செவ்வாய், 29 ஜூலை, 2014

கடவுளை நேசித்தல் கவிதை கன்னடத்தில்.

ದೇವರ ಪ್ರೀತಿ
ದೇವರನ್ನು ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಲೇ ಇಲ್ಲ
ಭಯ ದುಃಖ ಕಾಯಿಲೇ ವಿಪತ್ತು
ಪ್ರಯಾಣ ಈ ಸಮಯಗಳಲ್ಲಿ
ಅವನ ಹೆಸರ ಜಪಿಸಿದ್ದೇನೆ
ಅವಮಾನ ನಿರಾಶೆಯ ಗಳಿಗೆಗಳಲ್ಲಿ
ಅವನನ್ನು ನಿಂದಿಸಿದ್ದೇನೆ
ಆಸೆಗಳು ಈಡೇರಲು ಹುಂಡಿಯಲಿ
ಕಾಣಿಕೆ ಹಾಕಿ ವ್ಯಪಹಾರ ಮಾಡಿದ್ದೇನೆ
ಹಬ್ಬ ಹರಿದಿನಗಳಲ್ಲಿ ಅವನ ಹೆಸರ ಹೇಳಿ
ಬಗೆ ಬಗೆಯಾಗಿ ಉಂಡಿದ್ದೇನೆ
ಒಂದು ಚಿತ್ರದಲ್ಲಿ ಬಂಧಿ ಮಾಡಿ
ಅವನು ಅಲ್ಲೇ ಇರುವುದಾಗಿ
ನಂಬಿದ್ದೇನೆ ನನ್ನ ಬೆಳವಣಿಗೆಗೆ
ಅಡಚನೆ ಅದಾಗೆಲ್ಲ ಅವನ ಬೈದುಕೊಂಡಿದ್ದೇನೆ
ನನ್ನ ಏಳಿಗೆಗಾಗಿ ಸದಾ
ಅವನನ್ನು ಅಂಗಲಾಚಿದ್ದೇನೆ
ಯಾರಾದರೂ ಗಾಯಗೊಳಿಸಿದಾಗ
ನೀನು ಕೇಳಲಾರೆಯೇ ಎಂದು ಗೋಳಾಡಿದ್ದೇನೆ

ದೇವರ ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಿಯೇ ಇಲ್ಲ
ಎಂಬ ನಿಜ ಅರಿಯುವಾಗ
ಸಂಕಟವಾಗುತ್ತದೆ
ಅವನಾದರೂ ನನ್ನ ಪ್ರೀತಿಸಿರಬಹುದೇ ಎಂದು

-ತೇನಾಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್


கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.

சனி, 26 ஜூலை, 2014

சனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் குணா தமிழ்.



ஈரோட்டில் வசித்துவரும் காரைக்குடிக் கல்லலைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் குணா அவர்களின் வலைத்தளம் ”வேர்களைத் தேடி. ” இந்த வலைத்தளத்தைப் பலமுறை படித்திருக்கின்றேன். சமீபகாலமாகத்தான் அடிக்கடி படிக்க இயலவில்லை.

பேராசிரிய வலைத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சுசீலாம்மா, கல்பனா சேக்கிழார் , குணா ஆகியோரின் வலைத்தளங்கள் மாணவர்க்கு மட்டுமல்ல. தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட அனைவருமே கற்றுக்கொள்ள உதவுபவை. இவற்றைப் படிக்கும் கணம்தொறும் மாணவியாக உணர்வதுண்டு.

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் குணசீலன் அவர்கள். இவருடைய இடுகைகள் அனைத்தும் தமிழ் மொழியின் இலக்கிய நயம், இலக்கணம் ஆகியவற்றையும் சொல் நயம் , பொருள் நயம் ஆகியவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தரப்பட்டவை. 

