புதன், 22 ஜனவரி, 2014

குங்குமம் தோழியின் முகநூல் முகத்துக்காக.

/////தோழி fb யின் புதிய பகுதியான
முகநூல் முகம் -மில்
இந்த வாரம் நம் தோழி

தேனம்மை லட்சுமணன்

நான் தேனம்மை லெக்ஷ்மணன்.
மனசுக்குள்ள ஏதோ தாமரைன்னு நினைப்பு.
கவித எழுதப் பிடிக்கும்.
நானும் நிச்சயம் ஒருநா சினிமாப் பாட்டொண்ணு எழுதுவேன்னு பகல்கனவு காணப் பிடிக்கும்.


ஸ்டெல்லா புரூஸ் கதைகள்னா அம்புட்டுப் பிரியம்.
ஜெ ஜெ சில குறிப்புகள் சுந்தர ராமசாமியோடது படிச்சுட்டு
இது போல எழுத முடியுமான்னு அசந்திருக்கேன்.
சின்னப் புள்ள மாதிரி கார்ட்டூன்ல இஷ்டம்.
டிண்டின்னா உயிரு.
இன்னிக்கும் காமிக்ஸ் புக்குக்காக சொத்தைக் கூட எழுதி வைப்பேன்.

எத்தனையோ இங்கிலீஷ் படம் பார்த்தாலும்
இன்னிக்கும் என்னோட ஃபேவரைட் வசந்த மாளிகைதான்.
காதல் போயின் சாதல்னு பாடின பாரதியைப் பிடிக்கும்.
எங்க அப்பத்தாவீட்டு ஐயாவைப் போல இருப்பதால்
எத்தனையோ காண்ட்ரவர்சியில் இருந்தாலும் நேரு மாமாவைப் பிடிக்கும்.

அது மாதிரி எத்தனை ஐஸ்க்ரீம் வந்தாலும்
அருண் ஐஸ்க்ரீம்ல கஸாட்டாதான் பிடிக்கும்.
மழை, ரயில், யானை, குழந்தைகள்,
பிள்ளையார், பூக்கள் , புத்தக வாசிப்பு
இதெல்லாம் எனக்கு எப்பவும் பிடிக்கும்.

நெஜமாவே நான் டாக்டராவோ தமிழ் ஆசிரியையாவோ வந்திருக்கணும்.
ஆனா பாருங்க ஒரு வேதியல் பட்டதாரி ஆயிட்டேன்.
ஏன்னா நான் ப்ளஸ்டூவுல வேதியல்ல நிறைய மார்க்.
சோ அப்பா என்ன சொன்னாங்கன்னா
உனக்கு கெமிஸ்ட்ரி நல்லா வருதும்மா படின்னுட்டாங்க.

தமிழ் இலக்கியம் எம் ஏ சேர்ந்திருக்கலாம்.
நாம லெக்சரர் ஆகப் போறதில்லைன்னு போஸ்டல்ல எம் ஏ பொலிடிகல் சயின்ஸ் சேர்ந்தேன்.
இந்திய அரசியலையே பொரட்டிப் போட்டுர்ற மாதிரி.

அதிகம் நானே பேசிக்கிட்டு இருக்கதால
ஒரு லெக்சரராகவாவது ஆயிருக்கலாம்னு என் கணவர் சொல்லுவார்.
ஏன்னா நானே பேசிக்கிட்டு இருக்கலாம்.
மத்தவங்க சும்மா கேட்டுக்கிட்டு மட்டும் இருக்கலாம்ல..

எனக்குப் பொதுவா கோவம் வராது.
வந்தா கன்னாபின்னான்னு திட்டிட்டு/ சண்டை போட்டுட்டு
அவங்ககிட்டயே சமாதானம் ஆயிடணும்னு போவேன். ஹிஹி.

விமர்சனங்களை விட கிண்டல் என்னை பாதிக்கும்.
அதே அளவு நானும் நாசுக்கா செய்யிறேன்னு சமீபகாலமா தோணுது.

முன்ன எல்லாம் சாமி கும்பிடுவேன், சமைப்பேன், படிப்பேன்,
இப்பவெல்லாம் பாதி வாழ்நாள் ஆன்லைன்லேயே போயிடுது.
நமக்குத் தெரியாம உலகத்துல ஏதும் நடந்திடுமோன்னு கவலை.
முகநூல் இல்லாம, ப்லாக் பார்க்காம ஒரு நாள் கூட இருந்ததில்லை
கிட்டத்தட்ட 4 வருஷமா இப்டித்தான்
பிள்ளைங்களை அடிமை ஆகிடாதிங்கன்னு சொல்லிட்டு
நானே அடிக்ட் ஆயிட்டேன்.

