வியாழன், 4 டிசம்பர், 2014

தளவாடங்கள்.


படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும்
நடந்து களைத்திருக்கிறது போர்.
அதனூடே ஓடிக்களைத்தவர்கள்
பல்வேறு தேசங்களில்
ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள்.
தனக்கான ஆயுதம் இதுதானென்ற
வரைமுறையின்றி
இயற்கைக் கூறனைத்தையும்
இருகரம் நெருக்குகின்றது போர்.
அதன் காலடித் தடங்களில்
நசுங்கிக்கிடக்கின்றன
பால் புட்டிகளும் சயனைடு குப்பிகளும்.
சுமக்கமுடியா சவங்களுடன்
புலம்பித் திரியும் போரின் முதுகிலமர்ந்து
தங்கள் ஆயுதங்களைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்
ஆயுத வியாபாரிகளும் போதை வியாபாரிகளும்.
கண்கள் தொலைந்து கைகளும் கால்களும் இழந்து
இரத்தம்தோய்ந்த பிணங்களின்மேல் விழுந்து
அழுதுகொண்டிருக்கிறது யுத்தம்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 20. 7. 2014 திண்ணையில் வெளிவந்தது.

3 கருத்துகள்:

  1. யுத்தமே தேவையின்றி மக்கள் மடிந்து கொண்டிருப்பதை படம் பிடிச்சிருக்கீங்க... வருத்தமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. ஆம் எழில். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)