புதன், 13 மே, 2015

சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.


201. நகரும் இரும்புக் கூடாரங்களுக்குள் நான் ஒரு சந்தோஷ நாடோடி.

202. பயிர்களைப் போல வளர்கிறது ஆசை.
.
மலையைப் போல நிஷ்டையிலிருக்கிறது மனம்.


203. கற்பாறைகளும், கருவேலங்களும் சூழ்ந்த இடத்திலும் பருத்தி, சன்னா பயிரிட்டிருக்கிறார்கள் ஆந்திர விவசாயிகள். எவ்வளவு கஷ்டப்பட்டு எப்படிப் பண்படுத்தினார்களோ.. உழைத்த அளவு விளைச்சல் உண்டான்னும் தெரியல..

204. காற்று அசைக்கிறது.
மரங்கள் ஆட்டம் போடுகின்றன.
மௌனமாய் நிலை கொள்கிறது மலை.

205. சிலபேர் ஸ்டேடஸ் போட்டா புரிய மாட்டேங்குது. சிலபேர் ஸ்டிக்கர் அனுப்பினாலே புரியமாட்டேங்குது. ஒய் ஒய் மக்காஸ். என்னதான் சொல்ல வர்றீங்க .. மீ பாவம்.. :(

206.  தினம் லிங்க்ட் இன், வாட்ஸ் அப் எல்லாத்துக்கும் ரிக்வெஸ்ட் அனுப்புறீங்க மக்காஸ். நான் ஃபேஸ்புக், ப்லாகர், ட்விட்டர், இண்டிப்லாகர் தவிர வேறு எதிலும் இல்ல.எங்கும் இல்ல இல்ல  இல்லவே இல்ல.  :)

207.  வெயிட் குறைக்கணும்னு நினைச்சு வாக்கிங் போறபோதெல்லாம் விதம் விதமான சாப்பாடு நினைவுக்கு வருவதேன். :)

208. ஒவ்வொரு வியாதியையும் பார்க்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாத மரணம் நமக்கு ஏற்படவேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகிறது.
‪#‎பேராசை_மயான_வைராக்கியம்‬

209. சின்னப் பசங்க கண்ணுக்கு அழகா தெரியிறதெல்லாம் நமக்கு அட்டுத்தனமாத் தெரிவதேன்.. வயசாயிடுச்சோ.. :)

210. மேகமெத்தையிலிருந்து
உருண்டு விழுகிறது குட்டி நிலவு
நீர்க்கரங்களில் ஏந்தித் தாலாட்டுகிறது தாய்நதி.


211. News :-நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.

Me :- இவ்ளோ விஷயம் இருக்கா.. நான் கடலை எண்ணெய்க்கு மாறிட்டேன். அப்ப நீங்க.. 

212. ஒரு மரம் முழுமையாக
ஒப்புக் கொடுக்கிறது
பூமிக்குத் தன்னை
தன் கிளையை, இலையை
காயைக் கனியை.
ஒரு விரக்தியற்றமனம் தன்னை
ஒப்புக்கொடுப்பதைப் போல.
 


213. கொய்யப்பட்ட முத்தப் பூக்களை
பதுக்கி வைத்திருக்கிறது
தடயமற்ற இதழ்ப் பெட்டகம்.

214. இதயம் பேசும் வார்த்தைகள்
மூளைக்குப் புரிவதில்லை
இருந்தும் இரண்டும்
ஒன்றை ஒன்று புரிந்து கொள்கின்றன
மனைவியும் கணவனும்போல.

215. சீப்பை ஒளித்துவைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்பது இன்றும் கூட சிலரின் கெடுமதியாக இருக்கிறது.

216. ப்லாகும், ஃபேஸ்புக்கும் நம்முடையது ஆனால் நம்முடையது அல்ல..

217. நமக்கு யாரென்றே முகம் தெரியாத யாரோ ஒருவரோ சிலரோ நம்மை துவேஷிக்கிறார்கள் என்பது கூட சில விஷயங்களில் உணர முடிகிறது.புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை.

#நமக்குக்கூட_எதிரிகளா!

