புதன், 25 மார்ச், 2015

என் வீடு என் சொர்க்கம்.

161. மேகத் தோணி மிதக்கிறது
துடுப்பில்லாமல்.
கன்னத்தில் கைவைத்து
எட்டிப் பார்க்கிறது நிலவு
எப்போது தரையிறங்குவோமென.

162. சில வருடங்களுக்கு முற்பட்ட
நாம் இல்லை இப்போது
நம் கிறுக்கல்களில்
தூசு படிந்திருக்கிறது.
முதுமைச் செதில் உதிர
அதன் மேலேயே ஒப்பனை செய்து கொள்கிறோம்
பேசத் தெரியாத உனக்கு
இன்று வார்த்தைகள் மிச்சமில்லை
மரத்தைப் போல உலுக்கிக்கொண்டே இருக்கிறாய்
எல்லாவற்றிலும் விட்டு விடுதலையாகி
நீ வேராய் எஞ்சும் தருணத்துக்காய்க் காத்திருக்கிறேன்
கிளையா அதில் கிளியா எனப் பகுக்கமுடியாமல்.
நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி
வலம் வந்துகொண்டிருக்கின்றன
சூரியனும் சந்திரனும்.



163. தூரமாய் நிற்கும்
தென்னைகளுக்கிடையில்
தூதுபோய்க்கொண்டிருக்கிறது
ஒரு மைனா. 


164.கிட்டத்தட்ட ஒரு மாசமா இந்த ரவுண்ட்ஸ் ந்னு இருக்க லிங்க ஏன் க்ளிக் பண்ணி எல்லாரும் இன்பாக்ஸுக்கு அனுப்புறீங்க..
அது ஸ்பாம் ...
இனி க்ளிக் பண்ணாதீங்க யாரும்.. முடிலடா சாமி 

165. துளி மல்லிகை சுமந்தவள்
கடந்துபோகிறாள்.
கோடையை
நினைவுகூர்கிறது ஞாபகம்.
புழுக்கத்தை
நினைவுகூர்கிறது தேகம்
வியர்வையை
நினைவுகூர்கிறது நாசி.
பூவிதழ்களை
நினைவுகூர்கிறது நெற்றி 


166.ப்ரொஃபைல் பிக்சரே இல்லாம ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட் வருது.. ஆமா அதுல 100, 200 ந்னு ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. எப்பிடிப்பா ஆளே தெரியாம இப்பிடி வள்ளலா நட்பை அள்ளிக் கொடுக்குறீங்க..
-- ‪#‎YOU_ARE_ALWAYS_GREAT_MAKKAS‬ :)

167. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே வீடு திரும்பும் ஏக்கம் வந்துவிடுகிறது.



168.தம்பி தங்கைகள் போஸ்டர் போடவே என்னுடைய wall இருக்கு. ஒரு முறை கூட என் ஸ்டேடஸ் எதிலும் கமெண்டோ லைக்கோ போடாதவர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்ட அல்ல. 4 நாள் ஊருக்கு போய் வந்தால் அல்லது சனி ஞாயிறு ஆன்லைன் வராட்டா போஸ்டர் போடுபவர்களை கண்டிப்பாக அன்ஃப்ரெண்ட் செய்துவிடுவேன். 3:)

169. ஊருக்கு போறோம்னா வீட்டைப் பூட்டுறோமோ இல்லையோ ஃபேஸ்புக் சுவற்றைப் பூட்டிட்டுப் போவேண்டியதா இருக்கு..:)

170. இலக்கியன். ஏன் ராசா ஏன் என் கதையை எடுத்துப் போட்டு என் பேரைப் ப்ரபலப் படுத்துறே.. ஹ்ம்ம்.. இது காலேஜ் படிக்கும் போது எழுதினது. இப்ப எழுதி இருக்க கதையை எல்லாம் அனுப்புறேன். பேரைப் போட்டுப் போட்டுக்க ராசா.
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=64821.0%3Bwap2

இது என் தளத்தில் வெளிவந்த கதை. இது போல் என்னுடைய தளத்தில் வெளியிடாமல் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகளை அந்தத் தளத்திலிருந்து எடுத்து இது போல 4 கதைகள் வெளிவந்திருக்கின்றன. என்ன செய்வது புக் போடும் ஆசையை அவை மிரட்டி வைக்கின்றன. நம்ம பேரைப் போட்டுக் கதையைப் போட்டு இருக்காங்களே என்று சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.


