வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ரம்பம்பம் ஆரம்பம்...



ரம்பம்:- BIG BORE.

///இது என்ன என்று யாராலும் சொல்லமுடியுமா ? கண்ணாடி என்று சிலர் சொல்லுவார்கள். அது தவறு. கண்ணாடி என்றால் முகம்பார்க்கவா உதவுகின்றது. ஆனால் ஒரு வகையில் மற்றவர் முகத்தின் அழகைப் பார்க்க முடிகிறது. அகத்தின் அழகையல்ல. சிலர் இதனை ஸ்பெக்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதுவும் தவறு. மேலும் சிலர் கூலிங் க்ளாஸ் என்பார்கள். கூலிங் க்ளாஸ் என்பது வெய்யிலில் நாம் செல்லும்போது நம் கண்ணில் வெளிச்சம் படாமல் குளுகுளுவென்று இருக்கும்படி அமைத்துக் கொடுப்பது. ஆகையால் இதை கூலிங்க்ளாஸ் என்றழைப்பது தவறு.
சோடாப்புட்டிக் கண்ணாடி என்று கூடச் சிலர் கேலியாக உரைப்பார்கள். சோடாபுட்டிக் கண்ணாடி என்பது கோலிக்குண்டு சோடா தெரியுமா. ? மேலே கோலிக்குண்டு வைத்திருக்கும். அதை உடைக்க உள்ளேயிருந்து சோடா பொங்கி புஸ்ஸென்று வரும் அதேதான். அந்த சோடாவின் அடிப்பக்கத்தைப் போன்று அதன் கண்ணாடி செய்யப்பட்டிருக்கும். ஆகையால் இது சோடாப்புட்டிக் கண்ணாடியும் அல்ல. மேலும் ஷார்ட் சைட் லாங்க் ஸைட் என்று கூறுவார்களே (  SITE அல்ல SIGHT )  அதாவது கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று கூறுவார்களே. அதற்காகவும் போடப்படுகின்ற கண்ணாடியல்ல. ! தலைவலிக்காகப் போடுகின்ற கண்ணாடி என்று கூறுவதும் பொருத்தமாகாது. ஏனெனில் இதைப் போட்டுக் கொண்டாலே சிலருக்குத் ( LECTURERS) தலைவலி வருவதுபோல் தோன்றும்.  ஏனெனில் வகுப்பில் பாடம் எடுக்கின்றோமோ என்ற நினைவு காரணமாய். முடிவாய் இது என்ன கண்ணாடி என்று சொல்லிவிடலாம் என்று பார்க்கின்றேன். ஏனெனில் உங்களால்தான் சொல்லமுடியவில்லையே. சொல்லிவிடட்டுமா ? சொல்லிவிடுவேன் அப்புறம்.. ஆமாம் சொல்லப்போறேன். சில அறிவாளிகள் தங்கள் மூக்கின் உயரத்தைக் குறைத்துச் சப்பைமூக்காக்கிக் கொள்ள ஆசைப்பட்டு அணியும் மூக்குக் கண்ணாடிதான் அது.


டிஸ்கி :- எல்லாரும் ஐயோ அறுவை, மொக்கை என்று நீங்கள் அலறுவது கேட்கின்றது.உண்மைதான் இது ரம்பம்பம்பம்தான் ஆரம்பம்.  இது கல்லூரிப்பருவத்தில் நடந்த ஒரு காம்பெடிஷனில் ( பிக் போர் என்று பேர் BIG BORE )  பேசியது. :) ஒரு நிமிஷத்துல ஐயோ அறுக்குதுன்னு பார்வையாளர்களை சொல்ல வைக்கணும்.

அழுகின தக்காளி முட்டை எல்லாம் விழுந்தா நிச்சயம் ஃபர்ஸ்ட்தான். ஹிஹிஹி என்னோடது அம்புட்டு (BORE) போரா இல்லை போல  எனக்கு ஒப்புக்கு சப்பாணியா அஞ்சாவது பரிசுதான் கிடைச்சுது.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)