சனி, 23 மே, 2015

சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் கவிதைகள். - கடிகாரமும் கடவுளும்.

முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள் தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும். மனிதநேயமிக்க பண்பாளர். :)

மிகப் பெரும் ப்ரபலங்களுடன் புகைப்படம் இருக்கும். ஆனால் எளிமையானவர், இனிமையானவர் திரு நாராயணன் சார் அவர்கள். அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தேவர் தேவியைப் பார்த்ததுபோல் இருக்கும். 

அவருடைய நித்யப் ப்ரார்த்தனையும் மிகப் பிடித்த ஒன்று. எனவே அவருடைய ஆன்மீகப் பார்வையை கட்டுரையாக்கி அனுப்பி வைக்க வேண்டி இருந்தேன். 

அதே சமயம்  அவர் ஆங்கிலத்திலும் எழுதி வருவதால் நீங்கள் விரும்பும் எதையும் எழுதி அனுப்பலாம், ஆனால் அது தமிழில் இருந்தால் பலருக்குப் புரியும் படிப்பார்கள் என்று கூறி இருந்தேன். (ஆங்கிலம் என்றாலும் படிப்பார்கள் ஆனால் குறைந்த அளவில்தான். அதன் ரீடர்ஸ் வேறு ரகம். ) 

 சாம்பிளுக்கு அவருடைய சிந்தனையைத் தூண்டும் சில பகிர்வுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 

///எனதுயிரினும் மேலான நண்பர்களே..........................

உங்களனைவருக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது
சிரம்தாழ் பணிவான இனிய நற்காலை வணக்கங்களும்,
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளுடன்!

உங்களனைவருக்குமான எங்களது நித்திய பிரார்த்தனைகள்
எங்களிடம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!
-----------------------------------------------------------------------------------
சிந்தனை: பச்சை குத்தி சிவப்பு ரணம்....தேவையா?
-----------------------------------------------------------------------------------
அரிசி மாவு, கோலமாவு கொண்டு நாம் வீட்டு
வாசல் சாணமிட்டு நீர் தெளித்து, கோலம் போட்டு
வீட்டை லட்சுமிகரமாக நன்மைகள் வேண்டி நன்மை
செய்யும் கிரஹமாக அலெட்சுமியை விரட்டி அழகுற
வைத்திருப்போம்.

பெண்கள் மருதாணி, மெகண்டி என்று இயற்கை
மூலிகையை வண்ண ஓவியங்களாக கைகள், உள்ளங்கை,
விரல்கள், கால் போன்ற இடங்களில் அழகு படுத்திக்
கொள்வார்கள். மனதிற்கும் வெளித் தோற்றத்திலும்
ஒரு புத்துணர்ச்சியும் உற்சாகமும் பொலிவும் தரும்.
மேலை நாடுகளில் Tattoo என்று உடம்பை ரணமாக்கி
உடல் முழுதும் மிருகம் பறவை, அரசியல் , சினிமா
பிரபலங்கள் என்று 100 ரூபாய்க்கு பச்சைக் குத்திவிட்டு
30000 ரூபாயில் அது தேவையில்லை எனும் போது ,
மீண்டும் உடலை வருத்தி சர்ஜரி செய்து கொள்வதும்
வாடிக்கையாகிறது..தேவையில்லாத இத்தகைய
கலாசாரங்கள் நம் நாட்டுக்கு அவசியமா என்பதைச்
சற்று சிந்திக்க வேண்டும். காதலர்கள் பச்சைக் குத்திக்
கொள்கிறார்கள்..அவர்களில் ஆண்கள் தான் இதில்
அதிகம் வெறித்தனமாக செயல் படுகிறார்கள்.. பின் அந்தப்
பெண் வேறொருவரை மணந்து கொண்டு விட்டால்
அதை மாற்ற மீண்டும் தோல் சிகிச்சை எடுத்துக்
கொள்கிறார்கள். இப்படிப் பட்ட பொருட்செலவு, உடல்
வருந்திச் செய்வதால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ,,,,
இதெல்லாம் நாமாக வரவழைக்கக் கூடிய வம்புதானே.
நோய்க்கிருமிகள் தொற்றிக் கொள்ளவும், உடல் ரணம்
ஏற்படுவதுமான இவைகள் தேவையா என்பதை இன்றைய
தலமுறை ஆன் பெண் இருபாலரும் சற்று சிந்தியுங்கள்!
என்றும் எப்போதும் வளமான, நலமான வாழ்வினில்
மகிழ்ந்து சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்!
இல்லங்களில் மங்களம் உண்டாகட்டும்;
ஆயுராரோக்ய ஸெளபாக்ய நற்பலன்கள் பலிதமாகட்டும்!
வாழ்க, வளர்க, வெல்க!
நன்றி....நன்றி....நன்றி!///

