புதன், 1 ஏப்ரல், 2015

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.



ப்ரிய மாமா
”மா” ”மா” நீங்கள்.
இந்தக் கவிதை
உங்கள் மனவீட்டுக்குள்
அரிக்காத வண்ணப்புகைப்படமாய்
இருக்க வேண்டாம்
ஒரு சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள அனுமதியுங்களேன்

எப்படி முடிகிறது உங்களால்
மனத்தடி மண்ணில்
கப்பும் கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க நினைக்கும்
ப்ரிய விதைகளை
ஆழப் புதைக்க

இன்னும் எனக்கு நீங்கள்
ஆச்சர்யம் உண்டுபண்ணும்
மனிதர்தான்


மனிதச் சிலைகளுக்கு
அறிவுப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கும்
நீங்கள் ஓர்
ஆச்சர்யகரமான சிற்பி

மனித ஊதல்களுக்குள்
தூரமாய் நின்று அடக்கமாய்
சன்னமாய் வாசிக்கும்
அமைதி இசைக்கருவி நீங்கள்

கரைகளுக்கும் அலைகளுக்கும்
தள்ளாடும் படகாய்
நான் இருந்துகொண்டிருக்கும்போது
கலங்கரை விளக்கங்களை
சரியாகத் தேர்ந்தெடுக்கும்
கப்பலாய் நீங்கள்

ஓ.
பிரமித்துப் போகிறேன்
உறவுகள் எனும் கணப்புகளுக்குள்
நாங்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்போது
எங்கோ தனிமைப் பாலைவனத்தில்
வெறுமைக் குளிரில்..

நினைக்கையில்
என் சுவாசம் தவறுகிறது.

நீங்கள் ஒரு ஒலிக்குறிப்பு
அடங்கிய புத்தகம்
உங்களை என்னால்
உணரத்தான் முடிகிறதே தவிர
பிறருக்கு
உணர்த்த முடிவதில்லை
ஏன் கவிதையிலும் கூடத்தான்.


குறிப்பு :- 1982 ஆம் வருட கல்லூரி டைரிக் குறிப்பில் எழுதிய கவிதை இது. 

எல்லாரும் தனக்குப் பிடித்த பெயரில் வலைப்பூ தொடங்குவாங்க. என் அன்பு மாமா என்னுடைய வலைத்தளம் சும்மாவின் பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்காங்க. அதில் தொடர்ந்து பதிவிட்டும் வர்றாங்க. ( அமெரிக்கா, ஐரோப்பா, நாணயம், கல்வி , பயணம், அறிவியல், வாழ்வியல், ஆரோக்கியம், பொருளாதாரம் பற்றிய அருமையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன. ) 

அவங்க வலைத்தள இணைப்பு இது.

சும்மாவின் மாமா

 இதையும் பாருங்க :)


என் வலைத்தளத்தில்/பத்ரிக்கைகளில் இன்னும் வெளியிடப்படாத இரு பயணக் கட்டுரைகளில் இருந்து.  :- 

 
மாமா அனுப்பிய தீபாவளி க்ரீட்டிங்க் கார்டு. இதன் பின்புறத்திலேயே அவர் இந்தியா வரும் விபரம் குறிப்பிட்டு இருப்பார். :) இது 1977/78 என்று நினைக்கிறேன்.



////சீர்மிகு சிங்கப்பூர் பாகம் – 1. ஆமையும் முயலாமையும்


சிங்கப்பூர் என்றாலே பல வருடங்களுக்கு முன்பு அங்கேயிருந்து என் மாமா அனுப்பும் க்ரீட்டிங்க் கார்டுகள்தான் ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 78 - 80 களில் பகோடா அமைப்பு கட்டிடங்களின் முன் தோட்டங்களில் பெல்ஸ் , டாப்ஸ் போட்ட சீன மலேஷிய நங்கையரில் எழில் உருவங்கள்தான் ஞாபகம் வரும்.



ட்ரேட் கேம், ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸ், சிங்கப்பூரின் அழி ரப்பர்கள், வாசனை க்ரேயான்கள், மடக்கி விரித்து பென்சில் சீவும் கத்திகள், பேனாக்கள், தந்தக் கலரில் சீப்புகள், ஆல்பங்கள், ஜெர்சி, சாட்டின், டபிள் நெட்டட் துணிகள், மல்லிகைப்பூ செண்ட், பாடி ஸ்ப்ரே, பேப்பருடனே சாப்பிடக்கூடிய வெள்ளை மில்க் சாக்லெட்டுகள் , வெஜிடபிள் கட்டர்ஸ், வித்யாசமான பீங்கான் சாமான்கள், பொம்மைகள், பாட்டரியால் ஓடும் ஆடும் பாடும் பொம்மைகள், பறக்கும் தட்டுகள், உயர்தர ஜ்யார்ஜெட், ஷிபான், கிளியோபாட்ரா புடவைகள், மிக்கி மவுஸின் இரு கைகளும் சின்ன முள் பெரிய முள்ளாய்ச் சுற்றிவர மிக்கி மவுஸ் பொம்மை பதித்த கைக்கெடிகாரங்கள் என்று ஒரு சொர்க்க லோகமே மாமாவுடன் வந்து இறங்கி இருக்கும். பெட்டி பெட்டியாய் சாமான்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வாசனையான பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுக்கும்போது அவர் முகமும் நம் முகமும் ஒருங்கே மலர்வது உறவின் பெருமை.  



