வியாழன், 30 ஜனவரி, 2014

முத்து விழா சிறப்பு மலரில் சும்மா..

எங்கள் சின்னாயாவுக்கு நடைபெற்ற முத்துவிழாவின் போது ” இவைகள் வாழ்வியல் மந்திரங்கள் “ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

எங்கள் மாமா கேசவன் என்ற வெங்கடாசலம் தான் படித்த நல்ல விஷயங்களை ஆன்மீகம், அறிவியல், கவிதைகள், நெஞ்சைத் தொட்டவர்கள், நேர்மறை, சில காரணங்கள், சும்மா சிரியுங்க., உடல் என்ற உன்னதம் என்ற தலைப்புக்களில் தொகுத்துள்ளார்.


தங்கள் பாட்டையா பாட்டியிலிருந்து தந்தை தாய் வரை( மிக  வாத்சல்யமான வார்த்தைகளில் ) யும் சகோதர சகோதரியிலிருந்து உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையும் ஸ்பெஷலாக நினைவு கூர்ந்து அவர்களின் நல்லவைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அதில் தன்னுடைய பெரிய அய்த்தான் வெங்கிடாசலம், அம்மான் மகள் அலமேலு, பெரியப்பச்சி மக்கள் கருப்பாயி ஆச்சி, ராமனாதன், வெங்கிடாசலம், நாகப்பன், ஆகியோரைக் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் கமலஹாசன், குமுதம் பா வரதராசன், தினமலர் ரா லெட்சுமிபதி, வேலம்மாள் பள்ளி & கல்லூரி குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், ஆகியோரைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆகச் சிறந்த மனிதர்களுடன் என்னைப் பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி நன்றி நன்றி. :)


4 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்க பேருக்கு அடுத்த பேரு.... அட, சூப்பர்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஸ்கூல் பையன்.. ஆமா :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)