செவ்வாய், 26 மே, 2015

‪கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

241. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எம் பி ஏ சேர்றதுக்கெல்லாம் ஒரு வயசு லிமிட் இல்லையா. என்ன ஏன் தினம் வந்து எம் பி ஏ சேரச் சொல்லுது எஃப் பி.

-- வழக்கமா பாத்திரம் பண்டம் , ஃபர்னிச்சர் கடை, சாப்பாடுக்கடை , புத்தகக் கடை ,  இல்லாட்டி புடவை, நகை, பிசியோதெரஃபி ஃபோட்டோ போட்டு லைக் பண்ண சொல்லும். :P :P :P  


242. கவிஞர்கள் ம(றை) றந்து போகிறார்கள் . கவிதைகளை மறக்க முடிவதில்லை

243. தினமும் இனிமேல் ஒரு மணி நேரம்தான் ப்லாக், ஃபேஸ்புக் வரணும்னு தீர்மானம் செய்துட்டு ( புத்தாண்டு சபதம் மக்காஸ் ) ஒரு நாளைக்கு 10 தரம் எட்டிப் பார்க்கிறேன், முகநூல் சுவரை. கழுதை கெட்டால் குட்டிச் சுவர், நமக்கு ஐ மீன் எனக்கு முகநூல் சுவரோ :) :) :)

244. மிகுதன்னுணர்வுத் தன்மை எதையும் அண்டுவதில்லை. அண்டவிடுவதுமில்லை.

245. சிஸ்டம் ஜாம் ஆனா மொதல்ல என் ஹெச் எம் ரைட்டரைக் காவு வாங்கிடுது. ஹ்ம்ம்

246. நன்னயம் செய்யும்போது நாநயமும் அவசியம்.

247. மனிதம் கொல்லும் விஷம் மனஊனம்.

248. சில நாவல்களைப் படிச்சா டிவி சீரியல் பார்க்குறமாதிரியே இருக்கு.
 ( சமீபத்தில் வெளிவந்த என்று சேர்த்துப் படிக்கவும். :) 

#எப்பிடிப்பா_இதெல்லாம்.

249. பணம் கொடுத்தவர்கள்தான் பணிவாயிருக்க வேண்டும்.
‪#‎தானஞானம்‬.

250.சமூக சீர்கேட்டாலும் பெற்றோரின் கவனமின்மையாலுமே இப்படிப்பட்ட மனிதர்கள் உருவாகி உலவுகிறார்கள். இது ஒரு தொடர் சங்கிலி போல் உலகம் முழுமைக்கும் நடந்து வருகிறது. டெல்லி, அடுத்து மும்பை, அடுத்து தமிழகம் என்று சிறு கிராமங்களையும் பெரு நகரங்களையும் விட்டு வைக்காமல் தொடர்கிறது இந்த மனித நேயமற்ற செயல்கள். மானுடப் பிறப்பின் மதிப்புணராமல் ஆறாம் அறிவு இருப்பதை மறந்து இணையாய் நினைப்பவரை அழிக்கக் கூட விரும்பும் இச்செயல் துணுக்குறச் செய்கிறது.
பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்று கல்விக் கூடங்களில் கற்றுக்கொடுக்கப்பட்டால் இவ்வழிவிலிருந்து பெண்கள் காப்பாற்றப்படக்கூடும். நன்றி கலையரசி என் இடுகைகளையும் குறிப்பிட்டமைக்கு./// பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும் /// ///// பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும். ////

#நன்றி வலைச்சரம். 

251. எங்கனாச்சும் நைட் வாட்ச்மேன் வேலை இருந்தா சொல்லுங்க.,
,
தூக்கமே வர்றதில்லை. :)

‪#‎இப்படிக்கு_நைட்பூரா_வாட்சை_வாட்சிங்வுமன்‬. :)

252. டைரக்டர்ஸ் ஹீரோவாகிறமாதிரி சில எடிட்டர்ஸும் ரைட்டர்ஸா கலக்குறாங்க. :)

253. what is on your mind  ந்னு யூஷுவலா கேக்குறது உங்க மனதில் என்ன இருக்குன்னு தமிழ்ல கேக்குது. ஹாஹா மைண்ட் ந்னா மனசுன்னு யார் தப்பா அர்த்தம் சொல்லிக் கொடுத்தது.