சிங்கப்பூரின் சுத்தம், அழகுணர்ச்சி அந்த ஊரை அவர்கள் பராமரிக்கும் முறை ஆகியவற்றையும் ஆசிரியர்களை அவர்கள் மதிக்கும் விதம் பற்றியும் , அம்மக்களின் நட்புணர்வையும் பற்றிக் கேட்கக் கேட்க நாமும் செல்ல வேண்டும். அந்த இந்திர லோகத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதுண்டு. 
ஓரிரு வருடங்களுக்கு முன் நாங்களும் சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. ///


////நாங்க உறவினர் வீட்டில் இருந்து ஒரு விடுமுறை நாளில் காரில் சிங்கப்பூரில் இருந்து மலேஷியா ஜோகூர் பாரு வழியாக சென்றோம். ஜோஹூர் பாருவில்தான் என் மாமா ஆசிரியராக 90 களில் பணிபுரிந்திருந்தார். இந்த ஊரில்தானே பல்லாண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்து தனித்து வசித்திருந்திருப்பார் என்ற எண்ணம் சுழன்றது என் மனதில்.///



உறவுகளிலே மிகச் சிறந்த உறவு தாய்மாமா உறவுதான். அருமையும் பெருமையும் மிக்க நான்கு மாமன்மார் கிடைத்திருக்கிறார்கள் எங்களுக்கு. எந்தச் சூழ்நிலையிலும் எங்களைப் புரிந்துகொண்டு எங்களை வாழ்த்தி எங்கள் வளர்ச்சிக்கு மென்மேலும் துணை செய்யும் அவர்கள் கிடைத்தது தெய்வ ஆசீர்வாதம்தான். இந்தக் கருத்தைக் கொண்டிருப்பது  நாங்கள் மட்டுமல்ல எங்கள் தந்தையும் சேர்த்து உரைப்பதுதான் மிகப் பெருமை.  




என் புத்தகங்கள் சென்னையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் என் உடன் நின்றது சென்னையில் இருக்கும் ராமு மாமா, நாகு மாமா இருவரும்தான். என் சகு மாமியும் வந்திருந்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.  அதே போல் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் என் நடு மாமா அவர்களும் என்னை முன்னிறுத்திப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.




பல நாட்களாக யோசித்தது. நேற்று பார்க்காமல் போய்விட்டேன். அஹா மிஸ் பண்ணிட்டனே. ப்லாக் போஸ்ட் போட்டு வாழ்த்தணும்னு இருந்தேனே மாமா.. கல்லூரிக் காலத்தில் உங்களைப் பற்றி எழுதிய கவிதையோடும் நீங்க தீபாவளிக்கு அனுப்பிய ஒரு வாழ்த்தோடும். ஹ்ம்ம் பார்க்காம போச்சு. எனிவே லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.
 
டிஸ்கி :- எங்க மாமாவை வாழ்த்துங்க மக்காஸ். இதையும் பாருங்க

1. ஹைர ஹைர ஐரோப்பா..

2. திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-
 
சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

6 கருத்துகள்:

  1. தாய் மாமன்கள் பற்றிய புராணங்களும்
    படங்களும் அருமையோ அருமை.

    சிங்கப்பூர் சரக்குகள் பற்றிய பட்டியல் பிரமாதம் !

    தங்களுக்கும் தங்கள் மீது அன்புள்ள தாய்மாமாக்களுக்கும்
    பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி. இவ்வளவு கவணம் பெறக்கூடியவைகளா அவ்விஷயங்கள். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. “ஏழு வயதிலேயே காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து ஆயா வீட்டிற்கு ஞாபகத்துடன் வழி தெரிந்து தனியாக தைரியமாக வந்தவள்”- மாமி

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபால் சார் உள்ளபடியே உன்னதமான உறவுதான் . அதைக் கொடுத்த தெய்வத்துக்கு நன்றி.

    ஆம் மாமா அந்த மிக்கி மவுஸ் கெடிகாரத்தை அணிந்து கொண்டு வெளியே சென்றால் நாங்கள் ரோட்டைப் பார்த்து நடக்கமாட்டோம். அடிக்கொருதரம் மணி என்ன என்று ஸ்டைலாக இடது கையை உயர்த்தி அந்தக் கெடிகாரக் கைகளையே ரசித்தபடி நகர்வோம். :) மிக்க நன்றி மாமா. :)

    பதிலளிநீக்கு
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மாமாவிற்கு எனது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன் சகோ :)

    வாழ்த்துக்கு நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)