சனி, 24 அக்டோபர், 2015

பூக்கள் பயணிக்கின்றன:-

பூக்கள் பயணிக்கின்றன:-
*********************************
பூத்து தினம்
உதிர்க்கிறீர்கள் பூவை.
கொஞ்சம் போதும்
உங்கள் ஆன்மதிருப்திக்கு

கண்டதை கேட்டதை
நினைத்ததை உணர்ந்ததை
அறிந்ததை தெரிந்ததை
எல்லாம் பூவாக்குகிறீர்கள்
எருவடித்தோ உரமடித்தோ

கண்டமேனிக்கு விளைந்து
பின் பூக்காடாய்
மடியும் பிணக்குப்பைகளை
பாதுகாக்கிறீர்கள்
புஷ்கரணியில் போடலாமென.


காயவைத்து
நாறிக் கிடக்கிடக்கும்போது
பூக்காரர்கள் அணுகுகிறார்கள்
தொடுத்து விற்கவோ.,
நறுமணத் தைலமாக்கவோ

அவர்கள் அதைச்
செதுக்கியோ கத்தரித்தோ
வண்ணமிகு சரமாகவும்
வாசமிகு திரவியமாகவும்
ஆக்குகிறார்கள்.

உங்கள் கைவிட்டுச்
சென்றுவிட்ட பூக்களை
நீங்களே அதன் புது ரூபத்தில்
காதலிக்கத் துவங்குகிறீர்கள்.

ஏக்கத்தோடும் ஏலாமையோடும்
பொறாமையோடும்
பூவியாபாரிகளோடு
பொருதத் தயாராகிறீர்கள்.

கொடுக்கப்பட்ட பூக்கள்
உங்கள் ஆசீர்வாதத்துக்கு
ஏங்கியபடியே
அனுப்பப்பட்ட இடங்களுக்கு

இந்த வருடமும் அதீதத்தில் வெளியாகி உள்ளது.

http://www.atheetham.com/2015/05/blog-post.html


8 கருத்துகள்:

  1. அன்புள்ள சகோதரி,

    ‘கொடுக்கப்பட்ட பூக்கள்
    உங்கள் ஆசீர்வாதத்துக்கு
    ஏங்கியபடியே
    அனுப்பப்பட்ட இடங்களுக்கு
    வாழப் பயணிக்கின்றன.’

    கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை நினைவிற்கு வந்தது...‘பூக்களை விற்று அதைவிட உயர்வாக எதை வாங்கப் போகிறீர்கள்...?’

    கவிதை வாசமிகுந்த மலரால் தொடுக்கப்பட்டிருக்கிறது. அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வைக்கிறியள்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் சகோ

    மிக்க நன்றி தளிர் சுரேஷ் சகோ

    மிக்க நன்றி குமார் சகோ

    மிக்க நன்றி ஜீவலிங்கம் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)