சனி, 12 செப்டம்பர், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். கரோகியும் கானாமிர்தம் குருமூர்த்தியும்

முகநூலில் நண்பரானவர் குருமூர்த்தி. ஸ்ரீராமின் பக்கத்தில் ஜிவாஜி சாரி சிவாஜி பாடல்கள் பற்றிய ஒரு பதிவில் பின்னூட்டமிடும்போது அறிமுகமாகி நண்பர்களானோம். இவர் கரோகி ஸ்பெஷலிஸ்ட் என அறிந்தேன். துபாயில் வசித்து வரும் அவர் தமிழ்ப் பாடல்களை  ( பின்னணி இசை பின்னணியில் ஒலிக்க ) இனிமையாகப் பாடுவதில் வல்லவர் எனத் தெரிந்தது. எனவே அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. போனஸா அவர் பாடிய பாடலுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறேனாக்கும். படித்து & கேட்டு மகிழுங்கள். :)

/// குரு கரோகியில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி. ? நீங்கள் பாடிய பாடல் ஒன்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். ///

 இசையும் கரோகியும்  மற்றும் குருவாகிய  நானும் 


சிறு வயதில்  என் அக்கா பாட்டு  கற்றுக்கொளும்போது கூடவே  சென்று  உட்காரும் பழக்கம் ஏற்பட்டது.பாட்டு  வாத்தியார் சொல்லிகொடுக்கும் போது அக்கா  பாடுவதை  விட  நான்தான் அதிகம் ச ரி க ம த நி ச  சொன்னது. அதைப்பார்த்த வாத்தியார் நாளையிலிருந்து  இந்த  பயலை அழைச்சிக்கிட்டு வராதே  என்று  என் அக்காவிடம் கறாராக  சொல்லிவிட்டார்.அதற்கான காரணம்  இன்று  வரை  எனக்கு  விளங்கியதே  இல்லை.. 


இப்படியாக  படிப்படியாக   பாடல்களின்  மேல் ஆர்வம் வர பள்ளியில் ஆராம்பு படிக்கும்போது  என் அக்கா  ட்ரைனிங் கில் அழகன்  முருகனிடம்  ஆசை வைத்தேன்  பாடலை பாடி இரண்டாம் பரிசை  வாங்கினேன். பிறகு நான்  வளர  வளர பாடும்  ஆசையும் வளர்ந்துகொண்டே  வர அவ்வவப்போது காஸெட்டில் பாடி ரெகார்ட் செய்யும் பழக்கம்  வந்தது. 

இதற்கிடையில் ராஜாவின் பாடல்களை கேட்டு கேட்டு அவரின் பக்தனாகவே ஆகியிருந்தேன். ஒரு சமயத்தில் காலேஜ் கல்ச்சுரலில் பாடும்  சந்தர்ப்பம்  வாய்த்தது .அதுவும் வந்திருந்த ஆர்கெஸ்ட்ரா வுடன். என் வாழ்க்கையில் முதன் முதலில் இசையுடன் சேர்ந்து  பாடிய  முதல் பாடல் பி.பி.ஸ்ரீநிவாசின் மயக்கமா  கலக்கமா பாடல் தான் .. அதில்  நான் சொதப்பிய சொதப்பலில் ஆர்கெஸ்ட்ரா காரர்கள் பாவம்  நொந்து தான் போனார்கள்.நான்  பாடலை  முடிக்கும் முன்பே ஆடியன்ஸ் கை தட்டி ஆரவாரம்  செய்து  என்  பாடலை நிறுத்தினார்கள்.

