புதன், 30 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.


173. மாட மாளிகை கூட கோபுரம் என்பார்களே அதைப் போன்ற வீடுகள் கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஆகிய ஊர்களில் பார்க்கலாம். இது காரைக்குடியில் எடுத்ததுதான். மாடியில் 174. இரட்டைத் தூண்கள் கொண்ட வளைவு எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏதோ அரசர் அங்கே காட்சி தந்து ஆணை பிறப்பிக்கப் போகிறாரோ என எண்ணும்படி இருக்கிறது இந்த வீட்டின் அமைப்பு :)



புதுமையும் பழமையும் கலந்த வீடுகளில் இதுவுமொன்று.


வீட்டின் வெளிப்பக்கம் சாமி சிலைகள் வைப்பது ஸ்பெஷாலிட்டி. அதிலும் சிலர் வீடுகளில் லெக்ஷ்மியை சிலையாக வடித்திருப்பார்கள். இரு புறமும் யானைகள் காவலிருப்பதால் கெஜலெக்ஷ்மி :) லெக்ஷ்மியைச் சுற்றிலும் கோயில் போல திருவாச்சி இருக்கிறது.


175. இது செட்டிநாட்டரசரின் அரண்மனை. நித்தமும் பலர் இங்கே விசிட் செய்கிறார்கள். முகப்பு , பட்டாலை, அரங்கம் போன்ற ரிசப்ஷன் ஹால், மூன்று கட்டுகள், வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், ஆர்ச்சுகள், அழகான லாபி, முன்கோப்பு, வண்ணம் கருக்காத சுவர்கள், கார் ஷெட்டுகள், குதிரை லாயங்கள் என மிகப் பிரம்மாண்டமாக மிரட்டும் அரண்மனை இது. பல படங்களிலும் பார்த்திருக்கலாம்.


அதே கானாடு காத்தானில் இன்னொரு வீடு. இந்த வீட்டில் பாருங்கள் 176. தெருவிலிருந்து வீட்டுச் சுவருக்கு முட்டுக் கொடுத்து அமைத்திருக்கிறார்கள். வீட்டை செம்புராங் கற்களால் & 177. பட்டியல் கற்களால் ஸ்ட்ராங்காகக் கட்டியதோடு மட்டுமல்ல. அதை இறங்காமலோ சுவர் பழுதாகி தளராமலோ பார்த்துப் பார்த்துக் கட்டி இந்தக் கற்களால் ஆன முட்டும் கொடுத்து அமைத்திருக்கிறார்கள். பக்கத்தில் அந்தக் காலத்திய குதிரை வண்டி லாயம் & இந்தக் காலத்திய கார் ஷெட். விதம் விதமான ஜன்னல்களையும் சாளர அமைப்புகளையும் பாருங்கள். பலகணிகள் பலவிதம். :)


பிரம்மாண்ட  யானைத் தும்பிக்கைகள் போன்ற தூண்கள் அழகா மேங்கோப்பில் அணிவகுக்கும் மரச்சட்டங்கள் அழகா. ? :) இங்கே பச்சைக் கலரில் தெரியும் ஸ்கீர்ன் அமைப்பை 178. மரவு தட்டி என்பார்கள். மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டு மரப் பலகைகளால் (அல்லது திரைத் துணிகளால் சில தட்டிகள் மூடப்பட்டிருக்கும்  ) மூடப்பட்டிருக்கும் இதை டெம்ப்ரரி தடுப்பாகவோ, ஸ்க்ரீனாகவோ பயன்படுத்துவார்கள்.


179. வண்ண ஜன்னல்கள். இந்த ஜன்னல்களை இரண்டு இரண்டாக மடித்து ஜன்னல் பக்கமே மடக்கி விடலாம். இந்த திண்ணை போன்ற அமைப்பில் அமர்ந்து வெளியே பெய்யும் மழையை, குட்டித் தோட்டத்தை அங்கே பாடித் திரியும் பறவைகளை, பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகளை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமானது. கீழே ஆத்தங்குடிக் கற்கள் போன்ற டிசைன் கற்கள் பதிக்கப்பட்டு அழகூட்டுகின்றன. சுவற்றில் அந்தக்கால சுவிட்ச் பாக்ஸ். & 180. கறுப்பு சுவிட்சுகள். !


பல ஆண்டுகளுக்கு முன்னான ஸ்ட்ராங்க் ஷாண்ட்லியர்ஸ்.. மிக அழகு :)


பிரம்மாண்ட ஜன்னல்களும் வெளித் தூண் அமைப்புகளும். பழைய வீடுகளை இந்த சிமிண்ட் ஷேடில் பார்ப்பது ஒரு பரவசத்துக்கு உரிய அனுபவம். :) அந்த துருப்பிடித்த கம்பிகளின் அருகே உட்பக்கமாக அமர்ந்து சிவன்கோயில் கோபுரத்தைப் பார்த்து கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொன்னதுண்டு. சமவயதுப் பிள்ளைகளுடன் விடுமுறைக் காலங்களில் பலகதைகள் கதைத்ததுண்டு. மேற்கே சாயும் வெய்யில் ஓவியம் தீட்ட மெல்லிய அனலையும் நிழலாடும் மரத்தையும் பறவைகளையும் ரசிப்பது சுகானுபவம்.

வினை தீர்க்கும் விநாயகர் இருபுறமும் காவல் இருக்க தேஜசோடு எழுந்து நிற்கும் வீடு. அதன் முன் வாசல் எத்தனை முறை ஏறி இறங்கி ஓடி ஆடி அமர்ந்து ரசித்த முன் வாயில். திங்கட்கிழமை சந்தைக்குச் செல்பவர்களையும் மாலையில் சிவன் கோயில் ஊரணியில் துவைத்துக் குளித்துத் திரும்புபவர்களையும் பார்க்கலாம். சந்தையிலிருந்தும் சத்யா பொட்டலில் இருந்தும் வரும் மக்களையும் அவர்கள் தலையில் சுமந்து செல்லும் 181. காய்கறிக் கொட்டான்களையும் பார்க்கலாம். ஹ்ம்ம் அதெல்லாம் அந்தக் காலம். :)

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



6 கருத்துகள்:

  1. ஒரு தலைமுறை வீடுகளை, வாழ்க்கை முறையை, வண்ணத்தில் புகைப்படங்களாகத் தொகுத்து அதற்கான விளக்க உரைகள்... (y)

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வீட்டினையும் பார்க்கப் பார்க்க வியப்புதான்
    மிஞ்சுகிறது சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. என்ன ஒரு அழகு!!! கொள்ளை கொள்ளுகின்றது சகோ...

    பதிலளிநீக்கு
  4. இந்த இடங்கள பார்க்க எனக்கு ஆசை தூண்டுகிறது..நன்றி!!

    பதிலளிநீக்கு
  5. மயக்க வைக்கும் பிரம்மாண்டம்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ரவீந்திர மணி சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஆரூர் பாஸ்கர்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)