சனி, 19 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிரா காதலும் பள்ளிக்கூட நட்பும்.

பெண் பதிவர்களில் முக்கியமானவர், புகைப்படப் பதிவுகளுக்காக சிறப்பாக அறியப்பட்டவர் என்னுடைய தோழி ராமலெக்ஷ்மி ராஜன். கவிதை, கதை, கட்டுரைகள்ல அசத்தினாலும் இவரோட புகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கல்லில் வடித்த சிற்பங்கள் மாதிரி. பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார். இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது . அதே சமயம் நம்ம டாபிக்கை தொடவும் வேணும். எனவே இப்பிடி ஒரு கேள்வி கேட்டு பதிலை வாங்கினேன். :)
காமிராவை எப்போலேருந்து காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இது நடக்கும்னு நினைச்சீங்களா..?


வீட்டில பெரியவங்க பலரும் படமெடுப்பதில் ஆர்வமுள்ளவங்களா இருந்ததால இயல்பாவே எனக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்கல்லாம் எடுத்த படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது. +1 படிக்கும் போது யாஷிகா-D-யில் படமெடுக்க ஆரம்பிச்சேன். 120 ரோல் ஃப்லிமில் 12 படமே எடுக்க முடியும். அதுல ஒவ்வொரு படமும் எடுத்து முடிச்சதும் அடுத்த படம் எடுக்க ரோலை திருப்பணும். ஆரம்பத்துல அதுல தப்பு விட்டே 12-ல 4 கதை கந்தலாயிடும்:)!  
இதுக்காகவே காலேஜ் வந்ததும், 36mm கலர் ஃப்லிம் சந்தைக்கு வந்தப்போ, ஆட்டோ வைண்டிங் ரிவைண்டிங் கொண்ட 35mm கேமரா வாங்கிக்கிட்டேன். இந்தக் காலத்துல எல்லாம் மனுஷங்க மனுஷங்க... அதுவும் ஃப்ரென்ட்ஸ், உறவுக்காரங்க, குழந்தைங்க தவிர வேறு மாதிரி எடுக்க முயன்றதேயில்லை, பலரையும் போல. 2005-ல டிஜிட்டல் கேமரா வாங்கின பிறகுதான் இயற்கை காட்சிகள், கட்டிடங்கள், கோவில்கள் என எல்லாவிதமாவும் எடுக்க ஆரம்பிச்சேன். பொதுவா கோணம் எனக்கு ஓரளவு நல்லாவே வரும். அப்பவும் இவ்வளவு தீவிரமா இதுல இறங்குவேன்னு நினைச்சும் பார்த்ததில்லை. 2008-ல் blog ஆரம்பிச்சு இணையத்துக்குள்ள வந்த பிறகுதான் PiT மூலமாய் என் ஆர்வம் வளர்ந்ததுன்னு உங்களுக்கே தெரியுமே:)! 
இணையத்துல கற்றுக்கவும் சரி, எடுத்த படங்களப் பகிரவும் சரி, இருக்கிற வாய்ப்புதான் தொடர்ந்து இதுல ஈடுபட வைக்குது. இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. தொடர்ந்து படிக்கிறதோடு, விடாம எடுத்தபடியும் இருக்கேன்:)!
நீங்க இன்னிக்கும் ரசிச்சுக்கிட்டு இருக்கிற ஃபோட்டோ எது.?
நிறைய சொல்லலாம்:)! குழந்தைகள், பூக்கள், இயற்கை காட்சிகள்னு.. ஆனா குறிப்பிட்டு சொல்லச் சொல்றதால இதைக் கொடுக்கிறேன் டெக்னிக்கலா அத்தனை சிறப்பானதுன்னு சொல்ல முடியாட்டாலும். முதல்ல கையில பிடிச்ச யாஷிகா-டி_யில்.. முதல் ரோலில்.. செல்ஃப் டைமர் போட்டு எடுத்த படம். சொன்னேனே மனுஷங்கள வேறு எதுவும் எடுத்ததில்லைன்னு. அதெல்லாமும் கூட க்ரூப் ஃபோட்டாவாதான் இருக்கும். போஸ் கொடுக்கிற எல்லோரும் அட்டென்ஷனில் நின்னோ உட்கார்ந்தோ நேரா கேமராவதான் பார்ப்பாங்க. கேஷுவலா இருக்கணும்னு திட்டமிட்டு என்னோட கதை, வசனம், டைரக்‌ஷன், கேமரா, கூடவே நடிப்புன்னு க்ளிக்கியதில் நட்புகளால அப்போ பெரிய அளவுல பாராட்டப்பட்ட படம் இது! +1-ல் ஒரு சனிக்கிழமை எங்க வகுப்புக்கு மட்டும் எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருந்த போது கிடைத்த எக்ஸ்ட்ரா நேரத்தில் எடுத்தது. 

அந்த நாள் ஞாபகங்களை அள்ளி வரும் எந்தப் படமும் ஸ்பெஷல்தான் இல்லையா:)? உடன் இருக்கும் அன்புத் தோழி பாலாவுடன் இப்போதும் நட்பு தொடருகிறது. 