பிறகு  காலசூழலில்  என் பாடல் கனவும் மறந்து மறைந்து  போனது. கல்யாணம் ஆகி புதுமணத்தம்பதியராய் கொடைக்கானலில் தேனிலவு .அப்போது என் தர்மபத்தினி மெதுவாக என் காதை  கடித்தாள்.’’நீங்க ரொம்ப நன்னா பாடுவேளாமே உங்க  அக்கா  சொன்னா எனக்காக ஒரு பாட்டு பாடுங்கோளேன்.’’ என்றாள். ஆகா அப்போதிருந்த மனநிலையில் நான் பாடவில்லை  என்றால் தான்  ஆச்சரியம்.அப்போது  நான்  பாடிய  பாடல் ‘’மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா ‘’ நான் பாட அவள் ரசிக்க ஆகா  ஆனந்தம்.அதில் அவள் கடித்த மகாகடியைத்தான் என்னால் தான் தாங்கமுடியவில்லை. கேக்குலைலாம் முட்டை  போட்ருப்பா சாப்டாதேங்கோ என்று சொல்ல நான் விழிக்க நீங்க  தானே ‘’கேக் தா கேக் தா’’ ன்னு  பாடினேள் சொல்ல ..

சரி மெயின் விஷயத்துக்கு வருவோம் ..கரோகி இப்போது  என் வாழ்வில் இணைபிரியாத ஒரு விஷயமாகிவிட்டது.அநேகமாக தினமும் ஒரு பாடல் கரோகியில் பாடி பதிவேற்றுவது என் வழக்கமாகிவிட்டது.அதை நான் மட்டும் தான் கேட்கிறேன் என்ற விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்.அதிலிருந்து ஏதோ சுமாராக இருந்ததை இங்கு முகநூலில் எதையும் தாங்கும் சக்தி படைத்த என் நண்பர்களிடத்தில் பகிர்ந்து அவர்கள் அதை கேட்டு பாராட்டுகிறார்கள் என்று தப்புகணக்கு போட்டு நான் புளகாங்கிதம் அடைந்தேன்.

முதலில் தனிப்பாடல் பாடி பதிவு செய்து பின்னர் ஏதோ எனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தெளிந்து இணையத்தில் கிடைக்கும் டூயட் ட்ராக்கில் எல்லாம் அவர்களோடு சேர்ந்து நான் பாடி பதிவு செய்ய ஆரம்பித்தேன் .அதை சவுண்ட்க்ளவுடில் பதிவேற்றி வைத்திருக்கிறேன் ..இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாகியாகி போனார்கள்.

ஆரம்பத்தில்  எல்லோரும்  முகஸ்துதிக்காக  ஆகா  ஓகோ என்று  சொல்ல எனக்கே கொஞ்சம் என்னதிது  நான் அவ்ளோ நல்லாவா  பாடறேன்னு  நினைத்தேன்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கிண்டலும் கேலியும் வர  ஆரம்பித்தது.சரி இப்போது  தான்  சரியான ட்ரேக்கில்  (பாடி) போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே இன்னும் உத்வேகத்துடன் கரோக்கியில் பாடி பதிவேற்றினேன்.அதில் நான் சேர்ந்து பாடிய ஒரு பெண் வாய்ஸ் பாடகி மலேசியாவில் இருந்து எனக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க சும்மா கெடந்த சங்கை ஊத   ஆரம்பித்தேன் அதாங்க இன்னும் பல பாடல்களை பாட  ஆரம்பித்தேன்.இதில் இங்கு துபாயில் ஆபீஸ் டூர் போன சமயம் எவனோ வேண்டாதவன் கொளுத்திப்போட அங்கு என் ஆபீஸ் நண்பர் மற்றும் குடும்ப நண்பரின் மனைவியுடன் ‘’சந்தனகாற்றே ‘’ பாடல் பாட அது அகிலமெல்லாம் ( ??) புகழ் பெற என்ன சொல்வது என் ஆசை இன்னும் அடங்காமல் ‘’ஆசை  நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்’’ என்று என் இசை வாழ்வு ஆடிக்கொண்டிருக்கிறது ..

