ஞாயிறு, 4 அக்டோபர், 2015

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது.

வரும் சித்திரைத் திருநாள் பெண்களுக்கு இன்னும் சீரையும் சிறப்பையும் கொண்டு வருகிறது.அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ( 10 பேருக்கு ) , உலகத் தமிழ்ச்சங்க விருது என முப்பெரும் விருதுகளை அறிவித்து நம் தமிழக முதல்வர் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயா அம்மா மகளிருக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் அவர்களுக்கும் பரிசு பெறப்போகும் எழுத்துலக ஜாம்பவதிகளுக்கும். :)



 திருக்குறள் ஆத்திச்சூடி போன்றவை கொரிய சீன அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது குறித்தும் புரட்சிக் கவிஞரின் 125 ஆவது  பிறந்தநாளில் 125 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் குறித்தும் அயலக முத்தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது குறித்தும்  பத்ரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மகிழும் அதே வேளையில் சமூக வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில்  எழுதிவரும் மகளிரையும் அங்கீகரித்து ஒரு இடம் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம். இவை எல்லாம் என் எண்ணம் மட்டுமே. ஆலோசனை அல்ல.

தமிழ் கவிஞர் நாளில் அதைப் பற்றிஆக்கபூர்வமாக அதிகம் பகிரப் போவது இம்மாதிரி வலைப்பதிவுகளில் எழுதி வரும் மகளிரே என்பதையும் உறுதிபடக் கூறுகிறேன்.

இப்போதெல்லாம் எல்லாப் பத்ரிக்கைகளும் ஆன்லைனில் வருகின்றன. மேலும் மின் நூல்களையும்வெளியிடுகிறார்கள். ஆன்லைனில் வாசிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

மகளிர் இலக்கியங்களில் முழுமையாக ஈடுபட்டுத் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு அம்மா இலக்கிய விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பைப் படித்தவுடன் எனக்கு சுசீலாம்மாதான் ஞாபகம் வந்தார்கள்.

பெண்களின் நிலையை சில தசாப்தங்களாக எழுதிவருபவர் என்ற முறையிலும் சரி, மொழிபெயர்ப்புத் தளத்திலும் சரி, வலை எழுத்திலும் சரி முத்திரை பதித்து தொடர்ந்து இயங்கி வருபவர் சுசீலாம்மா.  ஒரு நாவல், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள், இரண்டு ரஷ்ய நாவல் மொழியாக்கங்கள், ஒரு ரஷிய சிறுகதைத் தொகுப்பு மொழியாக்கம்  எனச் சிறப்பாகச் செயல்பட்டுவருபவர் சுசீலாம்மா.

////
  • பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா (2002)
  • சிறந்த பெண்மணி(2004)
  • சிறுகதைக்காக, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது (2013) [3]
  • அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது
நல்லி-திசை எட்டும் பாஷா பூஷண் விருது
எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் வழங்கும் ஜி யூ போப் மொழியாக்க விருது /// 

ஆகிய விருதுகள் பெற்ற முனைவர். ஃபாத்திமாக்கல்லூரி எங்களுக்கு அளித்த மாபெரும் கொடை.

அவர்கள் அம்மா இலக்கிய விருதையும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் பெறவேண்டும் என்பது என் பேரவா. என் அம்மாவுக்கு இவ்விருதுகள் கிடைக்க இறையருளை வேண்டுகிறேன்.

25 நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்துள்ள திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் ( நண்பர்  கோ மா கோ இளங்கோ அவர்களின் தாயார் ) இதில் இடம் பெற்று விருது பெற வாழ்த்துகிறேன். 

அத்துடன் மற்ற படைப்புகளோடு மொழிபெயர்ப்புக்காகவும் இயங்கி வரும் சாந்த தத் மேடம், தோழிகள் மதுமிதா, ராமலெக்ஷ்மி, பத்மஜா நாராயணன், தங்கை கீதா மதிவாணன், ஆகியோருக்கும் அட்வான்ஸாக ஸ்பெஷல் வாழ்த்துகள்.
       
 இவ்விலக்கிய விருதுகளை அறிவித்து மகளிருக்கு சிறப்பிடம் கொடுத்து கௌரவித்திருக்கும் நம் தமிழக முதல்வர் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய  ஜெயாம்மாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)


11 கருத்துகள்:

  1. அம்மாவுக்கு இவ்விருதுகள் கிடைக்க இறையருளை நானும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் விரும்பிக் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் + எழுத்துலகில் சகலகலாவாணியாகத் ஜொலிக்கும் ’ஹனி மேடமாகிய’ தங்களுக்கும், இந்த விருது கிடைக்கப்பட வேண்டும் என்பது என் அவா. நம் பதிவுலகப் பெண் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்....

    சுசீலாம்மாவிற்கு விருது கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  4. சுசீலாம்மாவுக்கு விருது கிடைக்க வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  5. ஜாம்பவதிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் விருது கிடைக்க வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  7. அவ்விருது உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துகள், சுசீலாம்மா அமெரிக்காவின் SFO தமிழ் சங்கத்தாலும் பாராட்டப்பட்டவர்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஸ்ரீராம்

    அஹா கோபால் சார். எங்களுக்குமா.. உங்கள் நல்லுள்ளத்துக்கும் ஆசிக்கும் நன்றி :)

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்புலிங்கம் சார்

    நன்றி கீதா

    நன்றி ஆரூர் பாஸ்கர் சார் .. அப்படியா கூடுதல் தகவலுக்கு நன்றி. :)

    பதிலளிநீக்கு
  9. அஹா பாஸ்கர் சார் எனக்குமா.. அந்த அளவு பெரிய இடத்தை நான் இன்னும் அடையலைன்னு நினைக்கிறேன். ஆனா அவங்ககிட்ட இருந்து பெண்வலைப்பதிவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் தேன்,
    முதுகு வலிச்சிக்கலால் உன் எழுத்தைத் தாமதமாகவே பார்த்தேன்.
    உன் பேராசை பலிக்கட்டும்....
    இனி உன் போன்ற இளைய சமூகம் விருது பெற வேண்டும் என்பதே என் ஆவல்
    அம்மா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)