---- வாவ் ரொம்ப அழகான ஃபோட்டோ ராமலெக்ஷ்மி. மிக அழகான யதார்த்தமான சிரிப்பு. அன்னிக்கே நீங்க நிரூபிச்சுட்டீங்க அருமையான ஃபோட்டோகிராஃபர்னு . :) இயற்கை கொஞ்சும் சோலையில் பாவாடை தாவணியில் இருவருமே அழகு. உங்க புகைப்படத்தைப் பார்த்த உங்க வீட்டுக்காரர் ” பாவாடை தாவணியில் பார்த்த உருவமா “இந்தப் பாட்டைப் பாடி இருப்பாருன்னு நினைக்கிறேன். :)

தலைப்புல மட்டுமே கொஞ்சம் குறும்பா போட முடிஞ்சுது. ஹாஹா தப்பா இருந்தா மன்னிச்சுருங்க..ராமலெக்ஷ்மி. ஏமாத்துனதுக்கு மன்னிச்சிருங்க மக்காஸ்.  சாட்டர்டே ஜாலி கார்னருக்காக உங்க காதலையும் நட்பையும் பகிர்ந்துகிட்டதுக்கு   நன்றி ராமலெக்ஷ்மி. :)


11 கருத்துகள்:

  1. முதலில் எடுத்த படம் என்றும் மறக்க முடியாதது... அதுவும் இவ்வளவு அழகாக அருமையான இருந்தால்...!

    கண்டிப்பாக பாடல் பாடி இருப்பார்...! வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு...
    சொன்னவருக்கும் கேட்டவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. tha.ma.1

    போட்டோகிராஃபி ஹாபி தான் என்றாலும் அதையும் காதலிக்க ஒரு தனி ஈடுபாடு அவசியமாகிறது. க்ரியேட்டிவிட்டி இருந்தால் நம் திறமைகள் இன்னும் ஒரு பங்கு கூடுதல் ஜொலிக்கும்... எப்போதும் எல்லோரும் செய்ற மாதிரி நாமும் சமைப்பதினால் என்ன நன்மை? அதையே கொஞ்சம் க்ரியேட்டிவிட்டியோட செய்தால்? அதன் முடிவு நமக்கு மட்டுமல்ல நம்மை சேர்ந்தோருக்கும் அற்புதம் என்று சொல்ல வைக்கிறது. அதுபோல ராமலக்‌ஷ்மி மேம் போட்டோகிராஃபி பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். நிறைய படித்தும் இருக்கிறேன். அவர்களைப்பற்றி முழுமையாக அறிய தேனம்மை உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப அவசியமாகிறதுப்பா... அவங்களோட ஸ்பெஷல் இன்றும் விரும்பிய இந்த படம் எங்களுக்கும் இஷ்டமாகிவிட்டது. இயல்பான எந்த ஒரு காட்சியும் படம் பிடிக்கும்போது அது அதீதத்தில் முதன்மையாகிறது.. அவங்களை பேட்டி எடுத்து போட்ட சிறப்பு பேட்டிக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்... ராமலக்‌ஷ்மி மேம் அவர்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

    பதிலளிநீக்கு
  4. அட! நம்ம ராமலக்ஷ்மி!!!!

    பிட் டீச்சராச்சே! திறமையைப் பற்றி சொல்லவும் கூடுமோ!!!!

    பதிலளிநீக்கு
  5. மனம் கொள்ளை கொண்ட கள்ளமில்லாச் சிரிப்பு அழகு. ராமலக்ஷ்மியின் காமிராக்காதல் அறியத்தந்த வாய்ப்புக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
    //கேஷுவலா இருக்கணும்னு திட்டமிட்டு என்னோட கதை, வசனம், டைரக்‌ஷன், கேமரா, கூடவே நடிப்புன்னு க்ளிக்கியதில் நட்புகளால அப்போ பெரிய அளவுல பாராட்டப்பட்ட படம் இது!//
    ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான காதல் கதை....தலைப்பை ஒட்டியே கருத்தும் போட்டாச்சு....

    பதிலளிநீக்கு
  8. பகிர்ந்த தங்களுக்கும், வாழ்த்தியிருக்கும் தோழமைகளுக்கும் என் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  9. ஹி.. ஹி.. தலைப்பைப் பாத்து, ஓடிவந்து... ஏமாந்துட்டேன்... :-))))))

    //இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது//
    உண்மைதான்... அவர்கிட்ட பேசும்போதே நம்மளையும் அறியாம நம்மகிட்ட ஒரு பவ்யம் வந்துடும்... இதுல எங்க குண்டக்க மண்டக்க... :-))))

    பதிலளிநீக்கு
  10. நன்றி தனபால் சகோ

    நன்றி குமார்

    நன்றி மஞ்சு

    நன்றி துளசி

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி ஆசியா

    நன்றி எழில்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஹுசைனம்மா.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)