புதன், 4 நவம்பர், 2015

திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

ஓர் கவிதை நூலுக்கான 
புகழுரை

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது. 

ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும். 

அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

 
 


பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)
மீதியைத் தொடர்ந்து கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் திரு. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் படிக்கவும். :) 
  
மிக அருமையான மதிப்புரைக்கு ( புகழுரைக்கு ) மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கோபால் சார். வாழ்க வளமுடன் :) 

டிஸ்கி :-


கோபால் சாரின் பின்னூட்டம் ஒன்றில். 


///தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண எழுத்துநடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பேச்சு வழக்கிலேயே அனைத்துக் கவிதைகளையும் படைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்.

முறையான படிப்பறிவே இல்லாத பாமரனுக்கும் மிகச்சுலபமாகப் புரியக்கூடியதாக, ஆத்மார்த்தமாக அவை அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கதையோ, கவிதையோ, கட்டுரையோ .... எந்த ஒரு ஆக்கமும் மிகச் சாதாரணமானவர்களுக்கும், மிகச்சுலபமாகப் புரியும் வண்ணம் பேச்சுத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும்.

அவ்வாறான எழுத்துக்கள் மட்டுமே வாசகர்களிடம் நல்லதொரு வரவேற்பினை பெறக்கூடும். அதற்காகத் தங்களுக்கு என் கூடுதல் நல்வாழ்த்துகள்.///


***********************************************


மிக மிகப் பணிவான வணக்கங்களும் நன்றியும் கோபால் சார்.

தங்கள் வலைத்தளத்தில் என் நூலுக்கான புகழுரையை வெளியிட்டு அதைப் பலரும் அறியச் செய்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நூல் வந்ததே தெரியாமல் இருந்தது. உங்கள் வலைப்பதிவின் மூலம் அது பலரையும் சென்று அடைந்து அதற்கான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

பெண்பூக்களை வாசித்து முழுமையான அழகான விமர்சனம் தந்தோடு மட்டுமல்ல. அதன் பின்னும் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நன்றிக்கடன் சொல்லித் தீர்த்துவிட முடியும்.

பதில் அன்பும் நன்றியும் வணக்கங்களுமே எனது தற்போதைய நிலைப்பாடு. தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வரவும், புத்தகங்கள் வெளியிடவும் உங்கள் பதிவு எனக்கு ஊக்கமூட்டுகிறது.

மீண்டும் மனமார்ந்த நன்றிகள் கோபு சார். :)


விமர்சனத்தைத் தொடர்ந்து படிக்க..

http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html

***************************************************************

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்


My books available at

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop


NCBH, Vellore
Book Station, Vellore. 
எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.

9 கருத்துகள்:

  1. வஞ்சனை இன்றிப் புகழவே
    வைகோவை விட்டால் யாருண்டு
    அவரின் புகழ் மழையில் நனைந்து
    உடல் பலம் தேறினோர் பலருண்டு
    அவரைப் போல் இனியொருவரை
    இனி நாம் காண்பது இனியில்லை.
    வாழ்க அவர் தொண்டு
    அவரும் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  2. நானும் அங்கு படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஒரு நூலை அறிமுகப்படுத்தி திரு கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி. ஆசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பழனி. கந்தசாமி சொன்னது…

    //வஞ்சனை இன்றிப் புகழவே
    வைகோவை விட்டால் யாருண்டு

    அவரின் புகழ் மழையில் நனைந்து
    உடல் பலம் தேறினோர் பலருண்டு

    அவரைப் போல் இனியொருவரை
    இனி நாம் காண்பது இனியில்லை.

    வாழ்க அவர் தொண்டு
    அவரும் வாழ்க பல்லாண்டு.//

    தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’ நூலினில் உள்ள 57 தேன் கவிதைகளைப்போலவே 58 வதாக இந்தத் தங்களின் தனிக்கவிதையில் சிந்திச் சிதறியுள்ள தேனையும் என் புறங்கைவரை நான் நக்கி மகிழ்ந்தேன்.

    ’தேன் எடுப்பவன் தன் புறங்கையை நக்காமல் இருக்கவே மாட்டான்’ என்று ஒரு பழமொழியே உண்டு :)

    சூப்பர் ஸார். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகைக்கும், தேனினும் இனிமையான இந்தப் பாராட்டுக் கவிதைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். :)))))

    அன்புடன் கோபு.

    பதிலளிநீக்கு
  5. வைகோ சாரின் பாராட்டைக் கேட்கவும் வேண்டுமோ...அவரது வார்த்தைகள் விளையாடும் நேர்மறைச் சொற்களால்...அவரது சுட்டியும் வாசிக்கின்றோம்...

    வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  6. அவர் பக்கத்திலும் படித்து ரசித்தேன். வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  7. அஹா அருமையான கவிதையில் வாழ்த்தியமைக்கு நன்றி பழனி கந்தசாமி சார். உங்கள் புகழுரைகளுக்கு முழுமையாக ஏற்றவர் நம் அனைவரின் அன்பையும் பெற்ற மதிப்பிற்குரிய மூத்த பதிவர் திரு கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள். என்னுடைய நூலைப் படித்து எழுதி அதற்குச் சிறப்பிடம் அளித்துவிட்டார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கோபால் சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)