-- இப்பிடி பொண்ணு பார்க்கும்போது வூட்டுக்காரர் கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். :P :P :P ( நம்மளக் கூடக் கூப்பிட்டுக் கருத்துக் கேக்குறாங்களேன்னு சந்தோஷமா இருந்திருக்கும் ).
  
254. பெண்களை நாம் வழிபாட்டுக்குரிய பிம்பங்களாக வடிவமைத்துக் கொள்கிறோம். அவள் சார்ந்த அனைவருக்கும் அது வசதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.

255. எங்கெல்லாம் தயங்கி நிற்கிறேனோ அங்கெல்லாம் தேங்கி விடுகிறேன்.
.
ரன் ரன்.:)

256. வேகத்தடை அவசியம்தான்.
..
..
தினமுமே ( கோபத்தால் கொந்தளிக்கும் ) மனதுக்கு.

 257.ஃபேஸ்புக்குல ஆமாம் சாமி ( like) போடுற அளவு நாம வூட்லயும் போட்டிருந்தா எங்கயோ போயிருப்போம். #நான்_என்னச்சொன்னேன்_:)

258.அடுத்தவங்க ஸ்டேடஸ்ல கமெண்ட்ஸ் போடுறது பூத்தூவி வரவேற்கிற மாதிரி. :)
..
(நம்ம ஸ்டேடஸ்ல மத்தவங்க )போட்ட கமெண்ட்ஸுக்கு லைக் போடுறது காய்ஞ்சபூவெல்லாம் அள்ளிக் கொட்ற மாதிரி.

#கமெண்ட்ஸ்_தத்பித்ஸ்_:)

259. நெதமும் இதே க்ரஷும் கேஸும்தான். :)

.  கெடக்குறதெல்லாம் கிடக்கட்டும் காண்டி க்ரஷ், கிரிமினல் கேஸ் விளையாடலாம்னு ஒரே அழைப்பு. :)

#வெளையாட்டுப்_புள்ளைக_சாஸ்தியாயிடுச்சு_:)

260. யாருக்குமே சம்மதமில்லாத ஒரு விஷயத்தை நம் பிடிவாதத்துக்காகச் செய்து அவர்களை வதைத்து வெறுப்பையும் கசப்பையும் உண்பது அவசியமா என்பது இன்னொரு ஜென்மம் எடுத்தாலாவது நமக்கு விளங்குமா தெரியவில்லை.

‪#‎கசப்புதான்_தேனின்_உண்மையான_ருசி‬.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



7 கருத்துகள்:

  1. அனைத்துமே அருமை.

    //245. சிஸ்டம் ஜாம் ஆனா மொதல்ல என் ஹெச் எம் ரைட்டரைக் காவு வாங்கிடுது. ஹ்ம்ம்//

    ஆஹா, அதே அதே .... எனக்கும் அடிக்கடி இது நிகழ்கிறது.

    பதிலளிநீக்கு
  2. 243.ஹையோ ஹையோ! அப்படியே!மேசைக்கணினி,பலனி,கைபேசி என மாற்றி மாற்றி மாற்றி.........

    பதிலளிநீக்கு
  3. என் ஹெச் எம் ரைட்டர் இல்லையென்றால் என்ன...? வேறு எத்தனையோ வழி இருக்கே...!

    பதிலளிநீக்கு
  4. நன்றி கோபால் சார்

    சென்னைப்பித்தன் ஏன் இப்படி :)

    நன்றி டிடி சகோ :) என் ஹெச் எம் பழகி விட்டது :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹஹ 251.....சொல்லியாச்சு! அனைத்தையும் ரசித்தோம்''

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)