வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.


இந்தத் தருணத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியும் வள்ளல் அழகப்பர் பதிப்பகத்தைச் சேர்ந்த ( மறைந்த ) நாராயணன் அவர்களையும் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.  எனது நூல்கள் பல்வேறு ஊர்களையும் வாசகர்களையும் சென்று அடைய இவர்களும் ஒரு காரணம்.

காரைக்குடி புத்தகத் திருவிழாவுக்குச் சென்ற போது அதன் உரிமையாளர் ஊருக்குச் சென்றதால் பொறுப்பாளர் மட்டுமே இருந்தார். நாராயணன் மூலமாக கொடுக்கப்பட்ட எனது நூல்கள் அங்கே இடம்பெற்றிருப்பதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் நெகிழ்ந்தேன். சொந்த ஊர்ல சொந்தக்காரங்களோட போகும்போது நம்ம புக்கை கண்காட்சில பார்த்தா எப்பிடி ஜில்லுன்னு இருக்கும். :) !!!

அதைப் பகிரவே இந்த போஸ்ட். மேலும் அங்கே வந்திருந்த திரு தேவராஜன் ( பல நிறுவனங்களில் சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினராக இருப்பதாகக் கூறினார் ). ஜேசீஸ் க்ளப் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட சாதனை அரசிகள் நூலைப் படித்திருப்பதாகவும் அது ஒரு நல்ல முயற்சி என்றும்  கூறினார். எனவே அவருடன் ஒரு க்ளிக்.

நாளை புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள். அங்கே எனது நூல்களான சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி ஆகியன கிடைக்கும் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி வாழ்க வளமுடன். :)

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)