///
18.05.2015 திங்கள் மாலை மணி 07.07.
நகைக்குத்தான் - நகைக்கல்ல (சிந்திக்க)
-------------------------------------------------------------------------
சிந்தனை: நகைக் கடைகள் வியாபாரம், சந்தை:
--------------------------------------------------------------------------------
நகைக் கடைகள் ரேஷன் கடைகளை விட மலிந்து
விட்டன. தி.நகர் என்றால் துணிக்கடை பாத்திரக்
கடகள் என்று தான் அலை மோதும்..இப்போவெல்லாம்
காய்கறிக் கடை மாதிரி எங்கு திரும்பினாலும், நகைக்
கடைகள்!
ஒவ்வொரு நகைக் கடைக்கும் தனித்தனி நடிக
நடிகைகள், விளம்பரங்கள் அசத்தல். கல் நகைகள்
எனும் போதே பொன்னின் மாத்து, குறைய வாய்ப்பு
இருக்கிறது. சமீபத்தில் பிரபு ஒரு நீயா நானா பாணியில்
ஒரு நேர்காணலே நடத்தி விட்டார்... அதில் பல துறைப்
பிரபலங்கள் கலந்து விவாதித்ததால், அதில் உணமை
இருக்குமோ என்று ஐய்யப் படத் தோன்றத்தான் செய்கிறது!
10பவுன் கல் நகைக்கு 50000ரூபாய் வரை நாம் இழக்கிறோம்
என்று புள்ளி விவரங்கள், கல் எடை சோதனை என்றெல்லாம்
செய்து காண்பித்தார். இப்போது அவர் மக்கள் பக்கம்
என்று நம்பலாமா......இல்லை மக்கள் எதைச் சொன்னாலும்
தலையாட்டி விட்டுப் போவார்கள் என்கிற ஏமாற்று
ஜிம்மிக்ஸா தெரிய வில்லை.
ஒன்று மட்டும் கேட்கத் தோன்றுகிறது..
இவ்வளவு நகைக் கடைப் பெருக்கத்திற்கு தாராள
மயமாக்கல் காரணமா,? வரிச் சலுகைகளா?
தஙகம் வருகை நேர்முறைச் சந்தையா, இவைகளை
விலை நிர்ணயம், தர உத்திரவாதம் ஏன் ஒரே சீராக
எல்லாக் கடையிலும் இருப்பதில்லை.. சேதாரம், கூலி
ஏன் எல்லாக் கடையிலும் ஒரே சீராயில்லை..ஏன் தரமும்
வித்தியாசப் படுகிறது, அல்லது எடை வித்தியாசப்
படுகிறது. திரும்பக் கொடுத்தால் ஏன் பணம் தருவதில்லை.
வேறு நகை தான் வாங்க வேண்டும் என்று அதற்க்கும்
சேதாரம் கூலி என்று மேலும் பணம் பிடுங்குகிரார்களே?
அரசு, மற்றும் எக்ஸைஸ் கணக்கு சுங்க இலாகா
விதி முறைகள் தான் என்ன? ஏன் முறைப் படுத்த
வில்லை.. தங்கக் கடைகள் பெருக்கத்தால் பொருளாதாரம்
முன்னேறியிருக்கிறதா..சந்தை விலை, கூலி சேதாரம்
நிர்வாகச் செலவு போக அவர்கள் நிகர வருமானம் ஏன்
பகிரங்கப் படுத்தப் படவில்லை..ஏனெனில் அவர்களும்
கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத்தின் கீழ்தானே வருகிறார்கள்?
கன்ஸ்யூமர் கோர்ட், என்ன செய்கிறது?
இப்படிக் கேள்விக்கணைகள் தான் இருக்கிறது.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன்
இருக்கத்தான் செய்வான். நாம் தான் உரிய நேரத்தில்
தீர்க்கமாகச் செயல் படவேண்டும். நம் பணம்
தொலைகிறதல்லவா?
நன்றி!!!!!///

///
Shikha (சிகை , குடுமி): Significance of this Shikha, originated by the foremost surgeon of Ayurveda, SHUSHRUT RISHI, who describes this, the master sensitive spot on the head as
Adhipati Marma', where there is a nexus of all
nerves. The Shikha protects this spot.
Below in the brain occurs, the Brahmarandhra, where the shushmna (nerve) arrives from the lower part of the body. In Yog, Brahmarandhra is the highest, seventh chakra with the thousand petaled lotus!
It is the center of Wisdom. The knotted shikha helps boost this center and conserve its subtle energy known as 'Ojas'..!///

///GIVE YOUR TIME AND ATTENTION:
----------------------------------------------------------
Try to spare some time in a day, to spend with and
to attend to the needy and the deserving.
your presence and assistance
will go a long way in caring them and to make them
happy forever. Nothing is so pleasant than moral
support.
Thanks a ton, my dear friends!///

 

அதற்கு அவர்களின் பதிலை வேண்டிக் காத்திருந்த போது ஒரு புது முயற்சியாக இரு கவிதைகளை அனுப்பி இருந்தார்கள். 

