரு கடையில் நானகு பேன்டீஸ் கிடைத்தது. அதற்குள் இருட்டிவிட்டது. வாசலில் நின்றிருந்த லாசர் அவர்களிடம் கொடுத்துவிட சொன்னேன்.
இன்று மாலைவரை சாப்பாடு அரேஜ் செஞ்சாச்சு. அதற்கு பிறகுதான் தெரியவில்லை என்றார். மாலை போய் பார்க்க வேண்டும்.////


//இப்பொழுது திரும்ப சர்ச் ஸ்கூலுக்கு போனோம். கொஞ்ச கொஞ்சமாய் ஆட்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாய் லாசர் சொன்னார். இப்ப என்ன தேவை என்றுக் கேட்டேன். எல்லாம் இருக்கு, ஆனால் பாய்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
வாங்கலாம் என்று கிளம்பும்பொழுது, சில பெண்கள் அருகில் வந்து உள்ளாடைகள் கேட்டார்கள். எத்தனை தேவை என்று இம்முறை லிஸ்ட் எடுத்தேன்.
பிளாஸ்டிக் பாய்கள், சைஸ்வாரியாய் பேன்டீஸ் கொஞ்சம் கிட் காட் வாங்கிக் கொண்டு கொடுத்தேன்.
நிறைய குட்டிகள். அந்த கிட் காட் டுக்கு அவ்வளவு தாங்ஸ்///


என் மதிப்பிற்குரிய நண்பர் திரு வெற்றிவேல் ஜெத்தாவுக்குத் திரும்பிச் செல்லும் அவசரத்திலும் தன் லக்கேஜுகளுடன் (அவர் நண்பர்கள் அளித்த பொருட்களும் சேர்த்து ) சென்னைக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிய வண்டி இது . . 

///Left for chennai with fully loaded Duster and half loaded Grand i10 with my two sons to deliver relief materials///


என் மதிப்பிற்குரிய நண்பர் திரு. கண்பத் விஸ்வநாதன் தன் மகன் ராகுல் கண்பத் மற்றும் தோழர் திரு  நல்லதீர்த்தம் பினாகபாணி விஸ்வநாதனுடன் இணைந்து மெட்ராஸ் சில்வர் பீச் ரோட்டரி க்ளப் மூலமாக வழங்கிய தண்ணீர் பாட்டில்கள்

 ///Distributing water & clothes in the aftermath of the floods ...with some Rotarians and Rahul rotary club of madras Rotary Madras Silver Beach///





என் அன்பிற்குரிய  தோழி நான் ராஜாமகள் = தேனு தன்னுடைய பிறந்தநாளில் தன் வாழ்க்கையின் மிகப் பரிவான இந்தப் பரிசை சென்னை மக்களுக்கு வழங்கினார். 




( அந்த ஷாஜி இவர்தான் :) 

///
வந்து இந்த ....
I love u
I admire u
I respect u
I adore u
I salute u
I என்னென்னமோ u...

இருக்கும் மேல ஏதாவது இருந்தா எனக்கு சொல்லித்தாங்க.....அதை நான் ஷாஜிக்கு சொல்லனும்...

நன்றி இவருக்கும். :) 
சென்னைக்கும் கடலூருக்குமாக சுமார் ஏழாயிரம் பேருக்கு தேவையான உணவு, அத்தியாவசிய தேவைகள் எல்லாம் விடியவிடிய தயார்....ஆனால் எந்த வண்டியும் வரத்தயாரில்லை...பயப்படறாங்க...
நேத்திக்கு வந்த வண்டி 407 அதுவும் எஸ்கேப்...
ஷாஜிக்கிட்டேதான் சொன்னேன்....
என்ன பண்றாரோ தெர்ல J.V.Prasath என்பவர் கால் பண்ணி .கடலூருக்கு செல்ல வண்டி அனுப்பிவிட்டார்...ஒரு மணிநேரத்ல
Miracle..
இதுக்காக நாங்க பட்ட கஷ்டம்...ஹோ
உண்ணாமலை என்னும் பெண்தெய்வம் தன் கணவர் ப்ரசாத் அவர்களுக்கு சொல்லி ஏற்பாடு செய்தது....
எங்கேயோ உட்காரந்துக்கிட்டு இந்த ஷாஜி எவ்ளோ வேலை....யப்பா...
இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்...ஷாஜி....ஷாஜி...
சென்னை செல்ல வண்டிக்கு Shanki Perumal பட்டது தனி ட்ரக்...
Hats off....
Dear Shah Jahan ji
Jealous with
Ameena Shahjahan
Azeema Shahjahan
Jahan Ara Shahjahan
Note இந்த உணவு மற்றும் அத்யாவசியத்தேவைகளுக்கும் ஏற்பாடு செய்த்தும் ,Shah Jahan ji தான்////

இவரை முகநூலே கொண்டாடுகிறது . நமது வாழ்த்துக்களும். 

டிஸ்கி :- எவ்வளவோ பேர் எல்லா இடத்திலும் உதவிக் கொண்டிருக்கிறார்கள். என் முகநூல் இணைப்பில் இருக்கும் இந்த நண்பர்கள் செய்த உதவியும் காலத்தின் மாணப் பெரிது. மனித நேயம் மரித்துவிடவில்லை என்பதற்கு இவர்களின் இந்த உதவிகளே சாட்சி.   இன்று டிசம்பர் 6 . மதம் கடந்தும் மனிதநேயம் ஜெயித்தது. வாழ்க வளமுடன். !

டிஸ்கி 2. :- இதில் நீலக்கலரில் இருப்பது எல்லாம் என் தோழ தோழியரின் வாய்மொழி. ஐ மீன் ஸ்டேடஸ்கள். இந்த சிவப்புக் கலரில் இருப்பதுதான் நான் எழுதியது. :) :) :) நான் சரியா போடாததால யார் யார் எப்பிடிப் புரிஞ்சிக்கிட்டாங்களோ அதான் கலர் மாத்தி அடிச்சு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கேன் . :)

10 கருத்துகள்:

  1. மெய்சிலிர்க்கின்றது சகோ! ஷாஜி முதலி அனைவருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும், எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  2. மனித நேயத்தை வாழ்த்துவோம் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான், மதம் கடந்தும் மனிதநேயம் துளிர்த்தது. கடல் கடந்திருந்தும் என்னாலான உதவிகளை நண்பர்கள்மூலம் செய்ய விளைகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மனித உருவில் தெய்வங்கள். விளம்பரமில்லாமல் செய்யும் சேவைகளுக்கு நன்றி கூற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. மனிதனும் தெய்வமாகக் கிடைத்த மகத்தான வாய்ப்பினை நன்கு பயன்படுத்திச் செயல்பட்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஷாஜஹான் அண்ணன் அவர்களுக்கும் மனம் நிறை பாராட்டுகள்!

    .

    பதிலளிநீக்கு
  7. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி துளசி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி உமேஷ் சகோ.. நல்ல முயற்சி தொடருங்கள்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கோபால் சார்

    நன்றி முகம்மது நிஜாமுத்தீன்

    நன்றி அன்பே சிவம். மிக அருமையான உதவிகரமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. மகிழ்ச்சியும் அன்பும்.
    ஷாஜஹான்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)