புதன், 11 நவம்பர், 2015

தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.

361. வயதாக வயதாக சிலரின் ரசனைத் திறன் மட்டரகமாக ( வாசிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையம் ) மாறிவருவது குறித்து பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த மூன்றாந்தர பாடாவதிகளை வெளியிடுபவர்கள் & ரசிப்பவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்.?
அவர்களுக்குள்ளே ‪#‎தனி_ஒருவன்‬. ஹ்ம்ம்.

362. வறுமையிலும் கொடுமை
,
,
முதுமையில் தனிமை.

363. வீட்டுக்குள்ளே உக்கார்ந்துகிட்டு வீட்டைத் திருடுவது எப்பிடி
தங்கச்சி வீட்டுக்காரரை ஆள் வைத்து அடிப்பது எப்படி.
சொத்துக்காகவும் பணத்துக்காகவும் கொலை கூடச் செய்யலாம் எனச் சொல்லும், மிக மிக அழகான கொடூர வில்லிகள்
மிடிலப்பா..
சின்னத்திரைக்கும் தணிக்கை அவசியம்.

364. மீதியை நம் எண்ணங்களில் உறையவிட்டு பாதி உரையாடலில் விளையாட ஓடிவிடும் குழந்தைகள் கொள்ளை அழகு :)



365. -- சண்டேன்னா ரெண்டு சரி. ஆனா தினமும் 4 + 4 எட்டு போஸ்டா..

-- மக்கா.. தப்பு என்னுதுல்ல. நீங்க என்னோட ரெண்டு ஐடிலயும் ஃப்ரெண்டாகி இருக்கீங்க. ஒண்ண கட்/அன்ஃப்ரெண்ட் பண்ணுங்க. இல்லாட்டி நோட்டிஃபிகேஷன ஸ்டாப் பண்ணுங்க. :)

366. எளிமையாய் வாழ ஆசைப்பட்டுக்கொண்டே விலைமதிப்புள்ள பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம் வீடெங்கும்....

367. --எப்ப தீபாவளி வருது..

---அது இன்னும் ரெண்டு மாசம் இருக்கு .நவராத்திரி முடிஞ்ச அடுத்த அமாவாசையா இருக்கும்.இப்ப என்ன அவசரம்..

--- ஒரு மாச சம்பளம் போனஸ் கொடுப்பீங்க.. நீங்க புடவைவேற தனியா தருவீங்க..போனஸ்ல எம்புள்ளைகளுக்கு தனியா பிடிச்சத வாங்கலாம்.தினமுமா எண்ணப் பலகாரம், இனிப்பு செய்யிறோம். தீபாவளியைச் சொல்லியாவது செஞ்சு சாப்பிடலாம்.

( மைண்ட் வாய்ஸ். -- ஒருத்தன் செத்ததைக் கொண்டாட எதுக்குடா போனஸ்ஸுன்னு நினைச்சதுண்டு. நமக்கு அதுவும் ஒரு விடுமுறை நாள்.. ஆனா எளிய மக்களுக்கு அது ஒரு கொண்டாட்டமான நாள். ஹ்ம்ம் நரகாசுரா நல்லதுதான் செஞ்சிருக்கே போல..:)

368. டெய்லி 20 நிமிஷம் வாக்கிங் போயிட்டு வந்து வேயிங் மிஷின்ல நின்னு வெயிட் பார்க்குறது என்ன மாதிரியான டிசைன். :)

369. யாருப்பா அது நம்மள டாக் பண்ண 2013 போஸ்ட் எல்லாம் லைக் போட்டு மேலே கொண்டார்றது. மெமரி லேனே ஃபுல் ஆயிடும் போல இருக்கே..

370. And for the first time, it was not adversary's face Laila saw but a face of grievances unspoken, burdens gone unprotested, a destiny submitted to and endured. If she stayed, would this be her own face, Laila wondered, twenty years from now ?
"He'll turn on you too, you know," Mariam said, wiping her hands dry with a rag. " Soon enough. And you gave him a daughter. so, you see, your sin is even less forgivable than mine. "
Laila rose to her feet. " I know it's chilly outside, but what do you say we sinners have a cup of chai in tha yard ? "
--- love you Laila. :)
--- A THOUSAND SPLENDID SUNS by KHALED HOSSEINI

371. மீண்ட சொர்க்கம்..
.
.வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டில் அருந்தும் ஃபில்டர் காஃபி.. smile emoticon மிஸ் யூ மிஸ் யூ டா என்று கோப்பையைப் பார்த்துப் பாடத் தோணுதே.. ஹாஹா.