தினம் ஒரு பதிவு போடாட்டி ப்லாக் காணாமப் போன மாதிரி
என்ன ப்லாகோமேனியா தாக்கி இருக்கு.

எனக்குக்கூடப் பிறந்த சகோதரிகள் இல்லைங்கிறதால
என் முகநூல் சகோதரிகள் எல்லார் மேலேயும்
நான் என் குழந்தைகள் மாதிரி அன்பு செலுத்துவேன்.

இம்புட்டுத்தான் இவ..

-தேனம்மை லட்சுமணன்/////




 ( நான் அனுப்பி வைத்தது இது ;

நான் தேனம்மை லெக்ஷ்மணன். மனசுக்குள்ள ஏதோ தாமரைன்னு நினைப்பு. கவித எழுத பிடிக்கும். நானும் நிச்சயம் ஒரு சினிமா பாட்டு எழுதுவேன்னு பகல்கனவு காணப் பிடிக்கும்.

ஸ்டெல்லா புரூஸ் கதைகள்னா அம்புட்டுப் பிரியம். ஜெ ஜெ சில குறிப்புகள் சுந்தர ராமசாமியோடது படிச்சுட்டு இது போல எழுத முடியுமான்னு அசந்திருக்கேன்.

சின்னப் புள்ள மாதிரி கார்ட்டூன்ல இஷ்டம். டின்டின்னா உயிரு. இன்னிக்கும் காமிக்ஸ் புக்குக்காக சொத்தைக் கூட எழுதி வைப்பேன்.

எத்தனையோ இங்கிலீஷ் படம் பார்த்தாலும் இன்னிக்கும் என்னோட ஃபேவரைட் வசந்த மாளிகைதான். காதல் போயின் சாதல்னு பாடின பாரதியைப் பிடிக்கும்.

எங்க அப்பத்தாவீட்டு ஐயாவைப் போல இருப்பதால் எத்தனையோ காண்ட்ரவர்சியில் இருந்தாலும்  நேரு மாமாவைப் பிடிக்கும்.

அது மாதிரி எத்தனை ஐஸ்க்ரீம் வந்தாலும் அருண் ஐஸ்க்ரீம்ல கஸாட்டாதான் பிடிக்கும்.

 மழை, ரயில், யானை, குழந்தைகள், பிள்ளையார்,  பூக்கள் , புத்தக வாசிப்பு இதெல்லாம் எனக்கு எப்பவும் பிடிக்கும்.

நெஜமாவே நான் டாக்டராவோ தமிழ் ஆசிரியையாவோ வந்திருக்கணும். ஆனா பாருங்க ஒரு வேதியல் பட்டதாரி ஆயிட்டேன். ஏன்னா நான் ப்ளஸ்டூவுல வேதியல்ல நிறைய மார்க். சோ அப்பா என்ன சொன்னாங்கன்னா உனக்கு கெமிஸ்ட்ரி நல்லா வருதும்மா படின்னாங்க.

தமிழ் இலக்கியம் எம் ஏ சேர்ந்திருக்கலாம். நாம லெக்சரர் ஆகப் போறதில்லைன்னு போஸ்டல்ல எம் ஏ பொலிடிகல் சயின்ஸ் சேர்ந்தேன். இந்திய அரசியலையே பொரட்டிப் போட்டுர்ற மாதிரி.

அதிகம் நானே பேசிக்கிட்டு இருக்கதால ஒரு லெக்சரர் ஆவது ஆயிருக்கலாம்னு என் கணவர் சொல்லுவார்.ஏன்னா நானே பேசிக்கிட்டு இருக்கலாம். மத்தவங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம்ல..

எனக்குப் பொதுவா கோவம் வராது. வந்தா கன்னாபின்னான்னு திட்டிட்டு/ சண்டை போட்டுட்டு அவங்ககிட்டயே சமாதானம் ஆயிடணும்னு போவேன். ஹிஹி.

கிரிட்டிஸிசத்தை விட கிண்டல் என்னை பாதிக்கும். அதே அளவு நானும் நாசுக்கா செய்யிறேன்னு சமீபகாலமா தோணுது.

