திங்கள், 17 நவம்பர், 2014

கணவன் அமைவதெல்லாம்..

61. சகோ எல்லாரும் பிறந்த வருஷத்த இங்க எழுதுங்க.. யார் அண்ணன், யார் தம்பின்னு தெரியல.. ( நேத்துதான் காலேஜ் படிக்கிற மாதிரி இருந்த ஒரு தம்பிக்கு காலேஜ் போற மக இருக்கான்னு தெரிஞ்சுச்சு.. ! )

*******************************************

62. எது ரொம்பப் பிடிக்குதோ அதே ஒரு சமயம் வெறுக்குது. எது ரொம்ப வெறுக்குதோ அதே ரொம்பப் பிடிக்குது.. ஹாஹா கொழப்பமா இருக்கா எனக்கும்தான் :)

******************************************

63. முன்ன பத்துமணியானா பக்கத்துவீட்டுல கொஞ்சநேரம் அரட்டை அடிப்போம். இப்ப ஃபேஸ்புக்குல.. மனுஷ சுபாவம் மாறவே இல்ல.  :)

******************************************

64. இனிப்பு சீடை விக்குது., பட்சணமெல்லாம் விக்குது., பிரியாணி கூட விக்குது.. கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்தா நல்லா இருக்கும்.. :) :) :)

******************************************

65. மிட்நைட்ல முழிப்பு வந்தாலும் ஃபேஸ்புக்கை எட்டிப் பார்க்கலாமான்னு நெனைக்கிறது எத்தனை பேரு. :)

********************************************

66. வெளியே ஒரே மழை.. ஜன்னலோரம் உக்கார்ந்து கல்கியோட ஒரு புத்தகமும் வேகவைச்ச சோளக்கருதும்.. எது டேஸ்டுன்னு சொல்ல முடியல.. :)

********************************************

67. புயலுக்குப் பின்னே அமைதி என்பது இதுதானா.. நிசப்தம் கூடக் காதை அறைகிறது. பக்கத்துணையாக பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு சின்ன நாய்க்குட்டி பிஞ்சுக்குரலில் கத்திக் கொண்டே இருக்கிறது. எடுத்து வளர்க்கிறாங்களா.. அல்லது அம்மாவைப் பிரிந்த துயரமா தெரியலை.. என்னவோ போல இருக்கு..


*********************************************

68. எதைப் போட்டாலும் எடுக்கலாம். ஆனா.. ஆனா.. மொக்கையைப் போட்டா மட்டும் எடுக்கவே முடியாது.. no no guys and gals.. no violence plz.. no kolai veri plz.. esc..:))))))) 

***********************************************

69.   பத்து கேள்வி கேட்டா ஒரே ஒரு பதில் சொல்றவர் ஒரு ஆண்.

யாராவது ஒரு வார்த்தை சொன்னா போதும். அதுக்கு பத்து பிஹெச்டி தீசிஸ் கொடுக்குறவங்க .. வேற யாரு நாமதான்.:)) cheers galssssssssss..


*********************************************

70. யாரையாவது காணோம் என்று தேடுவதும், யாரும் கூடவே இருக்கவேண்டும் என்பதுமாகவே கழிகிறது பொழுது.., முகநூல் குடும்பம் பெரிதாகி விட்ட பின்னும்கூட.. திடீர் திடீர் தனிமை..

*****************************************

71. குடும்பப் பஞ்சாயத்தில் ஜட்ஜுகள் பெருகிவிட்டார்கள்.. 

தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி. டான்ஸ் ஜட்ஜுகள் போதாதென்று..


.ஆமா கோர்ட்டை எல்லாம் எப்ப டிவி ஸ்டேஷனுக்கு மாத்தினாங்க.
 


******************************************

72. ஏதோ ஒன்றிடம் இருந்து எதையோ மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். சமயத்தில்

நம்மிடமிருந்து நம்மையே.. 

******************************************

73. தனக்குத் தானே செய்து கொள்ளும் துரோகம்.. தாழ்வு மனப்பான்மை கொள்வது. சுயம் பற்றிய சரியான மதிப்பீடும், அதிலிருந்து உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சியுமே வாழ்வின் நிறை.

****************************************

74. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..
கணவன் அமைவதெல்லாம்....

>
>
அப்பா அம்மா கொடுத்த வரம்..
 


