புதன், 21 ஜனவரி, 2015

அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்

தேனக்கா....

முகநூலில் கிடைத்த நல்ல நட்பு.

நிறைய பகிர்ந்திருக்கிறோம். நிறைய பேசியிருக்கிறோம்.

படபடவென பேசி அதே வேகத்தில் பாசத்தால் திக்குமுக்காடச் செய்யும் அன்பின் அருவி Thenammai Lakshmanan

தனது அன்னப்பட்சி நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். கவிஞர் என்ற அடைமொழி சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. நானும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி வைத்திருந்தேன். மறுநாள் அகநாழிகை பதிப்பகத்தில் நிகழ்ச்சி. தமிழச்சி,தேனக்கா,வாசு என்று மனதிற்கு நெருங்கிய நட்புகள் தானென்றாலும் மெல்லிய பதட்டம் இருந்தது. அதை மீறிய மகிழ்வு. கல்லூரி நாட்களுக்குப் பின் இலக்கியம் பேச ஒரு வாய்ப்பென்பதிலும் கணவரும் உடன் வருவார் என்கிற துள்ளலும்.



விதி வேறுவிதமாக இருந்தது. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார். நேரில் பங்கேற்க வேண்டிய கட்டாயம். தயங்கித் தயங்கி வாசுவிடம் சொன்னேன்.
தேனக்காவிடமும். மெல்லிய மௌனத்திற்குப் பின் பெருந்தன்மையாய் மன்னித்தார்கள். நான் பங்கேற்காதது குறித்து மிகுந்த வருத்தமிருந்தது.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததென அக்காவே அலைபேசினார்கள். அதன் பின் தான் இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடுமென அழைப்பு வருமளவு டெலிபதி வேலை செய்கிறது எங்களுக்குள்.

சாதனையரசி தேனக்கா!

அன்னப்பட்சி தேனக்கா!

எழுத்தால் வானுயர எழும்பி நிற்பினும் மனத்தால் இன்னும் நீங்கள் ‘ங்கா’ குழந்தை தான். வெள்ளந்தி மனமும் வெகுளிப் பேச்சும் உங்களை அணுக்கமாகச் செய்கிறது அக்கா!

அடுத்த புத்தகத்துக்கென காத்திருக்கிறோம். இன்றைய நாள் இனிதாகட்டும்.
வாழ்க வளமுடன்!

--- அடுத்தடுத்த புத்தகத்தகங்களுக்காக நானும் காத்திருக்கிறேன் கயல். நேரம் வாய்க்கும்போது சிறுகதைத் தொகுதி, சமையல் குறிப்பு, கோலங்கள் அனைத்தும் புத்தகமாக வடிவம் பெறும் கயல்விழி. அன்றும் உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு தேவை. என்றும் நன்றியறிதலுடன் உங்கள் கரம் பற்றி .. அன்பின் தேனக்கா. :)

டிஸ்கி :- எங்கள் நூல்கள்  2015,  38 வது சென்னைப் புத்தகக் கண்காட்சி, அகநாழிகை பதிப்பகம்,  “அரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி” யில் கிடைக்கும். 

4 கருத்துகள்:

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நிகண்டு

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)