பேராசிரியர் நன்னனின் பணி போலவே இவரின் பணியும் சிறப்புக்குரியது. முகநூலில் பெரும்பாலும் வெளிநாடு/ வெளிமாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்நாட்டு நண்பர்களே நன்னனின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதாகத் தெரிவிப்பார்கள்.

அந்த முறையில் இன்றைய தமிழ் இளைய தலைமுறைக்கு தமிழின் அரிச்சுவடி பற்றி அறிந்து கொள்ளவும். ஒரு சிறப்பான பொருள் அகராதியாகவும் இவரின் வலைத்தளம் திகழ்கிறது என்றால் மிகையில்லை. 

இவரிடம் நம் வலைத்தளம் சும்மாவின் சனிக்கிழமைப் பதிவுக்காக தமிழ் பற்றி சில வினாக்கள் ஆதங்கத்துடன். 

 நான் சில கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்றிருக்கிறேன். 

 ////// கலைக்கல்லூரிகளில் கூடத் தமிழ் மொழிப்பாடமாக இப்போது இல்லையே. இதனால் இலக்கியம் படிப்பவர்கள் இனிக் குறைந்துவிடுவார்களா. மனிதர் வாழ்வில் இலக்கியம் இனி தேவையே இல்லையா. கல்லூரிகளின் இந்த நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன ?. இதன் பொருட்டு என்னென்ன செய்யலாம் ?. /// 

வெள்ளி, 25 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.நாணமும் தவிப்பும்

211. பார்த்த முதல் நாளே.
வேட்டையாடு விளையாடுவில் கமலும் கமலினி முகர்ஜியும் பாடும் அற்புதமான பாடல். மனமொத்த தம்பதிகளின் கனிவு அழகாக இருக்கும். இருவரின் புன்னகையும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

212. தனிமையிலே இனிமை காண முடியுமா.
ஜெமினியும் சரோஜாதேவியும் பாடும் பாடல்.  இரவில் நிலவில் கொள்ளை அழகாக இருக்கும். மாடியில் ஜெமினியும் ஏணியின் கீழ் சரோஜாதேவியும் நிற்பார்கள். கடல் இருந்தால் அலை இருக்கும் உலகில் எதுவும் தனிமை இல்லை எனப்பாடுவது அழகு.

213. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா.
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு மணியனின் இவள் அல்லவோ பெண் ஞாபகம் வரும்.அதில் ட்ரான்சிஸ்டரில் பாட்டுக் கேட்கும் ஹீரோ அதைக் கேட்கவென்றே வரும் ஹீரோயின் சியாமளா. படத்தில் எஸ் எஸ் ஆரும் விஜயகுமாரியும்.

வியாழன், 24 ஜூலை, 2014

என்னைக் கவர்ந்த இரு குறும்(புப்) படம்&பாடல்

எவ்வளவோ குறும்படங்கள் பார்க்கிறோம். சில மட்டும் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அந்த ரகம்தான் வாயை மூடிட்டு சும்மா இருடா, & குட்டீம்மா இது இரண்டும்தான் அந்தக் குறும்(புப்)படம்&பாடல்.

சென்ற சில மாதங்களாக என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று இது.


ஒரு அறையில் வசிக்கும் இரு நண்பர்கள் கிடார் இசைத்துப் பாடுவது போன்ற காட்சியமைப்பு. ஒரு பெண் தன் வாழ்வில் வந்தால் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்யும் மத்தியதரக் குடும்ப இளைஞர்களின் ஆசையும் விருப்பமும் இந்தப் பாடலின் ஹைலைட்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

பீமனும் பாஞ்சாலியும்:-

பீமனும் பாஞ்சாலியும்:-
******************************

திருவிழாவில் கூத்துக் கட்டினாள்.,
கியாஸ் லைட்டின் வெப்பத்தில்
சுண்ணமிட்ட உருவத்தில்
பஞ்சமரும் வெஞ்சமரும் பொங்க..

