வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரியும்.

91. இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி..

கமலும் நிரோஷாவும் பாடும் பாடல். வழக்கம்போல தலை கெமிஸ்ட்ரியில் நூத்துக்கு நூத்துச் சொச்சம் வாங்கும் பாடல். குட்டிக் குழந்தை போல் இருப்பார் நிரோஷா.

92. எங்கிருந்தோ ஆசைகள். எண்ணத்திலே ஓசைகள்.
சந்திரோதயத்தில் ஜெயாம்மா பாடும் பாடல். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயாம்மா, எம்ஜியார் காட்சி அழகு. இருவர் முகமும் கவர்ச்சியும் காந்தமும் பொருந்தியது.

93. இளமை கொலுவிருக்கும்.
சாவித்ரிம்மாவும் ஜெமினியும் நடித்த படம். அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ. என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.



94. தலையைக் குனியும் தாமரையே

சுமலதாவும் ரகுவரனும் நடித்த பாடல். சுமலதாவின் சில படங்களே பார்த்திருக்கிறேன். ரகுவரன் ஹீரோவாக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று. -- ஒரு ஓடை நதியாகிறது. 

95. பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

வசூல் ராஜா எம் பி பி எஸ்ஸில்  சிநேகாவுடன் பாடும் காட்சி அழகு. படத்திலேயே ரூம் நம்பர் பற்றி வரும் காமெடிக் காட்களும் சிறப்பு.

96. காடு திறந்து கிடக்கிறது.

மிக அருமையான பாடல் இது. இதே படம்தான். ஆனால் இதில் அலைபாயும் கூந்தலுடன் ஓடிவருவார் சிநேகா. தலையும் பளிச் பளிச்தான். 

97. என்னை விட்டு ஓடிப்போக முடியுமா.
எஸ் எஸ் ஆரும் விஜயகுமாரியும் பாடும் பாடல். ரொம்ப இனிமையாக இருக்கும் இசையும் காட்சியும். தோட்டத்தில் ஊஞ்சலாடும் காட்சி இன்னும் இனிமையானது.

98. சித்திரமே நில்லடி. முத்தமிட்டால் என்னடி.
ஸ்ரீகாந்தும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்த பாடல். வெண்ணிற ஆடைதான் படப்பெயரும். முதல் படம் என்பதால் இருவரும் ரொம்ப ஃப்ரெஷாக இருப்பார்கள். அதுவும் நிர்மலா கொஞ்சம் பயந்தமாதிரி பெரிய அகல விழிகளால் பார்ப்பார். ஸ்ரீதர் படம் என்றாலே காதல் பாடல் காட்சிகள் சிறப்பாக இருப்பார்.

99. மெல்லப் போ மெல்லப் போ

ஜெயாம்மாவும் எம்ஜியாரும் நடித்த காட்சி. ஷர்ட்டும் மாக்ஸியும் போட்டு செம அழகா இருப்பார் ஜெயாம்மா. மெல்லப்போ ஆஹா மெல்லத்தான். சொல்லிப் போ ஆஹா சொல்லித்தான் என்று சொல்லும்போது ஜில் ஜில்தான். :) அதன் பின் கைகோர்த்து ஒரு நடன அசைவும் அற்புதம்.

100. யார் அந்த நிலவு..
கெமிஸ்ட்ரி என்றால்  நம்ம பெரிய தலை இல்லாமலா. அவர்தானே கெமிஸ்ரி டிபார்ட்மெண்டின் ஹெச் ஓ டி... :) பட் இது சோகப்பாடல். சோகத்தைப் பிழிந்து நம்மை உருக்குலைய வைக்கும். இரவும் பூங்காவும் மனமயக்கத்தில் நடக்கும் சிவாஜியும் அவர் பிடிக்கும் சிகரெட் புகையுமாய் கலைந்து கிடக்கும். ரொமான்ஸ் என்றால் சேர்ந்துதான் பாடணுமா. தனியே கூடப் பாடலாம்தானே. அதுவும் மனசை அசைக்கிறதுதானே. டி எம் எஸ் குரலில் தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ.. என்ற வரிகள் யப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை. சோகத்திலும் சுகம் காணும் மனிதக் கூட்டம் நான். :)

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


4 கருத்துகள்:

  1. ---டி எம் எஸ் குரலில் தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ.. என்ற வரிகள் யப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை. சோகத்திலும் சுகம் காணும் மனிதக் கூட்டம் நான். :)-----

    நாம் என்று சொல்லுங்கள். சரியான கருத்து.எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மற்றுமொரு சிறப்பான தெரிவு. பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி காரிகன் ஆம் நாம்தான் :)

    நன்றி உமேஷ் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)