சனி, 29 மார்ச், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ஒரு சிவில் இஞ்சினியரும், சில பல்புகளும்.

முகநூலில் என் அன்புத் தங்கைகளுள் ஒருவர் ஸ்ரீதேவி செல்வராஜன். , இவர் ஒரு சிவில் இஞ்சினியர். எவ்ளோ பெரிய சிவில் இஞ்சினியரா இருந்தாலும் தன் அக்கா பெண்களிடம் ( ஒன்றாவது படிக்கும் கீதா, நாலாவது படிக்கும் தர்ஷிணி யிடம் )வாங்கிய பல்புகளை அலுக்காமல் சலிக்காமல் முகநூலில் பகிர்வார்.

நமக்கும் நம் அண்ணன் தம்பி அக்கா தங்கை பிள்ளைகளிடம் இதுபோல பல்ப் வாங்கிய பெருமை இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறு அந்த பல்புகளை நம்மேல் அவ்வப்போது மாட்டி ஒளிவிடச் செய்து மகிழ்வார்கள். !! :).


அதுபோல் ஸ்ரீ வாங்கிய ரசனைக்குரிய பல்புகளை இங்கே ஒளிவிடச் செய்வதில் மகிழ்கிறேன். :)

அவரிடம் நான் கேட்ட கேள்வி.

/// உங்க அக்கா பெண்களிடம் நீங்க வாங்கிய பல்பு எத்தனை. அதில் நீங்க ரசித்த பல்புகளை இங்கே பகிருங்கள். ///


///தேவி பக்கத்து கடைக்குப் போய் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கிட்டு வா”

“ம்மா நான் என்ன சின்னப் பிள்ளையா....இன்னும் என்னைய கடைக்குப் போகச் சொல்றீங்க. தர்ஷினிய போகச் சொல்லுங்க”

“தர்ஷினி”

“என்ன ஆச்சீ.....கொஞ்ச நேரம் டீ வி பார்க்க விட மாட்டேங்குறீங்க”

”கடைக்குப் போய் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கிட்டு வாடி”

“போங்க ஆச்சி..எப்பப் பாரு ஏதாச்சும் வேலை சொல்லிட்டு”

வேடிக்கை பார்த்துட்டு இருந்த எங்க வீட்டுப் பொடுசு கீதாஸ்ரீ......
“ஆச்சீ என்ன பேஸ்ட் ஆச்சி....நான் போய் வாங்கிட்டு வரேன்”

“இஞ்சி வெள்ளைப்பூண்டு பேஸ்ட் டா செல்லம்”

“இப்டி ஒரு பேஸ்ட்டா”

“ஆமா...அண்ணாச்சிகிட்ட சொல்லு எடுத்து தருவாங்க”

“ம்ம் சரி”

“என்னடி இவ....போய் பத்து நிமிஷம் ஆச்சு...இன்னும் காணோம்”

“ஆச்சி இந்தாங்க”ன்னு ஒரு கேரி பேக்கோட வந்தா.....

“அடக்கடவுளே ....இவ என்ன வாங்கிட்டு வந்திருக்கா பாரு”

ஒரு பெரிய சைஸ் இஞ்சித்துண்டு, ஒரு சின்ன பொட்டலத்துல வெள்ளைப் பூண்டு, ஒரு பத்து ரூவா கோல்கேட் பேஸ்ட்டு !!!!!!!!!

அம்மா கோவம் பாதி சிரிப்பு பாதியா “இது என்னடி பேஸ்ட் வாங்கிட்டு வந்திருக்க?”

“ஆச்சி அவங்க வேற பேஸ்ட் குடுத்தாங்க ....நான் தான் கோல்கேட் குடுங்கன்னு சொன்னேன்”

ஹா ஹா ஹா ஹா

(இஞ்சி+பூண்டு+பேஸ்ட் = இஞ்சி பூண்டு பேஸ்ட்)///


////"சித்தீ......என் பக்கத்துல வந்து நில்லுங்களேன்"னு தர்ஷினி கூப்பிட்டா., . . . .

"எதுக்குடி"ன்னு கேட்டுக்கிட்டே போய் நின்னேன். .

"ஹைய்யா இப்பவே உங்க ஷோல்டருக்கு மேல வளர்ந்துட்டேன் பாருங்க. . . .இன்னும் கொஞ்ச நாள்ல உங்கள விட ஹைட்டாகிருவேன்"
(பய புள்ள. ....கூப்டு வச்சி அசிங்கப்படுத்துதே. . . .)

