செவ்வாய், 28 ஜனவரி, 2014

புத்தகத் திருவிழாவில் அன்ன பட்சி வெளியீடு


 

ஞாயிறு அன்று மாலை ( 19.1.2014) சென்னைப் புத்தகக்கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 666,667 இல் எனது புத்தகத்தை லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் மேடம் வெளியிட சாஸ்த்ரிபவன் தலித் பெண்கள் சங்கத் தலைவி ( எனது சாதனை அரசி புத்தகத்தில் இடம் பெற்று இருப்பவர் ) எனது தோழி மணிமேகலை பெற்றுக் கொண்டார். 


மணிமேகலை பெற்றுக் கொண்டவுடன் பாராட்டுரையாக சில வார்த்தைகள் சொன்னார். ரொம்ப சந்தோஷம் மணி. வந்து சிறப்பித்து நல்வார்த்தைகள் கூறியமைக்கு.

கிரிஜாம்மாவுக்கும், மணிமேகலைக்கும் உமா மோகன் பொன்னாடை அணிவித்தார். கிரிஜாம்மா பேசும்போது  என் கணவரிடம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இவரைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

மேலும் தன் முகநூல் பக்கத்தில் ////தேனம்மை லக்ஷ்மணனின் "அன்ன பட்சி" புத்தகத்தை இன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடும் நல்ல வாய்ப்புக்
கிடைத்தது . எழுத்தை மிகவும் நேசிக்கும் ,தமிழ் ஆற்றல் மிகுந்த பெண்மணி தேனம்மை லக்ஷ்மணன்.என் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். பட படவென்ற பேச்சு,இன்னும் இன்னும் என்னும் எழுத்தார்வம், பளிச்சென்ற தோற்றம், வெளியுலகத்தைப் பற்றிய பயம் ,எல்லாம் கலந்த கலவைதான் தேனம்மை.
நான் கண்டெடுத்த நாள் முதல் மேலே மேலே வளர்ந்து வரும் இவரின் புத்தகத்தை வெளியிட்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. என் மனமார்ந்த பாராட்டுதல்களும்,
வாழ்த்துக்களும் !!///


 திரு நாஞ்சில் நாடன் அவர்களிடம் வெளியிடும்படிக் கேட்டுக் கொண்டதால் அவர் 17 ஜனவரி வெள்ளியன்று மாலை வெளியிட திரு மோகனரங்கன், தோழிகள் திருமதி பரமேசுவரி திருநாவுக்கரசு, திருமதி . சுபாஷிணி திருமலை ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

மாலையில் புலவர் ராமானுசம் அவர்கள் வெளியிட தோழிகள் பத்மஜா நாராயணனும்   உமா மோகன் அவர்களும்  உஷாராமச்சந்திரன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். 

மூன்று முறை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் சிறப்புப் பெற்றது அன்ன பட்சி.  

என் மாமா திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களும் என் மாமி திருமதி சகுந்தலா அவர்களும் என் தம்பி அருணாசலம் மற்றும் தம்பி மனைவி இந்துவும் வந்து சிறப்பித்தார்கள். என் கணவரின் அலுவலக நண்பர் எங்கள் குடும்ப நண்பர் திரு நாராயணன் அண்ணன் அவர்களும் வந்திருந்தார்கள்.


முதலில் வந்தவர் குமுதம் எடிட்டர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்கள். ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று உமாவின் மகன் ஆதியிடம் கேட்டுக் கொண்டு திரும்பினால்.. என் கணவருடன் பேசிக்கொண்டிருந்த ப்ரியா கல்யாணராமன் சார் புத்தங்கள் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றிருந்தார். ..!!! 

அதன் பின் என் அன்பு புவனேஷ்வரி மணிகண்டன், ஜெய் டிவி ப்ரேம் சாகர், உஷா  ராமச்சந்திரன் , உமா மோகன் , பத்மஜா நாராயணன் , சகோ பால கணேஷ், புலவர் ராமானுசம் அவர்கள், மெல்லினம் தினேஷ், மணி மேகலை ( மணியின் பெண்ணும் பையனும் ) , கிரிஜாம்மா, கவிதா சொர்ணவல்லி, கல்கி எடிட்டர் அமிர்தம் சூர்யா,  தங்கை கயல்விழி லெக்ஷ்மணன், தங்கை மரிய மெர்லின் வித்யா, தங்கை ரம்யா முரளி , நண்பர்கள், நரேந்திர குமார், சுரேஷ் விஜய், கிரிதரன் கிரி, சுகன்யா சிவா, கவிஞர் விழியன், நம் தோழி எடிட்டர் திரு முருகேஷ் பாபு, நண்பர் இளங்கோ, தோழி பத்மா இளங்கோ, வெளி ரங்கராஜன் சார் , கவியாழி கண்ணதாசன், ஸ்கூல் பையன் ஆகியோரும் வந்து சிறப்பித்தார்கள்.


தோழி பரமேசுவரியும் தோழி சுகிர்தராணியும் அகநாழிகை ஸ்டாலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது மதாரும் வந்தார். 

மேலும் பல நட்புக்கள் வந்தவண்ணமும் புத்தகம் வாங்கியவண்ணமும் இருந்தார்கள். ஃபோட்டோ எடுக்கப்படாததால் பேரைக் குறிப்பிட முடியவில்லை. அன்ன பட்சி வெளியீட்டை சிறப்பித்துத் தந்த அனைவருக்கும் நன்றி.

 டிஸ்கி :- நன்றி உமா, உஷா, பத்மஜா, கிரிஜா மேடம் , மணிமேகலை. அகநாழிகை பொன் வாசுதேவன்.மற்றும் வலைத்தள முகநூல் நண்பர்கள். 

டிஸ்கி 2. :- அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்


இணையத்தில் வாங்க. .http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795


ஈமெயிலில் வாங்க.  By post  --  aganazhigai@gmail.com

 என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

7 கருத்துகள்:

  1. நிகழ்வை நேரில் பார்த்த உணர்வைத் தந்தது.. மேன்மேலும் நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி... படங்கள் மூலம் பலரை அறிய முடிந்தது... சிறப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நானும் வந்திருந்தேன், நானும் வந்திருந்தேன்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஆதி வெங்கட்

    நன்றிடா மேனகா

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சரவணன்

    நன்றி ஜலீலா

    நன்றி ஸ்கூல் பையன்

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)