வெள்ளி, 18 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.மாலையும் மலரும்.

201.கேட்டதெல்லாம் நான் தருவேன்
டாலி பொம்மை மாதிரி இருக்கும் ஜெயாம்மாவும் முத்துராமனும் பாடும் பாடல். /// ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வது நாம்தானே.. // காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே// வரிகளும் திருமணமாகிக் குழந்தையுடன் போவதுவரையுமான காட்சிகள் அழகு. 

202. பூவே வாய் பேசும்போது.
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு. நீ ஒரு வார்த்தையால் என்னை நிரப்பி விடு. // மிக அருமையான லிரிக்ஸ். ஒவ்வொரு வார்த்தையும் இசையும் அற்புதம். ஏற்கனவே எனக்கு சிம்ரன் பிடிக்கும் இந்தப் பாடலில் ரொம்பப் பிடித்தது. ஷாமும் கூட.

203. எங்கிருந்தோ ஆசைகள்.
ஜெயாம்மாவும் எம்ஜியாரும் பாடும் பாடல் எம் எஸ் வி யின் இசை. மிக இயல்பான வெட்கத்தோடு அழகான பாடல். படம் சந்திரோதயம்.

204. மாலை என் வேதனை கூட்டுதடி.
சேதுவில் விக்ரம் பாடும் பாடல். மிக அருமையான வரிகள். கேள்வியும் பதிலுமாய் சில இடங்களில் அழகு. மேலும் அறந்தாங்கி என்று நினைக்கிறேன். இரண்டு பஸ்கள் கடக்கும் ஒரு வளைவு வரும். மிக அழகான இடம் அது. 


205. என் சுவாசக் காற்றே..
என் சுவாசக் காற்றே படத்தில் அரவிந்த் ஸ்வாமி நடித்த காட்சி. மிக இனிமையாகவும் அழகாகவும் இருக்கும். ஆணும் காதல் வயப்படும் காட்சி வித்யாசம். முதல் நாள் காட்சி சிதம்பரத்தில் பார்த்தோம். கல்லூரி மாணவர்கள் எல்லாம் காதல் வயப்பட்டு படியில் இறங்கியபடி ஆடி வரும் அரவிந்த் ஸ்வாமியைப் பார்த்து டேய் டேய் என்று கத்தினார்கள். :) ( ஏன்., காதல் வயப்படுவது , அதனால் மயங்கி தனியாக ஆடிப் பாடுவது ஆணுக்கு அழகு இல்லை போல )

206.தங்கத் தாமரை மலரே.
காஜோலும் அரவிந்த் ஸ்வாமியும் பாடும் காட்சி . மிக அழகாக விரியும் அந்தத் தடாகமும் அதில் நீராடும் தங்கத் தாமரை மலராய் காஜோலும் செம சூப்பர்.காதல் கயிற்றில் அரவிந்த ஸ்வாமியைக் கட்டி இழுத்துப் போவார் காஜோல் தன் விரலசைவினால்.

207. காதல் வைபோகமே..
கங்கை அமரன் இசையில் கண்ணதாசன் பாடல். பாக்யராஜ், சுதாகர் நடித்த காட்சி. ( ஹீரோயின் பெயர் தெரியவில்லை). பாக்யராஜ் என்றாலே குறும்புக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

208. ஒரு நாளும் உனை மறவாத
எஜமான் படத்தில் மீனா ரஜனி பாடும் காட்சி. இதன் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ளதாக இருக்கும். பிரியாத வரம் கேட்கும் பாடல். 

209. ஸ்வாசமே.. ஸ்வாசமே என்ன சொல்லி என்னைச் சொல்ல
தெனாலியில் தலைவரும் ஜ்யோதிகாவும் நடித்த பாட்டு. சொல்லவும் வேண்டுமா. எல்லாரையும் கைப்பாவை போல ஆட்டி வைக்கும் தலை இதிலும் ஜோதிகாவை ஆட்டி வைப்பார் தன் நடிப்பால் . 

210. இஞ்சாருங்கோ. இஞ்சாருங்கோ.
இதில் நாய்க்குட்டி ஆனேனுங்கோ என்று ஹீரோயினைப் ( ஜோதிகா ) பாட வைத்திருப்பார். அந்த அளவு தலை கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருக்கும். சிங்களத் தமிழில் அழகு கொஞ்சும் பாடல்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும். 


6 கருத்துகள்:

  1. எந்தப்பாடல் அதிக ரசனை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சகோதரி...!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பாடல் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி காசிராசலிங்கம் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)