வெள்ளி, 2 அக்டோபர், 2015

திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.

புதுகையில் நமது திருவிழா. - 2015. ( நான்காம் ஆண்டு உலக வலைப்பதிவர் மாநாடு. )

வலைப்பூ சாமிக்குப் புதுகையில் தேரோட்டம்.
கூகுளாண்டவருக்கு உவகையில் கொண்டாட்டம்.

அக்டோபர் 11, ஞாயிறு அன்று காலையில் ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் காலை 9 முதல் மாலை 5 வரை உலகத்தையும் உள்ளத்தையும் வலையில் வரையும் வலைப்பதிவர் மாநாடு நடக்க இருக்கிறது.

அதற்கு வலைப்பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களை வரவேற்கிறோம். ப்லாகர், கூகுள் ப்ளஸ், ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸப் ஆகியவற்றில் நிகழ்வுகளைப் பகிர்ந்து நிறையப் பேருக்குக் கொண்டு செல்லுங்கள். திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.


போட்டிகளும் பரிசுகளும்  கவிதை ஓவியங்களுமாகக் காத்துக் கொண்டிருக்கிறது புதுகை. இணையத்தோடு இணைந்து தமிழ் இணையக் கல்விக் கழகமும் கைகோர்க்க ஐந்து போட்டிகள்., ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுகள்.!!! முதன் முறையா தமிழ்நாடு அரசும் இதன் மூலமா நம்மை கௌரவிச்சிருக்காங்க. அப்புறம் வேறென்னங்க வேணும்.



தமிழிசைப் பாடல்கள் உங்கள் காதுகளில் தெம்மாங்காய் ஒலிக்கக் காத்திருக்கின்றன.

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இருக்கு. ஏன் புது நூல் வெளியீடுகளும் இருக்கு. சகோதரர் கரந்தை ஜெயக்குமாரின் ”வித்தகர்கள்” நூலை வெளியிடுபவர் எழுத்தாளர் ஹரணி, பெறுபவர் வெ. சரவணன். த.ஆ. சகோதரர் மலேசியா தவரூபன் எழுதிய ” ஜன்னல் ஓரத்து நிலா” நூலை வெளியிடுபவர் நந்தவனம். கி. சந்திரசேகரன், பெறுபவர் நம் அனைவரின் மதிப்பிற்குமுரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன். வாழ்த்துகள்  கரந்தை ஜெயக்குமார் சகோ & மலேசியா தவரூபன் சகோ. 

இதில் பங்குபெறும் முனைவர் சொ.சுப்பையா, துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழகம்,  முனைவர் நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், கோவை, நிறுவனர், கணனித் தமிழ்சங்கம் , புதுக்கோட்டை, அ. ரவி சங்கர், திட்ட இயக்குநர், விக்கி மீடியா இந்தியா ,முனைவர் மா. தமிழ்ப்பரிதி, உதவி இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை, முனைவர் எஸ். இராமகிருஷ்ணன், எழுத்தாளர், வலைப்பதிவர், சென்னை. ஆகியோரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

பதிவர் அறிமுகம் விருது வழங்கலோடு விருந்தும் வழங்குறாங்க. வலைப்பதிவர் கையேடும் கையோடு கொடுத்துச் சிறப்பிக்கிறாங்க.

பாடுபட்டு ஒருங்கிணைக்கும் புதுகைக் குழுவினருக்குப் பாராட்டுகள். இதை முன்னெடுத்துச் சிறப்பாகச் செய்யும் முத்துநிலவன் சகோவுக்கும் திண்டுக்கல் தனபாலன் சகோவுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.

புதுகை கணினித் தமிழ்ச்சங்கமும் புதுகை வலைப்பதிவக் குழுவினரும் ( முத்துநிலவன் சகோ,தங்கம் மூர்த்தி, இரா. ஜெயலெக்ஷ்மி, மு. கீதா, ச. கஸ்தூரி ரெங்கன், பொன். கருப்பையா, கு. ம. திருப்பதி, க. குருநாத சுந்தரம், வைகறை, மீரா செல்வகுமார், ராசி. பன்னீர்செல்வன், பா. ஸ்ரீ. மலையப்பன், மகா. சுந்தர், ஆர். நீலா, அ. பாண்டியன், மைதிலி, கா. மாலதி, த. ரேவதி, ஸ்டாலின் சரவணன், சு. மதியழகன், சு. இளங்கோ, எஸ். ஏ. கருப்பையா, தூயன், பா. கார்த்தி, நா. க. பாலாஜி, சு. துரைக்குமரன், நண்பன் கார்த்திக், சோலச்சி, சுரேஷ்மான்யா, சிவா. மேகலைவன் ) உங்களை சந்திக்க ஆவலோடு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு காத்திருக்காங்க. 

நன்றிக்குரிய நமது நண்பர்களுக்கும் வாழ்த்துகள். ( புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் கவிதா சுப்ரமண்யன் எனது உறவினர் என்று இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். ) இவர்களுடன் நட்புக்கரம் கோர்த்து பதிவர் விழாவினை சிறப்பிக்க உதவும் தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமத்துக்கும் திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


புதுகைத் தென்றல் வீச உவகையோடு காத்திருக்கோம் உங்க வருகைக்காக.

சீக்கிரம் கிளம்புங்க.. ஜல்திபோவோம் சலோ சலோ. புதுகைக்குப் போவோம் சலோ சலோ.

இது நமது திருவிழா. விழாக்குழுவினராகவும் வரவேற்கிறோம்.வாங்க.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

டிஸ்கி :- இவ்விடுகை வெளியிடக் காரணமாயிருந்த துளசி சகோ & கீத்ஸுக்கும், மதுமதிக்கும் நன்றி :)


8 கருத்துகள்:

  1. அருமை அருமை சகோ! அள்ளிப்புட்டீங்க லைக்குகளை!!!!! எங்க லைக்கு மட்டுமே ரொம்ம்ம்ம்ப!!! எங்களால் இந்த அளவிற்கு அழகாக விரிவாக எழுதி பதிவிட முடியவில்லை....மிக்க நன்றி சகோ!!!

    பதிலளிநீக்கு
  2. மேடம்!! உங்க அட்டகாசமான பதிவுக்கும், விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))

    பதிலளிநீக்கு
  3. சகோதரியின் அழைப்பிதழுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான முன்னுரையுடன் கூடிய அழைப்பிதழ் கண்டேன்! நன்றி தேனம்மை! புதுகையில் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! அழகான பதிவோடு அழைத்திருக்கிறீர்கள். நன்றிங்க சகோதரி. விழாவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி துளசி சகோ & கீத்ஸ். நீங்க கொடுத்த ஊக்கத்தாலதான் இந்தப் பதிவையும் இன்னும் போட்டிக்கான இரண்டு பதிவையும் எழுதி அனுப்பி இருக்கேன் :)

    மிக்க நன்றி மைதிலி புதுகையில் சந்திப்போம். :) அன்பும் வாழ்த்தும் :)

    மிக்க நன்றி இளங்கோ சார்

    நன்றி கலையரசி. நிச்சயம் புதுகையில் சந்திப்போம். :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாண்டியன் சார். நிச்சயம் பார்ப்போம். :)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)