புதன், 30 டிசம்பர், 2015

உரம்.



12.3.86.

உரம்.

குளத்தின் நடுவே
துயின்று கிடக்கும்
தாமரையும் அல்லியும்


சிற்றலைகள் தோற்றுப் போகும்
சூரியனும் தேகம் வேகும்.

வேதம் விற்கப்படும்.
காசுகளும் வேதாந்தம் பேசும்,

ஞானம் வளர்க்க முயன்று
காற்றும் களைத்துப் போகும்.

அங்கு சூன்யத்தை
விதைத்தவன் யார் ?

விரி(வு)படுதல் மறந்த
விந்தைத் தாமரை
மோனத்தில் கிடக்கும்.

யுகங்களும்
உருண்டுவீழத்
தாமரை
தவத்தில் களிக்கும்.


3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. வேதம் விற்கப்படும்.
    காசுகளும் வேதாந்தம் பேசும்,//

    சூப்பரோ சூப்பர் ! :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)