"கீதாகுட்டி. ....இங்க வாடி செல்லம்"

"என்ன சித்தீ"

"பாரு. . . . சித்தி உன்ன விட எவ்ளோ ஹைட்டா இருக்கேன். . . .நீ ஒழுங்கா சாப்பிட்டா தான் என்னை மாதிரி ஹைட்டாக முடியும்".,

"நீங்களும் நல்லா சாப்பிடுங்க சித்தி . . .அப்ப தான். . அக்கா மாதிரி ஹைட் ஆக முடியும் "///

////லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டு கொஞ்சம் சாங்ஸ் டவுன்லோட் பண்ணிட்டு இருந்தேன். தர்ஷினி ஸ்கூல் பேக் எடுத்துட்டு வந்து ரூம்ல வச்சிட்டு இருந்தா....

”ஸ்கூல் விட்டு வந்து எவ்ளோ நேரம் ஆகுது தர்ஷினி.......இன்னும் ஹோம் வொர்க் எழுத உக்கார மாட்டேங்குற”

“இருங்க சித்தி....கொஞ்ச நேரம் கழிச்சு எழுதுறேன்”

“ஏதாச்சும் காரணம் சொல்லி லேட்டாக்கிட்டே இரு....இன்னைக்கு நடத்துன பாடத்தை இன்னைக்கே படிக்குறது...ஹோம் வொர்க் எழுதுறது எல்லாம் எவ்ளோ நல்ல பழக்கம் தெரியுமா? அப்ப தான் ஸ்கூல்ல பாடம் நடத்தினது மறக்காம ஞாபகத்துல இருக்கும்....பரீட்சைக்கு முன்னால ஒரு தடவை ரிவைஸ் பண்ணாலே போதும்....நல்ல மார்க் வாங்கிடலாம்....இத டெய்லி ஃபாலோ பண்ணாலே........”

“தேவி......”

“என்னம்மா”

“ஃபோன்லயா பேசிட்டு இருக்க?”

“இல்லம்மா தர்ஷினிட்ட பேசிட்டு இருக்கேன்”

“தர்ஷினி வெளிய போய் பத்து நிமிஷம் ஆகுது.....அத கூட கவனிக்காம தனியா பேசிட்டுருக்கியா”

அப்பதான் திரும்பிப் பார்த்தேன்.......தர்ஷினி ரூம்ல இல்ல.....லேப்டாப் பார்த்துட்டே பேசிட்டு இருந்ததால அவ போனதை கவனிக்கல....

அறிவுரை சொல்றது தப்பில்ல.....நாம யாருக்கு அறிவுரை சொல்றோமோ அதை சம்பந்தப்பட்ட ஆள் நின்னு கேக்குறாங்களான்னு பார்த்துட்டு அறிவுரை சொல்றது நல்லது....இல்லேன்னா ....///

 ஹாஹாஹா சூப்பர் ஸ்ரீ.. நீங்க வாங்கின 3 பல்புகளுமே அட்டகாசமா ஒளிவிட்டு எங்களையும் ப்ரகாசமாக்கிடுச்சு. எங்க சாட்டர்டேயை ஜாலிடே ஆக்கினதுக்கு நன்றி. நன்றி நன்றி.. ஒண்ணு உங்களுக்கும் மத்த ரெண்டும் கீதுவுக்கும், தர்ஷிணிக்கும். :) 


9 கருத்துகள்:

  1. செம பல்பா இருக்கே... :))))

    பல சமயங்களில் பல்பு வாங்குவதில் கூட சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது - கொடுப்பவர்கள் நாம் விரும்புவர்களாக இருந்தால்.

    பதிலளிநீக்கு
  2. பல்புகள் ரசிக்கும்படி... குழந்தைகளிடம் இனி ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்

    பதிலளிநீக்கு
  3. சில வாண்டுகள் இயற்கையிலேயே இப்படி சுட்டிகளாக இருக்கிறார்கள்... அதனால் பல்பு நமக்கு..

    பதிலளிநீக்கு
  4. நன்றாக இருக்கிறது தொடருங்கள் அத்துடன் நீங்கள் சாதாரணமாக இணையத்தளங்களில் பயன்படுத்தும் Links மூலம் பணம் பெறுவது எப்படி என்று அறிவீர்களா? http://menanworld.blogspot.com/2014/03/links.html

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன் சகோ

    நன்றி வெங்கட்

    நன்றி ஆதி வெங்கட்

    நன்றி எழில்

    நன்றி ஸ்கூல் பையன்

    நன்றி மேனன்

    பதிலளிநீக்கு
  6. அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)