வியாழன், 31 டிசம்பர், 2015

ஒரு கணவனின் கேள்விகள்:-



ஒரு கணவனின் கேள்விகள்:-

படுக்கைகள் சுருண்டிருக்கும்
வாளிகள் காய்ந்திருக்க
எலியை சாக்கடை குதறவிட்டு
எங்கே காணாமல் போனாய் நீ ?


வீட்டுக்குள் கொசுக்கள் கும்மாளமடிக்க
எறும்புகள் சிதறிக்கிடக்க
மனசெங்கும் வண்டுகள் குடையவிட்டு
எங்கே தொலைந்தாய் நீ ?

செடிகள் கரம்முறிந்து கீழ்கிடக்க,
பூக்கள் சோம்பலாய்க் கண்விழிக்க,
தோட்டமே திசைமாறிப் போயிருக்கவிட்டு
நீ தொலைந்து போனது ஏன் ?

புத்தகங்கள் நிர்வாணித்துக் கிடக்க
உடைகள் காயம்பட்டுக் கொள்ள
மேஜைகள் தலைகீழாய்த் தூங்கவிட்டு
எங்கு போனாய் நீ ?

சமையலறை தரிசாய்க்கிடக்க
திரைகள் திரண்டுபோக
பாத்திரங்கள் பரப்பிக் கிடக்க
எந்தக் கனவினும் கரைந்துபோனாய் நீ ?

சுவருக்கு வெளியிலெல்லாம் பசுமை,
உள்ளெல்லாம் விஷக்காற்று,
எந்தச் சுவாசத்தில்
எந்தத் திசையில்
மயங்கிக் கிடக்கிறாய் நீ . ?


5 கருத்துகள்:

  1. அதான் தெரில ஸ்ரீராம் .. மர்மமா இருக்கு :) டிடெக்டிவை கூப்பிடுங்க :)!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. அவள் இல்லாவிட்டால் வீடே அலங்கோலம்தான் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)