செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தின ஓவியம்.

ஒவ்வொரு தினமும்
புதிய ஓவியத்தை
வரையத் துவங்கி விடுகிறது.

சிலவற்றில் கோபச் சிவப்பு.
சிலவற்றில் காம நீலம்.
சிலவற்றில் காதல் பசுமை
சிலவற்றில் தியான வெண்மை
சிலவற்றில் இழப்பின் கறுப்பு
சிலவற்றில் குழந்தை ரோஜா
சிலவற்றில் துறவின் வயலட்.



கழிந்த தினம்
ப்ரயாணச் சீட்டாகவோ
நாட்காட்டித் தாள்களாகவோ
குப்பை வண்ணம் சேர்ந்து
கிழிபட்டுக் கிடக்கிறது.

உறவுகளும் நட்புகளும்
கறுப்பு வெள்ளை ஓவியமாய் வெளிறி
சட்டத்தில் கிடக்கின்றன.

மங்கத் தொடங்கும்
அவற்றின் மேலேயே
புதுவண்ணம் குழைத்து
உறவுக் கிளைகளையும் 
நட்பு இலைகளையும்
வரைய ஆரம்பிக்கிறது
அடுத்த தினம்.

2 கருத்துகள்:

  1. அருமை அருமை!!!சகோதரி! அதுவும் உறவுகளும் நட்புகளும்
    கறுப்பு வெள்ளை ஓவியமாய் வெளிறி
    சட்டத்தில் கிடக்கின்றன.

    மங்கத் தொடங்கும்
    அவற்றின் மேலேயே
    புதுவண்ணம் குழைத்து
    உறவுக் கிளைகளையும்
    நட்பு இலைகளையும்
    வரைய ஆரம்பிக்கிறது
    அடுத்த தினம்.//

    அர்த்தம் பொதிந்தவை....

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)