காதலித்து விட்டுப் போனவன்.,
கட்டி முடித்து வெட்டி விட்டவன்.,
சித்தாளாய்ச் சேர்த்துக் கொண்டவன்.,
அறுத்தபின் கோர்த்துக் கொண்டவன்
முகமெல்லாம் முகம் வழியே
வர்ணங்களாய்ப் பிதுங்கி வழிய..

திங்கள், 21 ஜூலை, 2014

டாலர்ஸ் & யூரோஸ் கொட்டித்தரும் ஏற்றுமதியும் இறக்குமதியும்

சென்னை: ஏற்றுமதி, பங்குச் சந்தை சார்ந்த கட்டுரைகளை, 15 ஆண்டுகளாக எழுதியும், பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன், 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி' என்ற கருத்தரங்கை, சென்னையில் முதன் முறையாக தமிழில் நடத்துகிறார்.

சிறு தொழில் வணிகம் துவங்கி, முன்னணி நிறுவனங்கள் வரை, எல்லாருமே தொழில் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய கரன்சிகளை பார்த்து பூரித்து தொழில் செய்யும் பலருக்கும், அமெரிக்க டாலர்களையும், உலக கரன்சிகளையும் கொட்டித்தரும் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. 

ஏற்றுமதி என்பது, வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யும் தொழில் தான். ஆனால் அது, தொழில் துவங்கியவுடன் புதையல் போல டாலர்கள் கொட்டாது. முறைப்படி, தவறில்லாமல், தெளிவான வெளிநாடுகளின் சட்ட, திட்டங்களை புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியில் ஜெயிக்கலாம். 

சனி, 19 ஜூலை, 2014

சாட்டர்டே ஜாலிகார்னர் , ப்லாகிங் புயலான புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் என் வலை உலக சகோதரி.2007 இல் இருந்து கிட்டத்தட்ட 1000 க்கும் மேல  பதிவு எழுதி இருக்காங்க. என்ன சிறப்புன்னா முதல் இடுகையிலேயே படம் எல்லாம் போட்டு எழுதி இருக்காங்க. ஹைதை பிரியாணின்னு அரசியல் , மெலுஹா புக் பத்தி விமர்சனம் எல்லாம்  எழுதி இருக்கும் இவரோட பல பதிவுகளை நான் படிச்சிருக்கேன். மிகச்சிறப்பான முறையில் எழுதும் இவர் என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டுள்ளார்.

நன்றிகள் பல கலாஸ்ரீராம். அட அதுதாங்க இவர்ங்க பேரு. புதுக்கோட்டை சொந்த ஊர்ங்கிறதால புதுகைத் தென்றல்னு வைச்சிருக்காங்க.

முதன்முதலா வைஃபாலஜி பார்த்துட்டு தான் எப்படிப் புதுகைத் தென்றலாகவும் புயலாகவும் மாறினேன்னு சொல்றாங்க. அவங்க கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் :-


///பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் முதற்கொண்டு சுற்றுச்சூழல் பற்றி வரை உங்கள் வலைத்தளத்தில் பகிர்கிறீர்கள். முதன்முதல் எப்ப எழுத வந்தீங்க. யார் இது பத்தி சொன்னாங்க. வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.///

ச்சும்மா வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்

வெள்ளி, 18 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.மாலையும் மலரும்.

201.கேட்டதெல்லாம் நான் தருவேன்
டாலி பொம்மை மாதிரி இருக்கும் ஜெயாம்மாவும் முத்துராமனும் பாடும் பாடல். /// ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வது நாம்தானே.. // காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே// வரிகளும் திருமணமாகிக் குழந்தையுடன் போவதுவரையுமான காட்சிகள் அழகு. 

202. பூவே வாய் பேசும்போது.
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு. நீ ஒரு வார்த்தையால் என்னை நிரப்பி விடு. // மிக அருமையான லிரிக்ஸ். ஒவ்வொரு வார்த்தையும் இசையும் அற்புதம். ஏற்கனவே எனக்கு சிம்ரன் பிடிக்கும் இந்தப் பாடலில் ரொம்பப் பிடித்தது. ஷாமும் கூட.

