திங்கள், 9 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

காரைக்குடி வீடுகளில் இம்மாதிரியான 202. ஓவியப் படங்களைக் காணமுடியும். கிருஷ்ணர் ராதை , குழந்தைகள் அம்மாக்கள், தேவதைகள் கண்ணுக்கு விருந்தாய் பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஆனா இது 203. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான கால கட்டத்தில் நிகழ்ந்திருக்கும்னு தோணுது. ஏனெனில் பெரும்பாலான ( கிருஷ்ணர் ராதை, புராண இதிகாச சம்பவங்கள் தவிர ) ஆங்கில மாதுக்களும் அவர்களின் அழகு ( அம்மண ! ) குழந்தைகளும் தோட்டத்தில் அல்லது மரத்தைச் சுற்றி ஆடும் படங்கள்தான்.
மேலே பாருங்க என்னா சேட்டை என்னா சேட்டை. ரெண்டு பயலுக அந்தர் பல்டி அடிக்கிறானுங்க ரெண்டு பேர் கை கோர்த்து தட்டாமாலை சுத்துறானுங்க. வீட்டுல வைச்சு மேய்க்க முடியலன்னு தோட்டத்துக்கோ மரத்தடிக்கோ தள்ளிட்டு வந்துட்டாங்க போல அம்மாக்கள். ஆனா பாருங்க எல்லாம் ஒன்னு ரெண்டுல்ல கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் குழந்தைகள். !
ஆனா அம்மாக்கள் இருவர்தான். ஒருவர் கைக்குழந்தை தேவதையை முத்தாடுகிறார். அவரின் முழங்காலைப் பற்றி தன்னைக் கொஞ்சமாட்டாரன்னு ஒன்னு பார்த்துட்டு இருக்கு. இன்னொருவரின் உடைக்குள் முகத்தை மூடிப் பொதித்துக் கொள்கிறது குழந்தை. அந்த அம்மா கையில் ஒரு தோல் குடுவை. மரத்தின் பீடத்தின் மேல் நிற்கும் இரண்டு குட்டி வாண்டுகள் கீழே நிற்கும் குழந்தை மேல் தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றன. ! பூக்களால் கட்டப்பட்ட கயிறை வைத்து ஸ்கிப்பிங்க் போல ஒரு ஆட்டம் வேறு நிகழ்கிறது அந்தப் பக்கம்.

இரவு நேரத்தில் குளக்கரையில்  பெண்கள் கைகோர்த்து ஆடிப் பாடும் ஓவியம். மரங்களுள்ளுள் ஒளிந்து வாலிபர்கள் பார்த்து ரசிப்பது திகில் & த்ரில். ( அவர்களுக்கு :) கூந்தலும் உடைகளும் பறப்பது இரவின் தண்ணென்ற குளிர்ச்சியோடு அழகாய்த் தீட்டப்பட்டுள்ளது.

யாரிந்த தேவதைன்னு தெரியல. தேவதைகள் சூழ்ந்து நிற்க தேவதைக் கனவில் ஆழ்ந்து துயில்கிறாள். ஸ்நோ வொயிட் போல இருக்கா. ஆனா சரியா தெரியல. கனவு காணும் சிண்ட்ரல்லாவாவும் இருக்கலாம். :) கிட்டத்தட்ட பதினோரு தேவதைகள் உடைகள் கொட்டுது, நகைகள் எடுத்து வருது. பூங்கொத்தோடு காத்திருக்கு ஒன்று. துயில் எழுப்ப இரண்டு மூன்று. எழுந்தவுடன் க்ரீடம் வைக்க ஒன்னு. அவள் தலைமாட்டில் அமர்ந்து இரண்டு பேசிக்கொண்டிருக்கின்றன வேறு. என்னென்ன எல்லாம் செய்யலாம்னு லிஸ்ட் செக் பண்றாங்களோ. இல்லை இதெல்லாம் அவள் கனவில் காணும் உருவங்களா. மேனிஃபெஸ்டேஷன்..?

அன்னங்கள் நீந்தும் ஆற்றங்கரை ஓரம் இளமாலை வெய்யிலில் ஒரு சிலை. பெண் போலத்தான் தெரியுது பின்புறம் ஒரு நாய் அல்லது வளர்ப்பு மிருகம் நிக்குது.

திரும்ப குழந்தைகளைக் கொஞ்சும் தாயும் அவர்களைச் சுற்றும் தேவதைகளும் க்யூட். :) உணவுண்ணப் பறந்து வரும் புறாக்களும்., குழந்தையைக் கொஞ்சும் தாயை ஏக்கத்தோடு பார்க்கும் ஏஞ்சல்ஸும் கொள்ளை அழகு.

காரைக்குடியில் நிறைய வீடுகளில் 204. ரவிவர்மா ஓவியங்கள், 205. தஞ்சாவூர் பெயிண்டிங்க்ஸ் காணப்படும். 206. ராமர் பட்டாபிஷேகம், 207. கருடனில் மஹாவிஷ்ணு ஸ்ரீ தேவி பூதேவியுடன், 208, பழனிமலை முருகர், சரஸ்வதி என தெய்வத் திருவுருவங்களுக்கு உடைகள் தைக்கப்பட்டு, கண்ணாடி கற்கள் வண்ண நூல்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்குது.

209. இது பின்னலில் ஓவியம். மேட் அட்டையில் க்ராஸ் தையல் எம்பிராய்டரி. கண்ணிகளை எண்ணி எண்ணிப் போடணும்.

வீடு கேட், கேட்டில் காவலாக நாய், அழகுக்காக பூச்செடிகள், உள்ளே கோலங்கள், மதிலில் மயில் பறவைகள், உள்ளே ஜன்னல், சிவலிங்கங்கள், அவை வைக்கப்பட்ட மண்படங்களின்  மேலே கிளிகளும் பறவைகளும் மயில்களும் தாமரைகளும் என அழகு கொஞ்சுகிறது. நன்கு கவனித்துப் பார்த்தால் கேட்டின் வெளிப்புற காம்பவுண்டில் ஏ பி சி டி என்ற ஆங்கில அல்ஃபாபெட் வார்த்தைகள் பின்னப்பட்டுள்ளன. ( ஆங்கிலத்தை வெளியேவே நிறுத்திக்கோங்க என்று சொல்றாங்க போல. :)

இவைதான் இந்த ஓவியங்கள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் வரையவோ பின்னவோ புகைப்படமாக்கமாகவோ செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன.

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



9 கருத்துகள்:

  1. ரசனையான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. பகிர்வு அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. சில இல்லங்களில் இவ்வாறான ஓவியங்களை நான் பார்த்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அசத்தலான ஓவியங்கள் தேனம்மை! பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான ஓவியங்கள்.... இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அழகான ஓவியங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  8. நன்றி சுரேஷ் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஜம்பு சார்

    நன்றி மனோ மேம்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு

  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)