///நாராயணன் சார் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.  ///

திருமதி  தேனம்மை லக்ஷ்மணன் அவர்களே..
தங்களின் கடிதம் கிடைத்தது. நன்றி.  தங்களின் கவிதைகளைப் பற்றியும்
கேள்விப் பட்டிருக்கிறேன்.

எழுத்துலகில் தமிழ்த் தாயின் பெரும் பேறு பெற்றவராக
அனைத்து விருதுகளையும் தட்டிக் கொண்டு, சாகித்திய
அக்காடமி விருதும் அதற்கும் மேலே நோபல் பரிசும்
பெற்று தரணியில் தனிப் பெறும் சக்தியாக வலம் வர
வேண்டுமென்று வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.

வீட்டில் அனைவரிடமும் எங்கள் அன்பு விசாரிப்புகளையும்
ஆசிகளையும் தெரியப் படுத்துங்கள்!

இல்லத்தில் இன்பமும் குதூகலமும், மங்களமும்
பொங்கி , சீரும் சிறப்புமாக , வெற்றி வாகை சூடி,
சிறந்த வாழ்வும் பெற்று பல நூறாண்டு காலம் வாழவேண்டும்.

எங்களின் நித்திய இறை பிரார்த்தனைகளில், தங்களுக்கும்
குடும்பத்தாருக்குமான பிரார்த்தனையும் உண்டு.

வாழ்க, வளர்க, வெல்க!
 

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

டிக் டிக் டிக்......கடிகாரம்!

டிக் டிக் டிக்.....இது உன் துடிப்பு,
லப்டப், லப்டப்..........என் இதயம்;
ஊரார் இதயம் நின்றாலும்,
உன் இதயம் நிற்காது,
உண்மை உழைப்பே உன் துடிப்பு !

ஓயாது உழைக்கும் நீ- அந்த
ஆண்டவனையும் நம்பாது, உன்
நாள் காட்டியை நகர்த்துகிறாய் -
நான்முகனும் கிரஹாச்சாரம் உனையே கேட்க
நாளும் நிமிஷமும் நன்றி சொல்வார்!

இதனைச் செய்யும் நீ இப்பாரில் (உலகம்)
இகம் பரம் மூச்சினுள் ஒரு ஓசை;
ஓம்’ என்றாலும் உன் நொடிதானே?
ஈசன் போல் எங்கும் வியாபித்தனை;
நீயிரா என் வேலை யார்தான் செயும்?

காலனைக் கணித்துக் கதை முடிப்பவனும், நீ
காலையும் மாலையும் கணிப்பதுவும் , நீ;
கண்கவர் வண்ணங்களில் ஜொலிப்பவனும் நீ,
மூன்று வேளை முன்னூற்றருபத்தைந்து நாளென -
இனியேனும்,

மும்மணி நல்மணி அடிப்பாயா, சொல்!!!!!

நன்றி!! வாழ்த்துக்களுடன்.

  * * * * * * * * * * * * * * * * * * * * *

கரையும் கல்:-
***************
உளியால் அவனை நீ அடிப்பினும்,
நீ நகராதவனை அடிப்பினும்,
அவன் நகர்வான்-  உன் பால்
உழைப்பை அவன் காதலிப்பதால்;

நகர்வன்; பின் எழுவன்; - நீயும்
அவனைத் தொழுதேற்ற -
நகர்வாய், அவன் முன் கரம் கூப்பியே!
கல்லும் கரையும் அந்தக் கடவுளின் அற்புதம்!!!!!

நன்றி!! வாழ்த்துக்களுடன்.

--- அஹா மிக்க நன்றி சார் !!! கவிதைகள் அற்புதம். கடிகாரம் பற்றியும் கடவுள் பற்றியும் சிறப்பான கவிதைகள். 

தங்களின் கடிதத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்.
மிகுந்த மகிழ்வும் சந்தோஷமும் பெருகுகிறது

உங்களைப் போன்ற பெருமக்களின் அளவற்ற அன்பு ஆசிகளைப் படித்ததும்.
கண்களும் பனிக்கின்றன. வாழ்க வளமுடன். நலமுடன்.

