புதன், 4 டிசம்பர், 2013

சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும்:-

சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும் :-
*******************************************

மரங்கள் எல்லாம் மாளிகைக்கு
உத்தரமாய் ஆச்சு..
மிஞ்சிப்போன கிளைகள் எல்லாம்
மரக்கரியாய் ஆச்சு..
மண்ணும்  தூர்ந்து போச்சு.

ஆத்து மணலை அள்ளி அள்ளிக்
கொள்ளிடமும் போச்சு.
குடியிருப்பா ஆச்சு.
வெள்ளம் வந்தா ஆள் விழுங்கும்
கொல்லிடமும் ஆச்சு.


சாயத்தண்ணீ நுரைச்சு ஊத்தி
நொய்யல் நொந்து போச்சு
கடல் நுரையீரல் வெந்து போச்சு.
கண்டத் திட்டை அசைச்சசைச்சு
சுனாமி வந்து போச்சு.

குப்பையிலே ப்ளாஸ்டிக் அடைச்சு
மண் குடலும் திணறிப் போச்சு.
அஜீரணக் கோளாறாச்சு.
டயறு எரிச்சு சுவாசப்பையில்
புற்று வளர்ந்து போச்சு.

விண்ணில் மாசு, மண்ணில் மாசு,
மேகம் முகக்கும் நீரில் மாசு,
ஆற்றில் மாசு, காற்றில் மாசு,
அணு உலையும் அணுகுண்டும்
ஆளை விழுங்கலாச்சு.

பெட்ரோலுக்கு மாற்றா
ஜட்ரோப்பா கார்க்கஸு,
அணுமின் சக்தி விடுத்து
ஆளைச் சுற்றும் காற்றாலை,
வண்டியோட்ட சூரிய சக்தி.
 ஆற்று மணலுக்கு மாற்றா
ஜல்லி உடைச்ச செயற்கை மணலு.


சாயத்தை உடையிலும் தவிர்ப்போம்.
போனபின்னும் பேரு சொல்ல
ஆளுக்கொரு  மரம் வளர்ப்போம்.
 கடலைக் காய்ச்சித் தண்ணியெடுக்காம
மழையைப் பிடிச்சு மண்ணுல சேமிப்போம்.

மனுசப் பரம்பரை மொளைச்சுக் கிடக்க
மக்குற குப்பையில உரம் தயாரிப்போம்.
இயற்கையை சேமிச்சு இன்பமா வாழ
இனி வரும் தலைமுறைக்கும்
இதமா கற்பிப்போம்.


5 கருத்துகள்:

  1. // போனபின்னும் பேரு சொல்ல
    ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்... //

    அனைவரும் உணர வேண்டிய சிறப்பான வரிகள் சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //மனுசப் பரம்பரை மொளைச்சுக் கிடக்க
    மக்குற குப்பையில உரம் தயாரிப்போம்.
    இயற்கையை சேமிச்சு இன்பமா வாழ
    இனி வரும் தலைமுறைக்கும்
    இதமா கற்பிப்போம்.//

    அத்தனையுமே அர்த்தமுள்ள வரிகள்...

    பதிலளிநீக்கு
  3. நாம் நின்று கொண்டு
    இயற்ககையை ஓட விட்டு
    ரசிக்கிறோம்.
    நாம் ஓடி இயற்க்கையை
    ரசிக்காத வரை அழிவு தான்.

    பதிலளிநீக்கு
  4. //மனுசப் பரம்பரை மொளைச்சுக் கிடக்க
    மக்குற குப்பையில உரம் தயாரிப்போம்.
    இயற்கையை சேமிச்சு இன்பமா வாழ
    இனி வரும் தலைமுறைக்கும்
    இதமா கற்பிப்போம்.//
    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஆதிவெங்கட்

    நன்றி செந்தில்குமார்

    நன்றி சம்பத்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)