வியாழன், 24 டிசம்பர், 2015

ஆடுகளம். :- முன்னணியில் இருக்கும் பெண் கிரிக்கெட்டர் எம் டி திருஷ்காமினி.



ஆடுகளம். :-

முன்னணியில் இருக்கும் பெண் கிரிக்கெட்டர் எம் டி திருஷ்காமினி. 


ஆண்களுக்கு இணையாக விளையாடினாலும் இன்னும் இந்தியாவில் சிறப்பாக ஊக்குவிக்கப்படவேண்டிய ஆட்டம் என்றால் அது பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள்தான். ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் போன நூற்றாண்டுகளில் கோலோச்சி வந்த கிரிக்கெட் சில தசமங்களாக பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 




1745 லேயே பெண்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டாலும் 1887  இல் தான் வொயிட் ஹீதர் க்ளப் என்ற பெயரில் பெண்களுக்கான கிரிக்கெட் கிளப் யார்க்‌ஷயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1934 இல் இருந்து விமன்ஸ் இண்டர்நேஷனல் க்ரிக்கெட் விளையாடப்பட்டு வருது. 1973 இல் இருந்து விமன்ஸ் ஒண்டே இண்டர் நேஷனல் ( ODIs) கொண்டுவரப்பட்ட பின்புதான் அது உலகத்தின் பார்வையில் முக்கிய இடம் பிடித்தது.



இந்த ஒண்டே விமன்ஸ் கிரிக்கெட் இண்டர்நேஷனல் மாட்சுகளில் 32 முறைக்கும் மேல் தொடர்ந்து விளையாடி சிறப்பிடம் பிடித்தவர் சென்னையைச் சேர்ந்த திருஷ்காமினி. ஒன்பது வயதிலிருந்து விளையாட ஆரம்பித்த இவருக்கு தற்போது 25 வயதாகிறது. இவர் ஓபனிங் பாட்ஸ்வுமன் & இடது கை பாட்ஸ்வுமன். & ஆல்ரவுண்டர். 

 இந்தியன் கிரிக்கெட் வாரியம் மூலம் பெஸ்ட் ப்ளேயர் என்று இவரை ஆஸ்திரேலியாவுக்கு CENTRE OF EXCELLENCE - BRISBANE . க்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் காம்ப்க்காக அனுப்பி வைத்தார்கள். அதில் பல நுணுக்கங்களைப் பயின்றிருக்கிறார்.. இது மட்டுமல்ல.. டி வியிலும்., மற்றும் அடிக்கடி மற்ற மாட்சுகளைப் பார்த்தும் நுணுக்கங்களை தான் கற்றதோடு மட்டுமல்ல தன் சக விளையாட்டு தோழியருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

இவருடன் இவர் தங்கை எம் டி சுகராகமினியும் இவருடன் இணைந்து விளையாடி வருகிறார். கிரிக்கெட் மூளையும் உடலும் இணைந்து செயல்பட வேண்டிய விளையாட்டு. பிசிகல் ஃபிட்னெஸ்ஸும் முக்கியம்.

டாப் டென் விமன் கிரிக்கெட்டர்கள் என்று விமன்ஸ் கிரிக்கெட் வேர்ல்டினால் பட்டியலிடப்பட்டவர்களில் திருஷ்காமினி முக்கியத்துவம் பெறுகிறார். மித்தாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, சுலக்‌ஷணா நாயக், ருமேலி தர், ரீமா மல்ஹோத்ரா, கருணா ஜெயின், லத்திகா குமாரி, கௌஹர் சுல்தானா, எம் டி திருஷ்காமினி, பூனம் ரௌத் ஆகியோரை சிறந்தபெண் கிரிக்கெட்டையாளர்களாக விமன்ஸ் கிரிக்கெட் வேர்ல்டு அறிமுகப்படுத்தி உள்ளது.


தற்போது ரயில்வேயில் பணிபுரியும் திருஷ்காமினி மித்தாலி ராஜின் ரெக்கார்டை 2013 இல் மேற்கிந்தியத் தீவுகளுடனான ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் 146 பந்துகளில் 100 ரன் எடுத்து முறியடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பெண்களுக்காக பல விளையாட்டுகள் இருந்தாலும் உலக அரங்கத்தில் சிறப்பிடம் பெற்றுத் தரக்கூடியதாக உள்ள இந்த விளையாட்டுக்கான முக்கியத்துவம் பள்ளிகளிலேயே வழங்கப்பட வேண்டும். 


 இளம்திறமையாளர்கள் இனம் கண்டுபிடிக்கப்பட்டு ஊக்கம் கொடுக்கப்பட்டால் உலக அரங்கில் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெறும்.

P.N. :- WRITTEN FOR AREA LENS MAGAZINE . - A MONTH BEFORE. !!! ( NOT YET PUBLISHED ) ! :)

7 கருத்துகள்:

  1. ஒன் டே கிரிக்கெட் மேட்ச் போன்றே மிகவும் அழகான விறுவிறுப்பான செய்திகளின் கோர்வை இது.

    //இளம்திறமையாளர்கள் இனம் கண்டுபிடிக்கப்பட்டு ஊக்கம் கொடுக்கப்பட்டால் உலக அரங்கில் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெறும்.//

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே .... :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    AREA LENS MAGAZINE இல் விரைவில் வெளிவர வாழ்த்துகள்.

    அன்புடன் கோபால்

    {http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_23.html இதில் ஏனோ இன்னும் தேன் ஆறு பொழியக்காணும்}

    பதிலளிநீக்கு
  2. திருஷ்காமினியை வாழ்த்துவோம் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியான செய்தி.திருஷ்காமினிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இளம்திறமையாளர்கள் இனம் கண்டுபிடிக்கப்பட்டு ஊக்கம் கொடுக்கப்பட்டால் உலக அரங்கில் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெறும்.// உண்மைதான் சகோ. திருஷ்காமினிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோபால் சார். கொஞ்சம் வேலை . நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வருவேன் :)

    நன்றி குமார் தம்பி

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வேகநரி !

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)