171. எப்பேர்ப்பட்ட மனிதர்களும் தேவர்களையும் தேவதைகளையும் ஆராதிக்கிறார்கள். 

172. சனிக்கிழமை ஏதோ அப்செட்டா  இருந்தேன். அதுக்காக ஃபோட்டோவை எடுத்தேன். எப்ப ஃபேஸ்புக்குல எட்டிப் பார்த்தாலும் உன்னோட அறுநூத்திச் சொச்சம் ஃப்ரெண்ட்ஸும் ஃபோட்டோ போட்டு இருக்காங்க. நீயும் ப்ரொஃபைல் படம் போடுன்னு ஏன் நச்சரிக்கிறே எஃப் பி . இது வரை போட்டதெல்லாம் பத்தாதா. #feeling down.

173. split personalities in fake ids.. சாதாரணர்களுக்காக ஒண்ணு, அறிவுஜீவிகளுக்காக ஒண்ணு அப்புறம் இன்னும் எத்தனையோ... எவ்ளோதான் க்ளவரா அவங்க போஸ்ட் போட்டாலும் நமக்கு தெரிஞ்சவங்களே அதுல இருக்கது ஏதோ ஒரு ஸ்டேஜுல கண்டுபிடிக்க முடியுது.

174. ஒருவர் மேல் உள்ள வெறுப்பு இன்னொருவரின் வெற்றிக்கு வாய்ப்பாகிறது.


175. உலகம் மிக மிக அழகானதுதான்.

#ஆனால்

என் வீடு என் சொர்க்கம். 

176. உண்மையான ஐடிய ஃபேக் ஐடின்னு சந்தேகப்படுறதும். ஃபேக் ஐடியை உண்மையான ஐடின்னு நம்புறதும்...... எனக்கு மட்டும்தான் நடக்குதா.. :) 

177. என்னுடைய நட்பு வட்டத்தில் 640 பேர்தான் இருக்கீங்க. எல்லாருமே கிட்டத்தட்ட 2009 ஆகஸ்ட்லேருந்து நட்பு வளையத்தில் இருப்பவங்கதான்.

பொதுவா ஒரு நாளைக்கு 30 பேருக்கு மேலே நோட்டிஃபிகேஷன் பார்க்க முடிவதில்லை. அதுவும் ஒரு சிலர் 5 முதல் 10 போஸ்ட் வரை போடுவதால் ஹோம் பேஜில் யாருடையது வருதோ அதை மட்டும் லைக் போட்டு கமெண்ட் போடுறேன். ( அதிலும் எஃப் பி வேற சில பல பக்கங்களை அனுப்பி லைக் பேஜ் நு இண்டர்ஃபியர் பண்ணுது.

எனவே நான் சொல்ல வந்தது என்னன்னா,,

நான் உங்க பேஜுக்கெல்லாம் அடிக்கடி வரலைன்னு மனக்குறை இருந்தால் என்னை நீங்க தாராளமா நட்பு வட்டத்திலேருந்து நீக்கலாம். ( சிலர் நீக்கி இருந்ததை நேத்துத்தான் அறிந்தேன். ! )

இதை சொல்லத்தான் இந்த போஸ்ட். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. நாம் நட்பு இணைப்பில் இல்லாவிட்டாலும் வேறு யார் போஸ்டிலாவது சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நட்பில் இணைந்திருப்பதா , இல்லையா என்பது உங்கள் அதிகாரத்துக்கும் உட்பட்டது. SO CHOICE IS YOURS :)


178.  காரியம் முடிந்ததும் கருவிகளுக்கு யாரும் நன்றி செலுத்துவதில்லை.

179.பாத்திரத்தோடு ஒட்டாத அளவு ஞானம் பிறந்துவிட்டது.
.
.ஞானம் பிறந்துவிட்டது என்றா எழுதினேன்..
சாரி கை தவறிடுச்சு.
ஆணம் வெந்துவிட்டது.

‪#‎கைமா‬.

180.வீழ்ந்து கிடக்கிறேன். . . . .. . . . . .. . . . . வீட்டுக்குள்ளதான். . .தோல்வியல்ல சோம்பல் ஹிஹிஹி. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



4 கருத்துகள்:

  1. முடிலடா சாமி ஹா... ஹா...

    மைனா அழகு...

    திருப்தியான சோம்பல் தொடரட்டும்... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  2. அனுபவம் & சிந்தனைகள் செம..!!

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)

    நன்றி டா ப்ரியசகி அம்மு :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)