*****************************************

75.   பாங்க் பாலன்ஸ்/ லாக்கரையோ திறந்து பார்த்தாகூட இவ்ளோ சந்தோஷம் கிடைக்காது..
>
தினம் ஃபேஸ்புக்கைத் திறந்து லைக்ஸ் கமெண்ட்ஸைப் பார்க்கும்போது.. தன்னையறியாம நம்ம முகத்துல பூக்கும் புன்னகையை எதிர்ல இருக்கவங்க கண்ணுல பார்க்கலாம்..


*****************************************

76. அப்பா என்றால் அன்பு.. என்னை அன்பாலே செய்த அப்பாவுக்கும், அன்பாலே நிறைந்திருக்கும் எல்லா அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..  

*****************************************

77.  உலகம் இன்னதென்று புரியப் புரிய அறியாமை மட்டுமல்ல.. குழந்தைத் தனமும் குதூகலமும்கூடப் போய்விடுகிறது..

******************************************

78. தங்கைஸ் கிறுக்காமல் என் சுவர் கெட்டுப் போய்க் கிடக்கிறது. சகோ அண்ட் நண்பர்களும். வெறிச்சுன்னு இருக்க மாதிரி இருக்கு. வீட்டுக்கு வரவே பயமா இருக்கு தனியா இருக்க மாதிரி. (எப்பிடி நிறைய பேர் பூட்டி வைச்சிருக்காங்க..?) சோ ஐ ரிலீஸ் தெ லாக்.:)

*********************************************

79. கடவுளே.. எந்த க்ருப்பிலயும் க்ளப்லயுமில்லாம நிம்மதியா இருந்தேனே.. எப்ப என்னை இவ்வளவு க்ளப்புல இணைச்சாங்க.. காப்பாத்து. இன்பாக்ஸ் & நோட்டிஃபிகேஷன் நெம்பி வழியுது..

# ஒரு குரூப்பாத்தான் அலையிறாங்க. :) 

*******************************************


80.  Cheran Pandian னின் பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், Parthiban Radhakrishnan புதியபாதை, நீ வருவாய் என , Murugadoss Arunasalam மின் ரமணா, Prakash Raj இன் அறிந்தும் அறியாமலும் போல நேற்று என்னை நெகிழ வைத்த படம் எங்கேயும் எப்போதும்.. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரசிக்க வைத்த படம், ஆக்சிடெண்ட் சீன்களின் தீவிரம் மனதை திடுக்கிட வைத்தது தவிர.. உடல் உறுப்பு தானம் பற்றியும் மெசேஜ் சொன்ன இயக்குநர் சரவணனுக்கு வாழ்த்துக்கள்.

********************************************

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


22 கருத்துகள்:

  1. //கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்தா நல்லா இருக்கும்.//

    அதென்ன... இதுவும்தானே விற்கிறது?

    மனைவிக்கு இறைவன் என்றால், கணவனுக்குக் கடவுள்ங்க!

    ஆமாம்... இதெல்லாம் என்ன? சிந்தனைச் சிதறல்களா? :)))

    பதிலளிநீக்கு
  2. நன்றி பிரிய சகி

    நன்றி ஆதி வெங்கட்

    ஸ்ரீராம் நான் சொல்லவந்தது விசேஷ பண்டிகைக் காலங்களில் அடையார் ஆனந்த பவன் போன்ற ஸ்வீட் கடைகளில் கோகுலாஷ்டமின்னா உப்புச் சீடை, வெல்லச் சீடை, தீபாவளின்னா ஸ்வீட்ஸ் விக்குது சிலர் ரம்ஜான்ன்னா பிரியாணி கூட சில இடங்களில் விக்குது வாங்கி சாப்பிட்டிருவோம்னு சொன்னாங்க. :)

    அதே போல பொங்கலன்னிக்கு சர்க்கரைப் பொங்கலும், விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் கடைகளில் வித்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். ( கோயில்களுக்குப் போனா ப்ரசாதமா வாங்கி சாப்பிடலாம். )

    பதிலளிநீக்கு
  3. /// சிலர் ரம்ஜான்ன்னா பிரியாணி கூட சில இடங்களில் விக்குது வாங்கி சாப்பிட்டிருவோம்னு சொன்னாங்க. :)/// அடையார் ஆனந்த பவனில் இல்ல. வேறு கடைகளில் :) அல்லது இல்லங்களில் செய்து விற்பனை செய்வது.

    பதிலளிநீக்கு
  4. மனைவிக்கு இறைவன்னா கணவனுக்கு கடவுளா.. :) அதெல்லாம் அப்பா அம்மாதான் :)

    ஆமா இதெல்லாம் முகநூல் மொழிகள். :)

    பதிலளிநீக்கு
  5. மாம்பலம் தாயார் கடை, மற்றும் சில இடங்களில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உட்பட்ட இடங்களில் கொழுக்கட்டை கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ///மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..//
    அது சரிங்க ஆனால் கணவன் அடிவாங்குவதெல்லாம் (பூரிக்கட்டையால்) யார் கொடுத்த வரமுங்க?

