வெள்ளி, 20 ஜூன், 2014

தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலயமணியும்.

161. பூங்காற்று திரும்புமா.
மனசை வருடும் பாட்டு. பாராட்ட , மடியில் வச்சு தாலாட்ட ஒரு தாய் மடி கேட்டு ஏங்கும் பாடல். ராதாவும் சிவாஜியும் பாடும் பாடல். முதல் மரியாதை படம். அன்பையும் காதலையும் தேடித் தேடி அலையும் வரிகள். 

162. ஆயர்பாடி மாளிகையில்
கண்ணதாசன் வரிகளில் கண்ணன் துயிலும் காட்சி விரிவது அழகு. என் ஆயா ஒரு முறை பட்டாலையில் என் ஐயா திண்டில் சாய்ந்து தூங்குவதைப் பற்றி இந்தப்  பாடலோடு குறிப்பிட்டார்கள். நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கும் கணவரைப் பற்றிப் பரிவோடு குறிப்பிடும் அளவு எவ்வளவு அன்பும் காதலும் இருந்திருக்க வேண்டும்.

163. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கல்லூரியில் ஃபோ(ல்)க் டான்ஸ் போட்டியில் ஆடியது மறக்க முடியுமா. டென்த் ப்ளஸ்டூ படிக்கும்போதே பக்கத்துவிட்டு பாமாக்கா மார்கழியில் பாவை நோன்பு இருப்பார்கள். என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். புகைப்படத்தில் இருக்கும் கிருஷ்ணரை நடுவில் வைத்து சுற்றிச் சுற்றி வருவோம். அதன் பின் கல்லூரியில் இந்தப் பாடலையும் மயங்கி மயங்கிப் பாடி ஆடி இருக்கிறோம். ஒவ்வொரு வரியும் மறக்காது . கண்ணன் மேல் அவ்வளவு காதல். :) // குளத்தில் மூழ்கி குளிக்கையில் கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி. சேலை திருத்தும் போது சீரங்கன் பேரைச் சொன்னால் அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி.



164. நான் பேச நினைப்பதெல்லாம்
பாலும் பழமும் படம் ஒரு காவியம். அதிலும் இந்தப் பாடல் ரொம்ப அருமையாக இருக்கும். /// நான் காணும் உலகங்கள் நீயாக வேண்டும். நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும். /// இந்த வரிகள் ஆணாதிக்க மனப்பான்மையோ, அதீத பொஸஸிவ்நெஸ்ஸோ. ஆனால் அழகாக இருக்கும். சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை என்ற வரிகள் அடிக்கடி நினைவில் ஒலிக்கும் வரிகள்.

165. ஆலயமணியின் ஓசையை
இதுவும் சரோஜாதேவி பாடும் பாடல்தான். தாயின் மொழி சொல்லும் பாடல். சில பாடல்கள் நம்மை நெகிழ்த்தும். அந்த வகை இது.  அப்போது உள்ள பெண்கள் இரு வகையாகக் கொண்டை போடுவார்கள். ஒன்று பன் கொண்டை. இன்னொன்று ரிங் கொண்டை. இதில் சரோஜா தேவி முழங்கை வரை நீண்ட  க்ளோஸ் நெக் ப்ளவுஸ்,  ( கலவடை மாதிரி ) ரிங் கொண்டை போட்டு இருப்பார்.

166. என்னைக் காணவில்லையே நேற்றோடு
காதல் தேசத்தில் தபுவை அப்பாஸும், வருணும் காதலிப்பார்கள். காட்சியமைப்பும் இசையும் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். ரீமா சென்னைப் போலவே கொஞ்சம் மஸ்குலைன் ஆன ஹீரோயின் தபு.

167. நல்லதோர் வீணை செய்தே.
வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் அருமையான இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும். பாரதியாரின் வரிகளுக்கு உயிரூட்டும் காட்சியமைப்பு. ///விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன். நசையறு மனம் கேட்டேன். நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன். தசையினைத் தீச்சுடினும். சிவ சக்தியைப் பாடும் மனம் கேட்டேன். அசைவுறு மதி கேட்டேன். இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ.. ? ///என்ன வரிகள்.. யப்பா.

168.பாயும் ஒளி நீ எனக்கு.
இதுவும் பாரதியார் பாடல்தான். வீணையடி நீ எனக்கு. மேவும் விரல் நான் உனக்கு. .. காதலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு. வேதமடி நீயெனக்கு வித்தையடி நானுனக்கு.. போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீச்சுவையே.. நாத வடிவானவளே. நல்லுயிரே கண்ணம்மா. .. பாடிக் கொண்டே போகலாம். 

169. சுட்டும் விழிச்சுடர்தான் சூரிய சந்திரரோ
பாரதியாரின் இன்னொரு பாடல். இசையோடு கேட்கும்போது என்னவொரு அற்புதமாக இருக்கு. ஹரிஹரன் குரலில் மென்மையாகப் பாடும்போது மென்னிறகால் வருடிய சுகம் இருக்கும்.

170. சின்னச்சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
 தேன்நிலவு என நினைக்கிறேன். படத்தின் பெயர். வைஜெயந்தியும் ஜெமினியும் பாடும் அழகான பாடல். இது போல காஷ்மீர் செல்லும் மக்கள் உடையணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். :)

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


3 கருத்துகள்:

  1. மதிற்பிற்குரிய தேனம்மா லக்ஷ்மன் அவர்களுக்கு
    மனதை மயக்க வைக்கும் மதுர கானங்கள் என்ற தலைப்பில்
    திரு நெய்வேலி வாசுதேவன் அவர்கள் ஒரு திரியை forumhub மையம்.கம
    தொடங்கி இருக்கிறார்கள் .
    உங்கள் மேலான கவனத்திற்கு
    நன்றி
    கிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  2. சிறந்த தொடர்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணபதி அவர்களே.

    நன்றி ஜீவா சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)