 எந்த பந்தாவுமில்லாமல் நான் கேட்டதற்காக நேரம் ஒதுக்கி எழுதி அனுப்பி இருக்கின்றீர்கள். சாட்டர்டே போஸ்டை உங்கள் கவினுறு மொழியால் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நாராயணன் சார் :) அன்பும் நன்றியும் வாழ்த்துகளும். :)

7 கருத்துகள்:

  1. அனைத்து விஷயங்களும் அருமை. நகைக்கடைகள் விஷயங்கள் யோசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. Tvn Tvnarayanan FACE BOOK ID.23 மே, 2015 அன்று 1:29 PM

    தீந்தமிழ் வளர்க்கும் தேனம்மை அவர்களுக்கு எங்களது
    நெஞ்சார்ந்த நண்றியும், வணக்கமும் நித்திய இறை
    பிரார்த்தனைகளுடன்.

    தமிழ் வளர்க்கும் இந்த கால கட்டத்தில் தமிழில் பழ்க்கத்திலேயே
    வராத, எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன் படுத்தாது எழுத்துக்களில்
    சேர்ந்திருக்கிற ஒரு எழுத்து ‘ங’ ‘ங்’- என்கிற எழுத்து. மெய்யெழுத்து
    வரிசையில் வருவது. எந்த ஒரு வார்த்தை, வரிகளின் ஆரம்பத்தில்
    இந்த எழுத்து வராது. க்,ங், ம், ச் , ய்ர்ல்வ்ழ்ள்ற் ந், போன்றவகள் எந்த
    வரியிலும் மின்னிறுத்தி வராது. அந்த ‘ங் ‘-எழுத்தை டைட்டில் முதல்
    எழுத்தாகத் தந்து அதற்கும் ஒரு ஸ்வரம் கற்பித்து விட்டு ஒரு புதிய
    சாதனை செய்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள். உங்கள் முயற்சி
    எல்லா பரிமாணங்களிலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். என்றும்
    எங்கள் பிரார்த்தனைகளில் நீங்களும், குடும்பத்தாரும், வாசகர்களும்,
    முகநூல் அன்பர்களென இடம் பெற்றிருக்கிறீர்கள்.. இத்துணை
    வழி வகைகள் ஏற்படுத்தி என்னைப் பெருமைப் படுத்தியிருப்பதற்கு,
    நான் தங்களுக்குக் தாங்கள் சுவாசிக்கும் தமிழுக்கும் மிகவும்
    கடமைப் பட்டிருக்கிறோம். வாழ்க, வளர்க, வெல்க!

    டி.வி. நாராயணன் (முகநூல் வாயிலாக). பதிவு.



    பதிலளிநீக்கு
  3. Tvn Tvnarayanan FACE BOOK ID.23 மே, 2015 அன்று 1:51 PM

    தீந்தமிழைச் சுவாசிக்கும் தேனம்மை அவர்களுக்கு எங்களது
    நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும், எங்களின் நித்திய
    இறைப் பிரார்த்தனைகளுடன், வாழ்த்துக்களும்!


    தமிழில் வார்த்தையின் முத்ல் எழுத்தாக மெய் எழுத்து வரக்கூடாது என்ற ஒரு
    விதி இருப்பதையும் மீறி, ங் தமிழ் மணம் என்று ஒரு புது முயற்சியில் புத்துயிர்
    தந்து, ஒரு ஸ்வர ராகமும் தொனியும் கூட கொழிக்கும் படி ந்க்’ எழுத்தைப்
    பிரயோகப் படுத்தியதற்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். உதவாத எழுத்து என்றும்
    தமிழில் எதுவும் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சிந்தனை சிகரமான விஷயம்.
    நிறைய எழுதி எனக்குக் கவுரவம் சேர்த்திருக்கிறீர்கள், தேனம்மை. அதற்குப்
    பாத்திரனாக தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்ள இன்னும் நிறைய ஹோம்
    ஒர்க் செய்து மேலும் இன்முகத்துடன் எனது பணியையும் செய்கிறேன் என்று
    உறுதி மொழி எடுக்கிறேன்..வாழ்க, வளர்க, வெல்க. தங்களின் பணி தொடரட்டும்.
    மென்மேலும் வெற்றிகள் குவிந்து சமுதாயம் வளரவும் மனிதம் வளரவும்
    உங்கள் பணி சிறக்கவும் என்றும் பிரார்த்த்னைகளுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. // உண்மை உழைப்பே உன் துடிப்பு ! // ஆகா...!

    திரு நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. மலரும் நினைவுகள் சென்ற வருடம் இதே நாளில் 27.07.2015,ல்
    எழுதிய வார்த்தைகள் இன்றும் பொருந்துகிறது. அதிலிருந்து மீள்
    பதிவாக ஒரு நினைவூட்டத்திற்காக இன்றும் என் நண்பர்களுடன்
    பகிர்ந்தேன் நன்றிகள் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்...அவர்களே.
    தாங்களும் குடும்பமும் வாசக நண்பர்களும் எல்லா நலமும் வளமும் பெற
    வாழ்த்துகிறோம். உங்களனைவருக்குமான நித்திய பிரார்த்தனைகளுடன்
    நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)