இவ்வளவு  எழுதியபிறகு  நான் பாடிய  கரோக்கி பாடலை இங்கு உங்களுக்கு வழங்காவிட்டால் இந்த உலகம் என்னை கேலி செய்யுமே இதோ இந்த கானாமிர்ததை பருக  உங்களுக்கு ஒரு வாய்ப்பு ...



https://soundcloud.com/gurumoorthy-subramanian/manidhan-enbavan

டிஸ்கி:- அஹா என்ன குரு இப்பிடி சொல்லிட்டீங்க. நீங்க பாடின கானாமிர்தத்தைக் கேட்டு அசந்துட்டோம் போங்க. நிஜமாவே ஆசை நூறு வகைன்னு பாடித் தள்ளலாம் !.  மனிதன் என்பவன் தெய்வமாகலாம் உண்மைதான் அது இசையிலும்தான். பழைய பாடல்களுக்கு நாங்களும் அடிமைகள். உங்க தினப்படி பாடல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் தொடர் முயற்சிகளுக்கும் சவுண்ட் க்ளவுடில் சிறப்பிடம் பிடித்துள்ளமைக்கும் வாழ்த்துகள் குரு. 

பாடுங்க பாடுங்க பாடிட்டே இருங்க. :) வாழ்க வளமுடன் :)

11 கருத்துகள்:

  1. இங்கு இதை பதிவிட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி தேனம்மை ..

    பதிலளிநீக்கு
  2. குருவின் பாடல்களை எப்போதும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன். அவருடைய இசை ஆர்வத்திற்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. என் தளத்துக்கு வருகை புரியவும் கதைப் போட்டியில் பங்கு பெறவும் அழைப்பு.

    பதிலளிநீக்கு
  4. ' இசையும் கரோகியும் மற்றும் குருவாகிய நானும் ' இதற்கு மேல் இருக்கும் இரண்டு பாராவும் படிக்க முடியவில்லை அக்கா... எழுத்துரு மாற்றம் இருக்கிறது. எனக்கு மட்டுமா எல்லாருக்குமா தெரியலை.

    தான் பாடுவதை இவ்வளவு கீழிறக்கிச் சொல்லியிருககாரே... பாட்டு நல்லாத்தான் இருக்கு.... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா ஹா பதிவு செமையா இருக்கு குரு.. பாட்டு மட்டும்.. கேட்டுட்டு சொல்றேன் :p
    -அனு

    பதிலளிநீக்கு
  6. //இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாகியாகி போனார்கள்.//

    ஹா.... ஹா.... ஹா....

    குரு..! எழுத்தும் உங்கள் வசப்படுகிறது. சுவையாகச் சொல்கிறீர்கள்.

    இவர் பாடல்கள் பலவற்றை நாங்கள் ஃபேஸ்புக்கில் கேட்டு ரசித்திருக்கிறோம். விமர்சனமும் செய்திருக்கிறோம். நல்ல நண்பர்.


    பதிலளிநீக்கு
  7. நான் ஒரு ஞானசூன்யம்! கரோகின்னா என்ன? அல்லது கரோகே? குருமூர்த்தி சுப்ரமணியம் யார்? நீங்க அவரைக் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  8. பதிவின் ஆரம்பத்தில் அவரைப் பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் அறிமுக வரிகள் ஃபான்ட் தெளிவாக இல்லை. :(

    பதிலளிநீக்கு
  9. நன்றி குரு. நான்தான் நன்றி சொல்லணும். :)

    அருமை கேஜிஜி கருத்துக்கு நன்றி

    நன்றி பாலா சார். முயற்சிக்கிறேன். நேரமின்மை மன்னிக்கவும் .

    ஃபாண்டைத் திருத்திவிட்டேன் குமார் இப்போது பாருங்கள்.

    நன்றி அனு.

    ஆம் ஸ்ரீராம். பாடல் போலவே ஹாஸ்யமும் கைவருகிறது அவருக்கு :)

    ரெண்டும் ஒன்றுதான் கீதா மேம். அறிமுகம் கொடுத்திருக்கிறேனே. நேரமின்மையால் அதிகம் எழுத முடியல. இப்போ பாருங்க சரியா இருக்கும்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாகியாகி போனார்கள்.//.....ஹஹஹ

    அழகாக சுவைபடச் சொல்லியிருக்கிறார்...நல்ல ஹாஸ்ய உணர்ச்சி!

    எங்களுக்குப் பாடல் லிங்க் வரவில்லை....ம்ம்

    பதிலளிநீக்கு
  11. திரும்ப ட்ரை பண்ணுங்க கீத்ஸ் & துளசி சகோ. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)