புதன், 23 அக்டோபர், 2013

மஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.

கீழா நெல்லி
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூறு உட்புகுந்திருக்கிறது என்பதன் அறிகுறியே அது. கணையம், பித்தநீர் நாளம், புற்று, பித்தக் கற்கள், கல்லீரல் அட்டைப் புழுக்கள் , அழற்சி, நீர்க்கட்டிகள் ஆகியனவும் இன்னும் பலவும்  காரணமாகும்.



அருகம்புல்
உடல் மஞ்சளாவதும், கண்கள் மஞ்சளாவதும், சிறுநீர் மஞ்சளாகப் போவதும் மலம் வெள்ளையாக, பழுப்பாகப் போவதும் சில அறிகுறிகள். சிலருக்கு அரிப்பு இருக்கும். சிலருக்கு சோர்வாக இருக்கும் . பசியே இருக்காது. சாப்பிடவே மாட்டார்கள்.

கரிசலாங்கண்ணி/கையந்தரை/கரைப்பான்
பிலிரூபினின் அளவு நார்மலாக  0.3 இல் இருந்து  1.9 மிலிகி/டெசிலிட்டர் இருக்கலாம். இதை விட அதிகம் இருந்தால் அது கவனிக்கப்படவேண்டும்.

கோவை இலை.
மஞ்சள் காமாலை பொதுவாக  வைரஸ் தொற்று, மருத்து, மதுபானம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. வைரஸ்  A , B , C  ஆகியவற்றாலும் ஏற்படுகிறது. சில உணவுகளை வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உண்பதாலும் ( அரைவேக்காடு மாமிசங்கள் ) மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஏ  அதிக அளவு பாதிக்காது. பி யும் சி யும் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

சீரகக் கொழுக்கட்டை.
இதற்கு ஆங்கில மருத்துவத்தில் லிவ் 52 சிரப்பும், மருந்துகளும், குளுக்கோஸ் ட்ரிப்புகளுமே வழங்கப்படுகின்றன. ஓய்வு என்பதே முக்கியம். கரும்புச் சாறு , இளநீர், நீர் உணவுகள், கஞ்சி, மோர் சாதம் எடுத்துக் கொள்ளலாம்.

பருப்புத் துவையல்
ஆனால் காரைக்குடியில்  கழனிவாசலில் நாட்டு மருந்து கொடுப்பார்கள். இதில் அவர்கள் தரும் மருந்தை ஒரு முறை சாப்பிட்டால் போதும். ஆங்கில மருந்து மஞ்சள் காமாலைக்கு உதவாது என்று  ஒரு செவிலி குறிப்பிட்டார்.

வெங்காயம் சேர்த்து அவித்த காரட்
இந்த நாட்டு மருந்து கொடுப்பவர்கள் அதை விடியற்காலையில் கொடுத்ததும் குடித்துவிட்டு வந்தால் 2 மணி நேரத்தில் தொடர்ந்து பேதியாகும். அப்படி இல்லாவிட்டால் வெந்நீரில் குளித்து இட்லி , சாம்பார் , சட்னி வைத்து சாப்பிடவும். அதன் பின் ரொம்பப் போனால் குளுக்கோஸ் ட்ரிப் ஏற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

வெங்காயம் சேர்த்து அவித்த பீன்ஸ்
அதன் பின் தினம் காலை ஒரு கைப்பிடி அருகம்புல், ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி / கையாந்தரை/ கரைப்பான் , ஒரு கைப்பிடி கோவை இலை மூன்றையும் தண்ணீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து 200 மிலி 20 நாள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குப் பின் வெள்ளை முள்ளங்கியைப் பாலில் அரைத்து குளுக்கோஸ் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும்.

சிறுபருப்பு முட்டைக்கோஸ் கூட்டு
இது போக கீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு போட்டு அரைத்து வடிகட்டிக் கொடுக்கவேண்டும்.

இடியாப்பம் பச்சடி
மூன்றாம் நால் நல்லெண்ணையில் மிளகு, சீரகம், பூண்டு போட்டுக் காய்ச்சித் தேய்த்துக் குளித்து வர வேண்டும். தினமும் குளிர்ந்த நீரில் கட்டாயம் குளிக்க வேண்டும்.

சாத்துக்குடி ஜூஸ்
அசைவம் சாப்பிடலாம் , கருவாடு, இளநீர், கரும்புச் சாறு, மது ஆகாது. ஆனால் தினம் குளுக்கோஸ் 200 கிராம் சாப்பிடலாம். என்று போட்டிருக்கிறார்கள்.

மாதுளம் பழச்சாறு
ஆனால் முதல் மூன்று வாரங்களுக்கு இந்த மருந்துகளை முடிந்த அளவு கொடுத்து எண்ணெய் இல்லாமல் சமைத்து பழச்சாறு வகைகளும் கொடுத்து வந்தால்தான் கல்லீரல் பழைய நிலையை அடையும். நல்ல பசியும் எடுக்கும்.

பெரியவர் மு. பெரியசாமி என்பவரும் அவரது பிள்ளைகளும் இந்த மருந்தைக் கொடுத்து வருகிறார்கள். டாக்டரிடம் சென்றால் அவர் பிலிரூபினை செக் செய்துவிட்டு சில மருந்துகளும் லிவ் 52 வுமே போதும் என்கிறார்.

மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியே கண்கண்ட மருந்து என்பது என் அம்மாவின் அபிப்பிராயம். தினம் தலைக்குக் குளிரக் குளித்து  கீழாநெல்லிச் சாறை அருந்து எண்ணெய் இல்லாத காரமும் உப்பும் குறைவான உணவுகளை உண்டு வந்தாலே சரியாகும் என்பார்.

அதன்படி செய்த சில ரெசிப்பிக்களையும், மூலிகை வகைகளையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.


11 கருத்துகள்:

  1. மிக மிக பயனுள்ள மருத்துவ குறிப்புகள்... நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல்கள். கட்டாயம் வேண்டுபவர்களுக்கு உதவும்..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தேனம்மை - மஞ்சள் காமாலைக்குச் சிகிட்சை முறை - பகிர்வினிற்கு நன்றி - படங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்து தினமும் சாப்பிட்டு வருவார்கள்... எங்கப்பாவுக்கு அப்படித்தான் செய்தோம்... நல்ல மருந்து... எங்கள் ஊரில் வயல்களில் கீழாநெல்லி அதிகம் இருக்கும்...

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபால் சகோ

    நன்றி வெங்கட்

    நன்றி சீனா சார்

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு நண்பரே வணக்கம்

    பதிலளிநீக்கு
  8. அவர்களின் முகவரி கிடைக்குங்கள அல்லது செல்போன் நம்பர் தர முடியுமா

    பதிலளிநீக்கு
  9. முகவரி அல்லது ஃபோன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)