வெள்ளி, 15 மே, 2015

தேன் பாடல்கள்.காதலும் மயக்கமும்

191.சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
தமிழ்வாணன் பாணியில் தொப்பி கண்ணாடியோடு எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பாடல். தாய் சொல்லைத் தட்டாதே 1961 இல் வந்தது .அந்தக் கால மோட்டார் காரும் அழகு.  ”பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே.”. என்ற வரிகள் அருமை.

192.அருகில் வந்தாள். உருகி நின்றாள்.
பார் மகளே பார் படம் என்று நினைக்கிறேன். மனசைச் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்./// உன்னைச் சூடி இருந்ததும் பெண் தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ.// இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு. அது மாளிகையானதும் அவளாலே. மண் குடிசையானதும் அவளாலே..///உருக்கும் வரிகள்.

193.மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
அன்னமிட்ட கையில் எம்ஜியாரும் பாரதியும் நடித்தது.சுசீலாவும் டிஎம் எஸ்ஸும் பாடியது. அசல் எம்ஜியார் போலவே நடுவில் குரல் கொடுப்பார் டி எம் எஸ். அட்டகாசம்.

194. குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு
மெல்லத் திறந்தது கதவு படத்தில் ராதா பாடும் பாடல்.  மோகன் குழலூதுவதும் இவர் பாடுவதும் ரொம்ப இயல்பாக இயைந்து இருக்கும். தேடிக்கொண்டே கடைசிவரை கண்டுபிடிக்க மாட்டார். இந்த சினிமாவில்தான் இது எல்லாம் சாத்யம். :) சின்னக்  குயில் சித்ராவின் குரலில் குழல் இனிமை.

195.காதல் என்பது எதுவரை
பாதகாணிக்கை படத்தில் சந்திர பாபு பாடும் பாடல். இவர் குரலுக்கென்று ஒரு தனி வசீகரம் இருக்கிறது. பி பி ஸ்ரீனிவாஸ் குரல் போல். சுசீலாவும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடி இருக்கிறார்கள்.நிறைய யானைகளுடன் பயமில்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை.

196. தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
படமும் நடித்தவரும் ஞாபகமில்லை. இதன் வரிகளுக்கும் இசைக்கும் ரொம்பப் பிடிக்கும். ஒரு மாதிரி இருண்ட கானகத்துள் தொலைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். 

197. பொன் ஒன்று கண்டேன்.
இது சிவாஜியும் பாலாஜியும் நடித்த காட்சி. இருவரும் பெண் பார்த்துவிட்டு வந்து பாடுவார்கள். .//உன் பார்வைபோல என்பார்வை இல்லை. நான் கண்ட காட்சி நீ காணவில்லை. என் வடிவில் நீ இருந்தாய். உன் உருவில் நான் இருந்தேன். //இரண்டு ஜீக்களும் நடித்த இந்தப் பாடல் வரிகளும் அழகு.

198.நலந்தானா நலந்தானா
தில்லானா  மோகனாம்பாளில் பத்மினி சிவாஜி நடித்த காட்சி. மேடையில் அமர்ந்திருக்கும் சிவாஜிக்குப் புஜத்தில் ஒரு காயம் இருக்கும். அதை மேல் துண்டால் மூடி இருப்பார். கண்ணாலேயே பத்மினி அவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும், பின் முந்தானையால் அந்தத் துண்டைத் தட்டிவிட்டுக் காயத்தைப்பார்த்துக் கதறுவதும் சொல்ல வார்த்தையில்லை. //இலைமறைகாய்போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று....// என்று எல்லாரும் சூழ்ந்த சபையில் பாடுவார்... அதுதான் சிறிது முரண்நகை.

199. நதியே நதியே காதல் நதியே
ரிதம் படத்தில் அர்ஜுன் பாடும் பாடல். நதியையும் பெண்ணையும் ஒரு சேர வர்ணித்துப் பாடும் காட்சிகள். காட்சியழகு மற்றும் கவிதையழகுக்காகப் பார்க்கலாம்.பிறப்பிலிருந்து இறப்பு வரை நீர் நம்மோடு எவ்வளவு சம்பந்தப்பட்டது என்று இந்தப் பாடல் கேட்டால் புரியும். 

200. காற்றே என் வாசல் வந்தாய்.
இதுவும் ரிதம் படத்தில்தான். ஜோதிகாவும் அர்ஜுனும் ராஜஸ்தான் பாலைவனத்தில் பாடும் காட்சி அற்புதம். அதிலும் சூரியகாந்தி பூத்தது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜோதிகாவின் உடை அழகு. //என்னை மறுபடியும் சிறுபிள்ளையாய்ச் செய்வாயா../// அழகான வரிகள்..

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



5 கருத்துகள்:

  1. சில பாடல்களைக் கேட்டதேயில்லை.
    பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்ற ஒற்றை வரிக்கு இணையில்லை.

    பதிலளிநீக்கு
  2. //196 . தேவதை இளம் தேவி... படமும் நடித்தவரும் தெரியவில்லை//

    பின்னூட்டமிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!! :))))

    படம் 1000 நிலவே வா. கார்த்திக் படம். எஸ் பி பி பாடல், இளையராஜா இசை.

    பதிலளிநீக்கு
  3. ஆம் அப்பாதுரை சார்

    நன்றி ஸ்ரீராம் விளக்கத்துக்கு. எனக்குப் பிடித்த பாடல் அது :)

    நன்றி டிடி சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)