புதன், 8 ஜூலை, 2015

உறக்கத்தின் வேர்.



இரவின் கருமை நீர்க்கச் செய்யும்
இருசொட்டுக் கண்ணீர்த்துளிகள்
உறக்கத்தின் வேர்பிடிக்குமுன்
கிளைபடர்ந்து விடுகிறன..

திசைகளற்ற கனவுகளைத்
துரத்தும் கண்கள்
கோளங்களாய் அசைகின்றன.


குதிரையாய்க் கணங்கள் பறந்து
வெய்யில் குளம்பு படியத் துவங்கியதும்
பிடறி சிலிர்க்கின்றன மரங்கள்.

இலைகோதிப் பச்சையமுத்தமிட்டு
மஞ்சள் நாவில் உறிஞ்சத்துவங்குகிறது
இன்மையையும் இருப்பையும்.


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)