புதன், 16 செப்டம்பர், 2015

நம்மைப் போல்



10.4. 86.

11. சுவற்றில் எறும்பு வரிசை
அன்றாட வேலைகள் போல்

காற்றுச் சலனங்களுக்குள்
கொசுக்கள்,
மனத்தின் நுகத்தடி போல்.


பாத்திரக்கடை
ஒலிச்சிதறல்கள்
மனமும் மனசாட்சியும்போல்.

தெருவோரச் சைக்கிள் மணிகள்
எங்கோ நம்பெயர்
இழுபடுவதுபோல்.

அலமாரிக் கதவுக்குள்
பண்டங்கள்,
பெற்றோரின் பூட்டிற்குள்
நம்மைப் போல். 

4 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி யாதவன் நம்பி சகோ உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)