372. பளிச்சின்னு இருக்கவங்கள பொது இடத்துல பார்த்தா இவங்க டிவி,சினிமா ப்ரபலமோன்னு முன்னே நினைச்சதுண்டு . இப்பல்லாம் இவங்க ஃபேஸ்புக் ப்ரபலமோ நம்ம ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்காங்களோன்னு உத்து பார்க்கத் தோணுது.. :)  

373. வெளிச்ச இலைகள் உதிர்த்து
இருள் மரத்துள் ஒடுங்கி
விடியல் துளிராய் அரும்புகிறது சூரியன். 


374. குழந்தைகள் எப்போதுமே குழந்தைகள்தான். பெரிய மனுஷத் தன்மையோடு உலாவரும் குழந்தைகள்.

இருபது இருபத்திரண்டு வயதிலும் கூட விரல்கள் வெண்டைப் பிஞ்சாகவும் கால்கள் கிருஷ்ணர் பாதமாகவும் தோன்றும் மாயம்.

அம்மாவின் அணைப்பிலிருந்து அவர்கள் விலகி விட்டார்கள். அம்மாவுக்கான தொடுதல் கிட்டத்தட்ட பதின்ம வயது ஆரம்பிக்கும்போதே முடிந்துவிடுகிறது. குழந்தைகள் தனிமனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அம்மா தோழியாக இருந்தது போக தொல்லையாக ஆகும் தருணம்.

அம்மாக்கள் இன்னும் பச்சைப் புள்ளை மாதிரியே ட்ரீட் செய்ய கோபக்காரன் உருவெடுத்தாலும் தனியே தனியே தப்பிச்சு சுதந்திரம் தேடி ஓடினாலும் படிப்பு வேலை நண்பர்கள் என்ற வேறான உலகத்திலும் ஏன் வேறான ஊரிலும் நாட்டிலும் வசித்தாலும் அவ்வப்போது தொலைபேசியில் அம்மா என்றவுடன் சுய அடையாளமற்றுப் போகும் பெருமித அம்மாக்களில் ஒருத்தியாக வி லவ் யூ குட்டீஸ்.. எடர்னலி.. :)

375. ஒரு நாள் பாஸ்வேர்ட்ஸை கூட ஸ்டேடஸா எழுதிடுவோம்னு தோணுது :)

376. வாட்ஸப் க்ரூப்லயும் க்ரூப்பிஸம் இருக்கு. அண்ணன் எழுதினா தங்கை சூப்பர்க்ங்கிறது. தம்பி எழுதினா அதை மட்டும் அக்கா பாராட்டுறது. மத்தவங்க எழுதினா படிக்காத மாதிரி ஸ்க்ரோல் பண்ணிட்டுப் போறது.. :)

377. ஸ்லோ கனெக்‌ஷன் நெட் ல ஃபேஸ்புக் பார்க்கிறது ஏதோ அந்தமான் ஜெயில்லேருந்து ஆகாசத்தைப் பார்க்குறமாதிரி இருக்கு. ! :)

378. 1350அடி நடந்தா ட்ரெட்மில்லில் ஒரு கிலோமீட்டர் காட்டும். ரோட்டுல நடந்தா கூட இப்பவெல்லாம் அடியை எண்ணி நடக்கத் தோணுதே..
‪#‎வாக்கோஃபோபியா‬..

379. நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு..அதை நமக்காக நம் கையால் செய்வதும் நன்று..
‪#‎வரி_கட்டுறத_சொன்னேன்பா‬.

380.ஒருத்தரைப் பிடிக்க நமக்கு அவரோட ஹிஸ்டரி தேவையில்லைன்னு நினைக்கிறேன். smile emoticon
‪#‎மகான்களும்_ரிஷிமூலமும்‬.



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

7 கருத்துகள்:

  1. ஒரே பதிவில் எவ்வளவு செய்திகள். ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  2. செம சுவாரஸ்யம் சகோ. அதுலயும் அந்த வாட்ஸப்...சின்னத் திரை பற்றியது, 375, 371 மிக மிக ரசித்தோம்....சகோ!

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி செந்தில் :)

    பதிலளிநீக்கு

  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)