218.ஒவ்வொரு மரமும் வளரும்போதே என்றாவது ஒழுங்கு படுத்துகிறோம் என்றோ இடநெருக்கடி என்றோ தேவையில்லை என்றோ முதிர்ந்துவிட்டது என்றோ வெட்டப்படுவோம் என்பதையும் உணரவேண்டும்.

219. பையன் :- அம்மா வீட்டு வேலைக்கு சீக்கிரம் ஆள் வைச்சிருங்க.

அம்மா :- ஏம்பா கஷ்டம் ஒண்ணுமில்ல. வாஷிங் மெஷின்ல துணி போடுறேன். சமைக்கிறது  நான் செய்தாதான் பிடிக்கும்.

பையன் :- அதுக்கில்லம்மா. நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆமா ஆமான்னு சொல்லமுடியல. அவங்கதான், “ ஆமாங்கக்கா, ஆமாங்கக்கா “ ஆமா சாமி போடுவாங்க.

அம்மா :- “ஙே ..! “

220. pulse 149 time 1:49 distance : 149

நான் நேத்து 88 கலோரிஸ் கொறைச்சேன். 
சாலட், சப்பாத்தி, தால், சாதம் , பழம் ரெண்டு கப் காஃபி ( ஆனா 4 அரை கப்பா :)
( 7700 கொறைச்சா ஒரு கிலோ வெயிட் குறையுமாம்.
பெரியவன் :- நான் நேத்து 1000 கலோரிஸ் கொறைச்சேன் .
சின்னவன் :- நான் நேத்து 300 கலோரிஸ் கொறைச்சேன்.)
இந்த ரேஞ்சில போனா நான் எப்ப ஒரு கிலோ கொறைப்பேன். 100 நாள் ஆகுமோ. ஓ மை ஆண்டவா இந்த ஃபிட்னெஸ் பூதம் பயமுறுத்துதே காப்பாத்து. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



6 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை.

    //207. வெயிட் குறைக்கணும்னு நினைச்சு வாக்கிங் போறபோதெல்லாம் விதம் விதமான சாப்பாடு நினைவுக்கு வருவதேன். :) //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதே அதே நினைவுகளுடன் நானும் எப்போதுமே :)

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே சூப்பர்..அக்கா.

    பதிலளிநீக்கு
  3. ஹஹ்ஹ அனைத்துமே அருமை சகோதரி! என்னம்மா போடறீங்கப்பா.....எங்கிருந்த்து இப்படி உங்களுக்கு மூளையில முளைக்குது!!!!

    வெயிட் குறைக்கணும்னு நினைச்சு வாக்கிங் போறபோதெல்லாம் விதம் விதமான சாப்பாடு நினைவுக்கு வருவதேன். :)// ஹஹ்ஹஹஹ் உண்மை உண்மை உண்மை....

    ஒவ்வொரு மரமும் வளரும்போதே என்றாவது ஒழுங்கு படுத்துகிறோம் என்றோ இடநெருக்கடி என்றோ தேவையில்லை என்றோ முதிர்ந்துவிட்டது என்றோ வெட்டப்படுவோம் என்பதையும் உணரவேண்டும். // ஆஹா தத்துவம்! இதெல்லாம் வேண்டாங்க

    அந்த அம்மா போட்டீங்க பாருங்க அந்த மாதிரியும், கடைசில கலோரி போட்டீங்க பாருங்க அப்படிப் போடுங்க....வெயிட்டாவாது ஒண்ணாவது....மனசு யங்கோ யங்குங்க......மிகவும் ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
  4. அனைத்தையும் ரசித்தேன்...

    எதுவுமே நம்முடையது இல்லை... 100%

    பதிலளிநீக்கு
  5. அஹா ஒரே ஸ்டேடஸா கோபால் சார் நன்றி நன்றி ஹிஹி

    தாங்க்ஸ் டா அம்மு

    மிக்க நன்றி துளசி சகோ :)

    ஆம் டிடி சகோ .. ப்லாக் போஸ்ட் போட கூட கூகுள்ல காசு கேக்கப்போறாங்களோன்னு எண்ணம் கூட அடிக்கடி ஏற்படுது :)


    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)