ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

1000 ரூபாயில் சந்தோஷத்தை வாங்கிட முடியுமா.

சந்தோஷத்தைப் பணத்தால் வாங்கிட முடியுமா.


ஹிந்தி நடிகர் வருண்ப்ருதி  நிரந்தரமற்ற வருமானம் உள்ள இந்த வியாபாரிகளுக்கு உதவி செய்யும் வீடியோவைப் பார்த்தவுடன் இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது

ஒன்று அவர் உழைப்பாளிகளுக்குப் பணம் கொடுத்து அவர்களின் முகத்தில் இறைவனைக் கண்டிருக்கிறார். ( அது தேவைப்பட்டவர்களைப் போய்ச் சேர்ந்துள்ளது என்ற எண்ணமும் அதை அவர்கள் தக்கபடி உபயோகிப்பார்கள் என்ற எண்ணமும்தான் காரணம். )

இரண்டாவது அவருக்குக் கடவுள் மேல் உள்ள பக்தி. விசுவாசம் . அந்த உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் மீதும் கடவுள் மீதும் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தியதும் கடவுள் தன்னை அனுப்பினார் என்று கூறி  அவர்களுக்கு பணம் வழங்கியது.# HATS OFF ACTOR VARUM PRUTHI. !


மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பார்கள். யாசகம் கொடுப்பவன் கடவுள் என்றால் யாசகம் வாங்கிக் கொள்பவனும் கடவுள்தான். அவர் முகத்தில் தெரியும் புன்னகையே இறைவனின் தரிசனம்.

இவ்வாறு உதவி செய்வதைப் பார்க்கும்போது நாமும்  தேவைப்படுவோருக்கு பணம் கொடுத்து தக்க சமயத்தில் உதவிட வேண்டும் என்ற எண்ணமும் மனித நேயமும் தோன்றுவதால் இதை என் வலைத்தளத்தில் வெளியிட எண்ணினேன்.

இதைப் பார்க்கும் அனைவருமே தேவைப்படும் மற்றவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடும். ( பேரம் பேசாமல் பொருளை வாங்கலாம். அல்லது அவர்களின் நிலையை உணர்ந்து வேறேதும் உதவிகள் கூட செய்யலாம். )

சில மார்க்கங்களில் வருமானத்தில் ஒரு பகுதியை தானம் செய்வது என்று இருக்கும். அதை மதக் கொள்கையாகவே கடைபிடிப்பார்கள். நாம் நம் விருப்பப்படிதான் தானம் அளிக்கிறோம். நாமும் வருமானத்தில் இத்தனை சதவிகிதத்தை தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்று ஒதுக்கலாம்.

இறக்கும் முன் சில மனிதர்களை சந்தோஷமடையச் செய்தோம் என்ற திருப்தி இருக்கும்தானே. 

மொத்தத்தில் இந்த மனித நேயம் எனக்குப் பிடித்திருக்கிறது. முடிந்தால் அனைவருமே அடுத்தவருக்கு உதவுவோம்.

ஆமாங்க பணத்தால சில சமயம் சந்தோஷத்தையும் வாங்கிட முடிகிறதுதான். முடிஞ்சா நீங்களும் பணத்தால ( பணத்தைக் கொடுத்து ) சந்தோஷத்தை தரிசிக்கப்பாருங்க. ஆனா ஆனந்தத்தால அழுகைதான் வரும் உங்களுக்கு.

5 கருத்துகள்:

  1. கொடுப்பதற்கும் மனம் வேண்டும்...
    அதுவும் சரியான வகையில் சரியானவருக்கு
    செல்ல வேண்டும்..
    இவ்வகையில் நடிகர் வெற்றி பெற்றுவிட்டார் மனிதநேயத்தில்..
    மனம் கவர்ந்தார்...

    பதிலளிநீக்கு
  2. மனித நேயம் போற்றுவோம். தில்லியின் இந்தியா கேட் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது இக்காணொளி. இவ்விடத்தில் இப்படி பலர் தங்களது உழைப்பில் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.....

    பலருக்கு மகிழ்ச்சி கொடுத்த அந்த நல்லிதயத்தினை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  3. நிரந்தரமற்ற வியாபாரிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவது நல்ல விஷயம்.ஹிந்தி நடிகர் வருண்ப்ருதி அவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி குமார் சகோ

    நன்றி மகேந்திரன் ரொம்ப சரியா சொன்னீங்க. நம் மனதைக் கவர்ந்துவிட்டார்

    நன்றி வெங்கட். ஆமாம் அது இந்தியா கேட் போலத்தான் இருக்கு. நான் கேட் வே ஆஃப் இந்தியா மும்பைன்னு நினைச்சேன்.

    நன்றி கோமதி மேம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)