முன்ன எல்லாம் சாமி கும்பிடுவேன், சமைப்பேன், படிப்பேன், இப்பவெல்லாம் பாதி வாழ்நாள் ஆன்லைன்லேயே போயிடுது. நமக்குத் தெரியாம உலகத்துல ஏதும் நடந்திடுமோன்னு கவலை.

முகநூல் இல்லாம, ப்லாக் பார்க்காம ஒரு நாள் கூட இருந்ததில்லை கிட்டத்தட்ட 4 வருஷமா. பிள்ளைங்களை அடிக்ட் ஆகாதீங்கன்னு சொல்லிட்டு நானே அடிக்ட் ஆயிட்டேன்.

தினம் ஒரு பதிவு போடாட்டி ப்லாக் காணாமப் போன மாதிரி என்ன ப்லாகோமேனியா தாக்கி இருக்கு.

எனக்குக்கூடப் பிறந்த சகோதரிகள் இல்லைங்கிறதால என் முகநூல் சகோதரிகள் எல்லார் மேலேயும் நான் என் குழந்தைகள் மாதிரி அன்பு செலுத்துவேன். :)


முதன் முதலில் கேட்டவுடன் எழுதியது இது.. :) :) :)

/////(நான் தேனம்மை லெக்ஷ்மணன் ( ஏதோ நான் கிருஷ்ணதேவராயன், அப்பிடிங்கிற நினைப்பு.. இல்லத்தரசி, ( வேலைக்குப்போகல.. இப்ப நினைச்சாலும் வேலை கிடைக்காது.. ஹிஹி ) கவிதை, கதை, கட்டுரை, கோலம், சமையல் அப்பிடின்னு பத்திரிக்கைக்காரங்க எது கேட்டாலும் எழுதி அனுப்புறது. ( சிறப்பா இருக்கான்னு தெரியாது ) பப்ளிஷ் ஆகுமேன்னு ஆர்வத்துல அனுப்புறது. ரெண்டு புக் வந்திருக்கு. ஆனா பேர் சொல்லும் புத்தகங்கள் இல்ல. இன்னும் சிறப்பா செய்திருக்கலாம். கல்லூரிகள் பள்ளிகளில் மகளிர்தினங்கள், சுதந்திர தினம் ஆகிய நாட்கள்ல பேச அழைப்பாங்க. நான் பேச்சாளர் இல்ல. எழுத்தாளர்தான். எனக்குத் தெரிஞ்ச கருத்துக்களை இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு எடுத்துச் செல்வோமேன்னு ஒப்புக்கிறது. அம்புட்டுத்தான் நான்.. ஆங்.. அப்புறம் இதோட நான் ஓஞ்சுருவேன்னு நினைக்கல. இன்னும் பல கவிதைத் தொகுதிகள், சமையல் புத்தகங்கள், கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரணும்னு இருக்கேன். குங்குமம் தோழியின் தோழிகள் உள்ளத்தைக் கொள்ளையடிக்கிறதுதான் நம்ம அடுத்த வேலை :.)////

நன்றி குங்குமம் தோழி. 


7 கருத்துகள்:

  1. அட...! வசந்த மாளிகை...!

    ப்லாகோமேனியா நல்லது - எங்களுக்கு...

    ரசனைகளுக்கு வாழ்த்துக்கள் பல... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    பதிலளிநீக்கு
  3. நல்லது. மேற்கொண்டு பார்போம் - அன்புடன் சோமலெ

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ. மின்னூல் பற்றி கவனத்தில் கொள்கிறேன்.

    நன்றி குமார்

    நன்றி சோமலே சார்

    பதிலளிநீக்கு

  5. வாழ்த்துகள் அக்கா அறிமுகத்துக்கு!!

    ஆமா, நீங்க எழுதினதையே திருத்திப் போட்டுருக்காய்ங்களா, என்னா தகிரியம்!! எலேய் எடுறா வண்டிய...

    ஹா.. ஹா.. நானும் இங்க செய்தித்தாளுக்கு வாசகர் கடிதம் எழுதும்போது கடிதங்களைச் ‘செப்பனிட்டு’ அச்சிடுவாங்க... வாசிச்சுட்டு நாம எழுதற்தெல்லாம் எழுத்தான்னு ஆகிடும்!! :-)))

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)