திங்கள், 30 நவம்பர், 2015

இடமிருந்து வலம். ( நமது மண்வாசம் )

இடமிருந்து வலம் :-
*************************
பாப்பு கைப்பற்றினால்
க்ரையான்ஸால்
ரொப்பி வைப்பாள்.

அம்மா கைவசப்பட்டால்
கோழிக்கால் கீறலாய்ப்
பென்சிலால் குறிப்பார்.

சித்தப்பாவுக்குக் கிடைத்தால்
கிராப்பு வைத்த எழுத்துக்களால்
பூர்த்தி செய்யும்.


நான் கையப்படுத்தினால்
ஏதும் எழுத கையகப்படாவேளை
இடமிருந்து வலமும்
வலமிருந்து இடமும்
மேலிந்து கீழும்
கீழிருந்து மேலும்
தடம் பிடித்து
பரமபதக் கட்டமாய்
மூளையால் நிரப்புவேன்.

ஒவ்வொரு ஞாயிறு காலையும்
கோலமிட்ட திண்ணையில்
யார் கையில் முதலில் சிக்குவோம்
என்ற திகிலோடு
செய்தித்தாள் வாராந்திரியில்
ஒளிந்து காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு குறுக்கெழுத்துப் புதிர்.

டிஸ்கி :- சுய உதவிக் குழுக்களுக்கான பத்ரிக்கையான நமது மண்வாசம் மதுரையிலிருந்து வெளிவருகிறது. இதில் என்னுடைய கட்டுரையையும் கவிதைககளையும் தொடர்ந்து கேட்டு வெளியிட்டு வரும் அதன் ஆசிரியர் & ப்ரபல பத்ரிக்கையாளர் திரு. ப. திருமலை அவர்களுக்கு நன்றிகள்.

அழகான ஓவியங்களால் எனது படைப்புகளை கவினுறச் செய்திருக்கும் ஓவியர் திரு சுந்தர்ராஜன் அவர்கட்கும் நன்றிகள் :)



2 கருத்துகள்:

  1. நன்றி டிடி சகோ

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)