203. எங்கிருந்தோ ஆசைகள்.
ஜெயாம்மாவும் எம்ஜியாரும் பாடும் பாடல் எம் எஸ் வி யின் இசை. மிக இயல்பான வெட்கத்தோடு அழகான பாடல். படம் சந்திரோதயம்.

204. மாலை என் வேதனை கூட்டுதடி.
சேதுவில் விக்ரம் பாடும் பாடல். மிக அருமையான வரிகள். கேள்வியும் பதிலுமாய் சில இடங்களில் அழகு. மேலும் அறந்தாங்கி என்று நினைக்கிறேன். இரண்டு பஸ்கள் கடக்கும் ஒரு வளைவு வரும். மிக அழகான இடம் அது. 

புதன், 9 ஜூலை, 2014

கானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-



கானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-


அம்பையின் காட்டிலே ஒரு மான் பற்றிப் படித்தபோது எனக்கு எங்கள் ஃபாத்திமா அம்மா சொல்லும் ஒரு கதை ஞாபகம் வந்தது. ஒரு பெரிய கானகத்தில் அருவி பொழியும் அடர்வனத்தில் ஒரு மான்குட்டி துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தது. மிக அழகிய பெரிய கண்களும் புள்ளிகள் வரைந்த உடலும் கொண்ட ஓவியம் உயிர்பெற்றது போல இருந்தது அது. ஏதோ ஒரு நறுமணம் அதன் நாசியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று அதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது துள்ளிக்குதித்துக் காடுமுழுதும் அந்த வாசம் வரும் இடத்தைக்காண அலைந்தது. அது செல்லும் இடமெல்லாம் அந்த வாசனை அடித்துக்கொண்டே இருந்தது. கொடியை, செடியை, மலையை, மரத்தை, மண்ணை முகர்ந்து பார்த்துக்கொண்டே மலைமடுவெல்லாம் கடந்தது. ஓய்ந்து ஒரு இடத்தில் கால்மடித்து அமரும்போது அதன் முகம் அதன் உடல்நோக்கித் திரும்பியது.. அப்போது புரிந்தது அந்த மனங்கவர் மணம் தன் மேலேதான் வீசிக்கொண்டிருக்கிறது என.. அதுதான் அந்தக் கஸ்தூரி மானின் வாசம். தன்னிடமிருந்தே வீசும் இந்த வாசத்தைக்காணவா இவ்வளவு தூரம் பயணித்தோம் எனத் தோன்றியது  அதற்கு.

இதைப்போல உங்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் ஒளிந்துள்ளன. அந்த மான்குட்டிகள் போலத்தான் நீங்கள் அனைவரும். உங்கள் மணத்தை வேறெங்கோ தேடுகின்றீர்கள். உங்களிடமே அவை அனைத்தும் உள்ளன என்பதைக் கண்டடையுங்கள் என்பார்.

சுசீலாம்மாவும் ஃபாத்திமா அம்மாவும் எங்கள் ஃபாத்திமா கல்லூரியில் எங்கள் இரு கண்கள் மாதிரி. தமிழ்த்துறை ஆசிரியைகள். இன்று கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடமில்லை. வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையில்லை என்று கலை அறிவியல் கல்லூரிகளே முடிவு செய்துவிட்டன. லைப்ரரி ஹவர்ஸ் தேவையில்லை. சப்ஜெக்ட் மட்டும் போதும் என.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது முதல் இரு வருடங்கள் ஆங்கிலமும் தமிழும் கட்டாயம் உண்டு. அது போக முதலிரு வருடங்கள் ஒரு (ஆன்சிலரியும்) துணைப்பாடமும், இரண்டாம் மூன்றாம் வருடத்தில் இன்னொரு துணைப்பாடமும் ,நாம் தேர்ந்தெடுக்கும் துறைப்பாடம், (மெயின் கோர்ஸ்) மூன்று வருடமும் உண்டு.

