செவ்வாய், 11 நவம்பர், 2014

அதிர்ஷ்டப் புல்



அதிர்ஷ்டப் புல்.


வீட்டில் அதிர்ஷ்டத்துக்கு எத்தனையோ வளர்ப்பாங்க. மீன், மணி ப்ளாண்ட் அப்பிடின்னு. இப்ப நிறையப் பேர் மூங்கில் வளர்க்கிறாங்க அதுதாங்க ட்ராகேனா ப்ரவுனி ( DRACAENA BRAUNII) அப்பிடிங்கிற புல் வகையைச் சார்ந்த மூங்கில். பொதுவா மூங்கில் அல்லது பிரம்புல பின்னின கூடைசேர், சோஃபாதான் பார்த்திருப்போம். இத சாண்டர்னு ஒரு தோட்டக்காரர் பேரோட சேர்த்து ட்ராகேனா சாண்டரியனான்னு அழைக்கப்படுது.


லால்பாகில் மூங்கில் காடு

இத வீட்டில் வளர்க்க ரொம்ப வெளிச்சம் சூரிய ஒளி, காத்து ஏதும் தேவையில்லை. சும்மா சோஃபா, டீப்பாய் ஜன்னல் இப்பிடி எந்த இடத்துலயும் ஒரு கப்புல தண்ணீர் ஊத்தி இதுல ஒரு துண்டைக் கிள்ளி வைக்கலாம். மண் இருந்தாலும் போட்டு அலங்காரக் கல் எல்லாம் போட்டு கப்ல வைக்கலாம். இருக்க இடத்துலேயே துளிர்க்கும் தன்மை வாய்ந்தது. ஊருக்குப் போனா அச்சோ வாடிப்போயிடுமோன்னு  ரொம்ப கவனிப்பு தேவையில்லை. வீட்டுக்குள்ளேயே ஒரு க்ரீன் ஹவுஸ் எஃபக்ட் கொடுக்கும் இது.
லால்பாகில் மூங்கில் காடு

சாதாரணமா 1 இன்ச் லேருந்து 100 அடி வளர்ற வகையிலும் மூங்கில்கள் விதம் விதமா இருக்காம். இது பல வருஷங்கள் வாழும் தன்மையுடையது. ரைஸோம் வகையைச் சார்ந்தது. இதோட வேறு பெயர்கள் சாண்டர்ஸ் ட்ராகேனா,ரிப்பன் ட்ராகனா,அதிர்ஷ்ட மூங்கில்,சுருண்ட மூங்கில்,சைனீஸ் நீர் மூங்கில், ஃப்ரெண்ட்ஷிப் மூங்கில், GODDESS OF MERCY PLANT, BELGIAN EVERGREEN, RIBBON PLANT. இப்படி எல்லாம் அழைக்கப்படுது.

லால்பாகில் மூங்கில் காடு

மூங்கில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாம் . அதிர்ஷ்டத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த மூங்கில் சைனா தாய்வான்லேருந்து வரவழைச்சு விற்கப்படுது. வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்னு லால்பாகில் சுதந்திர தினத்தன்னிக்கு இந்த மூங்கில் கடையில் ஒரே கூட்டம். அதுவும் சும்மா அதிர்ஷ்டம் இல்லிங்க காதல்ல அதிர்ஷ்டமாம். அதான் இளைய தலைமுறைக்கூட்டம் ஜாஸ்தி..

நிறைய திருமணமான இளஞ்ஜோடிகளும் வாங்கிக்கிட்டு இருந்தாங்க. ஒரு வேளை அவங்க தங்களுக்குள்ள அன்பு பெருகட்டும்னு வாங்குறாங்களோ என்னவோ. J நிறைய நிறுவனங்களும் இதை தங்கள் அதிர்ஷ்டமும் வியாபாரமும் பெருகட்டும்னு வாங்கி வரவேற்பறைகளில் வளர்க்கிறாங்க.


பாருங்க வெளிநாட்டுலேருந்து புல்லெல்லாம் ஏற்றுமதி பண்ணி அதை வளர்த்தால் அதிர்ஷ்டம்னு சொல்லி நம்மகிட்ட காசு பண்ணிடுறாஙக. ஹ்ம்ம் எப்படியோ வீட்டுக்குள்ள பயிர்ப் பச்சை பெருகட்டும் அது மூங்கிலாகவே இருந்தாலும். J

8 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டிலும் முன்பொரு காலத்தில் வளர்த்த ஞாபகம், சில நாட்கள் சென்றபின் பட்டுப் போய் விட்டது என்னமோ சோகம்.

    பதிலளிநீக்கு
  2. வீட்டுக்கு அழகு சேர்க்கும் என்றால் வாங்கலாம்.. என்ன விலை?

    பதிலளிநீக்கு
  3. அக்கா... அப்ப நம்ம வீட்டுக்கும் மூங்கில் வாங்கிட வேண்டியதுதான்...
    ஹா... ஹா...
    அதிர்ஷ்டத்தைக் கொடுக்குதோ இல்லையோ அழகைக் கொடுக்குமில்லையா?

    பதிலளிநீக்கு
  4. நானும் வைத்திருந்தேன்,இப்ப இல்லை.நல்வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு

  5. எல்லோருமறிந்த
    புல்லாங்குழல் கூட - அந்த
    மூங்கிலால் தான் செய்வார்களாம் - அந்த
    மூங்கில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாம்...
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. எப்படியோ நம்ம வீக்னெஸை புரிஞ்சிகிட்டு வியாபாரம் செய்திடறாங்க.... மற்றதெல்லாம் எப்படியோ இது குளுமை எபெக்டாவது கொடுக்குமே...

    பதிலளிநீக்கு
  7. மூங்கில் பட்டுப் போச்சா.. என்னன்னு தெரியலையே உமேஷ்.

    ஸ்கூல் பையன் விலை தெரியலை. நாம ப்லாகுக்காக ஃபோட்டோ பிடிச்சதோட சரி. அங்க எல்லாம் கிட்ட கூடப் போமாட்டேன் :)

    குமார் அழகைக் கொடுக்குமான்னு தெரில. ஆனா ஆக்ஸிஜன் கொடுக்கும்னு சொல்றாங்க.:)

    நன்றி ஆசியா

    ஆம் யாழ் பாவண்ணன் சகோ

    ஆமாம் கருத்துக்கு நன்றி எழில். :)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)