வெள்ளி, 4 அக்டோபர், 2013

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

1. எந்த ஜூஸ் கலந்தாலும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் சுவை அதிகம்.

2. காரக்குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு வைக்கும்போது வறுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் ருசியும் கூட. குறைந்த அளவு எண்ணெய் போதும். எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும்.

3. ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக்குறைந்த அளவு  உப்பு போட்டாலே போதும். ( காய்கறிப் பொரியல்களுக்குப் போடுவது போல)

4. உப்பு அதிகமானால் ரத்தக் கொதிப்பு வரும்.  குறைவாக போட்டால் தசை இயக்கத்துக்கும் காரணம் அதுவே என்பதால் சோர்வை உண்டாக்கும். அளவான உப்பு வளம் சேர்க்கும்.

5. இனிப்பு வகைககளை விட காஃபி டீயினால்தான் அதிகமாக சீனி உடம்பில் சேருகிறது. குறைந்த அளவு சீனி சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

6. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற்றிய தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு சிட்டிகை உப்பும் கலந்து கொடுக்கவேண்டும். இது டாக்டரிடம் செல்லும் வரை  உடம்பில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும். வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் நிறுத்தும்.

7. ப்யூட்டி பார்லர் செல்ல இயலாத சமயம் பார்ட்டி, விருந்து விசேஷங்களுக்குச்  செல்லும் சமயம் ஒரு ஸ்பூன் சீனியை முகத்திலும் கழுத்து கைகளிலும்  லேசாக ஸ்க்ரப் செய்து  தேய்த்துக் கழுவினால் மென்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

8. அரிவாள்மனை. பித்தளை விளக்கு ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது புளியுடன் உப்பையும் சேர்த்துத் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.

                      
    ************************************************************

1. அகத்திக் கீரை அல்லது சுக்குடிக் கீரை ( மணத்தக்காளிக் கீரை) யை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சின்ன சீரகம் ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி அரிசி களைந்த திக்கான தண்ணீர் விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப் பால் ஊற்றி  சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும்.

2. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை வெங்காயத்தை வதக்கி உப்பு, புளி ,மிளகாயோடு அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புச் சத்து. முடியும் செழித்து வளரும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

டிஸ்கி :-

 முதல் டிப்ஸ் இங்கே.

இரண்டாம் டிப்ஸ் இங்கே

மூன்றாம் டிப்ஸ் இங்கே.

5 கருத்துகள்:

  1. பயன் தரும் குறிப்புகள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் உபயோகமான குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் சகோ

    நன்றி குமார்

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)