பள்ளிகளில் தமிழ் படித்த காரணத்தால் தமிழே பிடித்தமானதாய் இருக்க நாங்கள் சிலர் மொழிப்பாடமாய் தமிழ் எடுத்தோம். சிலர் மதிப்பெண் முழுமையாக வாங்க ஹிந்தி, சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் எடுத்துப் படித்தார்கள். அப்போது சக்தி பெருமாள் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார். பூ சொல்விளங்கும் பெருமாள் அவர்களின் கணவர். தொலைக்காட்சி எல்லாம் மிகப்பிரபலமாகி இருக்காத சமயம் இவர்கள் பட்டிமன்றங்களில் மிகப்பிரபலமான ஜோடியாக விளங்கினார்கள். ஒரு முறை இவரிடம் என்னுடைய கவியரங்கக் கவிதை ஒன்றை ( கல்லூரிகளுக்கிடையான நிகழ்ச்சியில் வாசிக்க ) இவரிடம் காட்ட கல்லூரிக்கு எதிரில் இருந்த இவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன்.

செவ்வாய், 8 ஜூலை, 2014

அந்த இரவின் தென்றல் இனிமை.



அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. அவளைப் போல் அந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும்


அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா.

விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில்  அவளைக் காணாமல் புருபுருத்துக் கொண்டிருந்த அவளுடைய சின்னப் புளியமரம் வா வா என்று இரைச்சலிட்டது.

காற்று கனவேகமாய் வீசித் தழுவியது. புளியம்பிஞ்சின் மணம், வயலில் நடந்த கதிர் அறுப்புக்குப் பின் உள்ள ஒரு மண் மணம், மழை எங்கோ தூறியதால் காற்றில் பரவிக் கிடக்கும் ஈரமண் வாசம் எல்லாம் நெஞ்சை வயிற்றை மூளையை கழுத்தை மூக்கை கண்ணை வாயை நிறைத்துக் கொண்டது. மூச்சை நன்றாக இழுத்தாள் . என்ன ! மணம் என்ன மணம். ! அப்பப்பா.. இதுதான் சொர்க்கம், மெல்லிசுச் சட்டையிலும் தாவணியிலும் லேசாகப் பொறித்திருந்த வியர்வைப் பொடிகளை காற்று புகுந்து சுத்தமாகத் துடைத்துவிட்டுப் போயிற்று.

திங்கள், 7 ஜூலை, 2014

மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:-


மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:-

********************************************************

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.

பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம். 

மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது. 

மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது என முதலில் பார்ப்போம்.

1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள்.

2. கடிதம் எழுதத் தெரிவதில்லை. தமிழை எழுத்துப் பிழையுடனும். ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள். கட்டுரைகள் எழுதினாலும்  ur, tq ,  என்றெல்லாம் எழுதுவது. ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது

புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி , பேஸ்ட் மெசேஜ்கள் தான்.

சனி, 5 ஜூலை, 2014

சாட்டர்டே போஸ்ட், சீனா சாரும் வலைச்சரமும் மதுரையில் பதிவர் மாநாடும்.

வலைச்சரப் பொறுப்பாசிரியர் சீனா சார் அவர்களைத் தெரியாதவர் வலையுலகில் இருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றி நான் தனிப்பட்ட முறையில் கூற வேண்டுமானால் நான் முதன் முதல் ஒரு பத்ரிக்கைக்குப் பணியாற்றமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தவர்.

