வெள்ளி, 11 அக்டோபர், 2013

நடுவீட்டுக் கோலமும் பூக்களும் எம்பிராய்டரியில்.

வாசலில் போடும் பொடிக் கோலங்களையும் மாக்கோலங்களையும் துணியில் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும். இதை என் மாமா மகள் வள்ளிக்கண்ணு செயல்படுத்தி இருக்கிறார். அவரது ஒவ்வொரு புடவையும் டிசைனர்வேர்தான். அவரே டிசைன் செய்தது.

அவர் அணிந்து வரும் புடவைகளையும் ரவிக்கைகளையும் பார்த்து வியந்ததுண்டு. விதம் விதமான எம்பிராய்டரிகளில் அசத்தி இருக்கிறார்.


இது நடு வீட்டுக் கோலம். செட்டிநாட்டு வீடுகளில் இந்த நடுவீட்டுக் கோலம் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் போடப்படுவது.

புடவை பார்டரில்  கோலங்கள். சங்கிலித் தையல் கொண்டு பின்னி இருக்கிறார். புள்ளி வைத்துக் கோலம் போடுவதே கஷ்டம். இதில் ஒவ்வொரு புள்ளியாக வைத்து அதன் பின் கோலம் பின்னுதல் மிகக் கடினம்தான். பொறுமை மிக வேண்டும். :)

ரோஜாப்பூக்கள் தையலில்.  ஒவ்வொரு பின்னலுக்கும் பேர் உண்டு. எனக்கு சரிவர ஞாபகமில்லை.

சில தையல்கள் நூலைப் பிளந்து கொடுத்தும் தைக்கப்படுவது. சிலது அடைப்புத்தையல் மற்றும் காம்புத் தையல். லேசி டெய்சி தையல் சில.

தன்னுடைய நேரத்தை வீணே டிவி சீரியல்களில் செலவிடாமல் தையல், நிறைய படித்தல், யோகானம் என்று ப்ளான் செய்து செயல்படுவார். 

ரவிக்கையின் கை மற்றும் முதுகுப் பகுதியில் பார்டர் கோலங்கள்.  இவை நேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள் ஆகும். இதில் அங்கங்கே இரண்டு கலர்கள் உபயோகப்படுத்தி இருக்கிறார்.


இந்த வேலைப்பாடை விட இன்னும் சூப்பராக ஒரு புடவையை எம்ப்ராய்டரி செய்திருக்கிறார். திருமணப் பட்டான அதில் வெண்ணை வழியும் பானையையும் விதம் விதமான பானைகளையும் பார்டரில் எம்பிராய்டரி செய்திருக்கிறார். பார்த்து அசந்தேன். பத்துப் பானைகளும் பத்து வித அலங்காரத்தில். மாவிலையோடு பூரண கும்பம், தீபப் பானை, ஜோடித் தவலை , தண்ணீர்த் தவலை,  பொங்கல் பானை, பால் பானை, கரும்புடன் பானை.. எத்தனை எத்தனை பானையடா.. :)


என்னை விட சில வயது குறைந்தவரான ( நாங்கள் சிறுவயதில் தூக்கிக் கொஞ்சிய குழந்தை ) அவரின் கை வேலைகளைக் கண்டு நான் பெருமிதமும் சந்தோஷமும் அடைந்தேன். தன்னுடைய உடைகளை மிகவும் அழகாக வடிவமைக்கும் அவர் ஈஷா யோகாவும் பயின்று மிகவும் பொலிவுடனும் ப்ரகாசத்துடனும் இருப்பார். நான் மிகவும் ரசித்த அவரது கைவேலைகளை  என் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.


6 கருத்துகள்:

  1. மிகவும் அழகாக உள்ளது... வள்ளிக்கண்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வெண்ணை வழியும் பானை எம்பிராய்டரி போட ரொம்பவே பொறுமை தேவை என் பாராட்டுக்களைச் சொல்லவும்

    பதிலளிநீக்கு
  3. வள்ளிக்கண்ணு அவர்களிடம் என் பாராட்டுகளையும் தெரிவியுங்கள். அனைத்தும் அருமை. புடவை பானை அபாரம்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன்

    நன்றி அருணா

    நன்றி கோவை2தில்லி

    நன்றி ஜீவன் சுப்பு

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)