    பதிலளிநீக்கு
  7. //பாங்க் பாலன்ஸ்/ லாக்கரையோ திறந்து பார்த்தாகூட இவ்ளோ சந்தோஷம் கிடைக்காது..//
    அப்ப சந்தோஷம் வராத பேங்க லாக்கர் கீயை நீங்க ஏன் வைச்சிருக்கீங்க அத நம்மகிட்ட கொடுத்துடுங்க நான் சந்தோஷமா வைச்சுகிறேன்

    பதிலளிநீக்கு
  8. @ஸ்ரீராம். இப்ப காதலிக்கிறவங்க மால் அது இதுன்னு போறாங்க அந்த காலத்தில் என் மனைவி என்னை இந்த மாம்பலம் தாயார் கடையில்தான் வந்து மீட் பண்ண சொல்லுவா.

    பதிலளிநீக்கு
  9. அட!

    அந்த அடைசலான இடத்திலா! கூட்டம் எப்பவும் நெரியுமே...!

    பதிலளிநீக்கு
  10. மாம்பலம் தாயார் கடை எங்கே இருக்கு ஸ்ரீராம். ரயில்வே ஸ்டேஷன் கிட்டயா.. ?

    அவர்கள் உண்மைகள்.. என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.சே பாவம் பெண்கள். (இப்பவுமா பூரிக்கட்டை பெண்கள் மாறவே இல்லையா.. ஹாஹாஹா)

    நிச்சயம் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க சாவிய கூரியர்ல அனுப்பி வைக்கிறேன் அவர்கள் உண்மைகள். :)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  12. ஆமாம். ரெண்டு பக்கமும் தாயார்க் கடைகள் உண்டு. ரெங்கநாதன் ஸ்ட்ரீட் பக்கம் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததுமே ஐஸ்வர்யா ஹோட்டல் வரிசையில் நாலாவது கடையோ, அஞ்சாவதோ...

    அந்தப் பக்கம் ஒரு புத்தகக் கடை உண்டே அது தாண்டி. அங்குதான் கொ.க மாலை வேளைகளில் கிடைக்கும். யாரைக் கேட்டாலும் இடம் காட்டுவார்கள்!

    (கமெண்ட் போடலாமில்லே.... 'வலைப்பதிவர் ஒற்றுமை' போட்டுட்டீங்களே!) ;)

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் நான் ஒரு முறை என் முகநூல் தோழி விஜியை சந்திக்க லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்தில் இருந்து அந்த ரயில்வே பாலத்துக்கு சென்றேன். அது டி நகருக்கு இந்தப்பக்கம்தான் இருந்தது. அந்த ரோட்டில் ஐஸ்வர்யா ஹோட்டலைப் பார்த்தேன்.

    அதனருகே ஒரு கடையில் மாலை சுமார் 5 1/2 மணி அளவில் பலர் ( ஆண்கள் மட்டும்தான் ! ) நின்றுகொண்டு சுடச் சுட பருப்பு போளி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடையாகத்தான் இருக்கும் என்பது என் யூகம் சரிதானா..

    அங்கேயிருந்து இடப்பக்கம் திரும்பினால் மாம்பலம் மார்க்கெட்டும். அதை ஒட்டிய ரயில்வே இரும்புப் படிகளும் இருக்கும்.. மேலே ஏறினால் அங்கே ஒரு டிக்கட் கவுண்டரும் இருந்தது

    ஹாஹா ஒரு கடைக்கு எவ்ளோ டிஸ்கிருஷன் கொடுத்துருக்கேன்.

    ************

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் போட்டா என்ன பேஷா கமெண்ட்ஸ் போடலாம். ( ஷொட்டு/கொட்டு ) :) :) :) :)

    பதிலளிநீக்கு
  14. கொ க = கொழுக்கட்டை!

    நீங்கள் சொல்லும் இடம் சரிதான்!

    பதிலளிநீக்கு
  15. சாயந்திர நேரம் பசி வேற. கொ க பார்த்து கொண்டைக்கடலை சுண்டல் என்று நினைத்துக்கொண்டே ஜொள்ளிவிட்டு பிஸ்கட் சாப்பிட்டு நரசுஸ் காஃபி குடித்தேன் :)

    அது கொழுக்கட்டையா. :)

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)