2010 இல் நான் லேடீஸ் ஸ்பெஷலில் சுதந்திர எழுத்தாளராகப் பணிபுரிய வலைச்சரத்தில் எழுதிய அனுபவம் கைகொடுத்தது. நம்முடைய வலைத்தளத்தில் எழுதுவதை விட ஒரு வலைச்சரத்தில் ( கொத்து ) எழுதுவது பல்வேறு ரசனை கொண்ட வாசகரையும் பெற்றுத் தரும்.எல்லாருக்கும் ஒரு வாரம்தான் ஆசிரியப் பொறுப்புக் கிடைக்கும். என் மனதின் பேராசையோ என்னவோ எனக்கு போனசாக இன்னொரு வாரமும் கிடைத்தது. நிறைய ப்லாகுகள் படித்து கிட்டத்தட்ட 250 வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி இருப்பேன் என நினைக்கிறேன். 

வெள்ளி, 4 ஜூலை, 2014

அயித்தையும் அம்மானும்.

”நிலாச்சோறு ஊட்டும்
அத்தையின் கையில்
கவளம் கவளமாய்
உருண்டு கொண்டிருக்கிறது
நிலா. ”

நிலாச்சோறு என்றால் எனக்கு என் மீனாய்த்தை ஞாபகம்தான் வரும். நாங்கள் சின்னப் பிள்ளையாயிருக்கும்போது எந்த விசேஷம் என்றாலும் எங்கள் ஆத்தா வீட்டில் மூன்று அயித்தைகளும் சூழ வீடு களை கட்டி விடும்.தங்கள் பாசத்தால்  எங்கள் அப்பத்தா ஐயா இல்லாத குறையையும் போக்கி விடுவார்கள்.

வியாழன், 3 ஜூலை, 2014

எனக்குப் பிடித்த பட்டியல்.

1. அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ் வாசல்ல என்ன கூட்டம்..

-- தினம் ப்ரொஃபைல் பிக்சர் மாத்துற ஆப்ஷனோட பாஸ்போர்ட் வழங்க கோரிக்கை கொடுக்கவாம்.

**************************************************

2. எதை எடுத்தாலும் மூணு புள்ளி ஆச்சர்யக்குறி வைச்சு எழுதுறாங்களே அவங்க யாரு

--அவங்க ப்லாக் கவிஞராம்.

எது எழுதுனாலும் எல்லாரையும் டாக் பண்றாங்களே அவங்க..

--அவங்க ஃபேஸ்புக் கவிஞராம்..

********************************************************


3. பாப்பு:- அம்மா கீரையில இரும்புச்சத்து இருக்குன்னு சொன்னீல்ல..

அம்மா :- ஆமாம்டா கண்ணு

பாப்பு :- இல்ல பொய்யி அப்ப ஏன் இந்த மாக்னெட் கீரையை இழுக்கல..

அம்மா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

புதன், 2 ஜூலை, 2014

வண்ணப் பயணங்கள்.

தினமும் எதையோ
விற்பவனைப் போல
இறக்கை மணியடித்தபடி
உள்நுழைகிறது பட்டாம் பூச்சி.

சுற்றிச் சுற்றிப் பறந்து
திருடுகிறது
என் நேரத்தை.

செவ்வாய், 1 ஜூலை, 2014

யட்சியும், வனப்பேச்சியும், காளியும்.

யட்சிகளும் வனப்பேச்சிகளும் உலவிக் கொண்டிருந்தார்கள் காளியின் கோயிலில். வண்ணத்துப் பூச்சிகளைப் போல வெய்யில் நிறம் தடவி அவர்கள் பறக்கப் பின் தொடர்ந்தாள் காளி. தனக்காகக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் கருநிறமும் உதிர்ந்து விடுமோவென்ற கவலையில் அவளால் பறக்க முடியவில்லை. தன் கடினச் சொற்களும் ப்ரயோகமும் கோரைப்பற்களும் மண்டையோட்டு மாலையும் சூலமும் இறுக்கிச் சுமந்தபடி எவ்வ யத்தனித்தாள். எதிர்ப்படும் முயலகன்களை மிதிக்காமல் போய்விட்டால் கடமை தவறிவிடுவோமோ என்ற பதற்றம் வேறு.